Breaking News LIVE: மக்களவைத் தேர்தல்.. கூடுதல் பொறுப்பாளர்களை நியமித்த அதிமுக!
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
மக்களவைத் தேர்தலுக்காக அமித் ஷா தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்யவிருந்த நிலையில் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு விட்டதால் ஏப்ரல் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் நடக்கவிருந்த பிரச்சாரம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்காக கூடுதல் பொறுப்பாளர்களை அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் பொய்யான தகவல்களைத் தருகின்றார் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், டி.ஜி.பி-க்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் காணொளி வாயிலாக ஆலாசனை மேற்கொண்டு வருகின்றார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், பாஜகவில் இன்று இணைந்தார்.
அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் சமவெளி பகுதிகளில் காற்றின் ஈரப்பதம் குறையும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
165 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழ்நாடு வந்துள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். இதையடுத்து, மொத்தம் 190 கம்பெனி துணை ராணுவப் படையினர் தமிழ்நாட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
"நெல்லை மக்களவைத் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியதாலோ, எனது மகன் அலெக்ஸ் அப்பாவுக்கு வாய்ப்பளிக்கவில்லை என்பதானாலோ எனக்கு எந்த வருத்தமும் இல்லை; நெல்லை தொகுதியில் மிகப் பெரிய ஜாம்பவான்கள் இருக்கும் போது சில மாதங்களுக்கு முன்பே மாணவரணி செயலாளரான எனது மகனுக்கு போட்டியிட வாய்ப்பு அளிப்பது எப்படி சரியாகும்” - நெல்லையில் சபாநாயகர் அப்பாவு
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் அதிகரிக்கும் என்றும், ஒரு சில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 12ம் தேதி தமிழ்நாடு வருகிறார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.
தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய நடைமுறையை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளதாக ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார். மேலும், வாக்கு இயந்திரங்களில் 2 ஜி தொழில்நுட்பத்துடன் கடந்த முறை செயல்படுத்திய நடைமுறையை மீண்டும் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.
கல்வி பயிலும் நம் குழந்தைகள் ஒவ்வொரு நாளையும் ஆரோக்கியத்துடன் தொடங்குவதை உறுதி செய்யும் நோக்கில் நம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் துவக்கி வைத்த மகத்தான திட்டம், இன்று வளர்ந்த நாடுகளுக்கும் முன்மாதிரியாகத் திகழ்கிறது. ‘எல்லோருக்கும் எல்லாம்’ ஆவணப்பட தொடரின் முதல் பகுதியை வெளியிடுவதில் மகிழ்ச்சி - கனிமொழி கருணாநிதி எம்.பி
Rain In Tamilnadu : தமிழ்நாட்டில் மதியம் ஒரு மணிக்குள் கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 3 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
Gold Rate Today April 3 : ஆபரணத் தங்கம் விலை ரூபாய்.52000-ஐத் தொட்டது
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.52000-ஐத் தொட்டது. சவரனுக்கு ரூ.560 விலை உயர்ந்தது
வெள்ள நிவாரணம் வழங்கவில்லை என மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்துள்ளது.
தைவான் நாட்டின் தலைநகரான தைப்பேவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானது என அந்நாட்டின் மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வயநாடு மக்களவை தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ராகுல் காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். இன்று நண்பகல் 12 மணி அளவில் தேர்தல் அதிகாரியிடம் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்.
மாநிலங்களவை உறுப்பினராக உள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். 33 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி - கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இரு அனிகளும் மோதும் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.
Background
- மக்களவையில் 54 எம்.பி.க்களின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒருவர். கிட்டதட்ட 33 ஆண்டுகளாக மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த அவர் ஒருமுறை கூட மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை. 91 வயதான மன்மோகன் சிங் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். தற்போது அவருடைய இடத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டு, அவர் முதல்முறையாக மாநிலங்களவைக்கு செல்லவுள்ளார்.
- வெள்ளம் நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இன்று தமிழ்நாடு அரசு வழக்கு தொடர இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் கோட்டை மைதானத்தில் வேலூர், அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து அவர் நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது சர்வாதிகாரம் பண்ணும் பாஜகவிடம் நீதி, நேர்மை, நியாயத்தை எல்லாம் எதிர்பார்க்க முடியாது. இதனால் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் நீதிமன்றத்துக்கு சென்று கொண்டிருக்கிறோம் எனவும் அவர் கூறினார்.
- தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அனைத்து மாநில தலைமை தேர்தல் ஆணையர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்துக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தலைமை வகிக்கிறார். ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் இரண்டு வாரங்களே உள்ளதால் முன்னேற்பாடுகள் பற்றிய ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெறுகிறது. காணொலி காட்சி வாயிலாக இந்த கூட்டமானது நடைபெறுகிறது
- ரூ.2000 நோட்டுகளில் 97.69 சதவிகித நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் இங்கு காணலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -