Breaking News LIVE :பிரதமர் மோடி முகத்தில் தோல்வி பயம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
பிரதமர் மோடி முகத்தில் தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
அவதூறு குதிரையில் பா.ஜ.க. பயணிக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரையில் பேசியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் போட்டியிடும் 9 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கச்சத்தீவு வரலாற்றை பிரதமர் மோடி முழுமையாக படிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
கரூரில் அதிகபட்சமாக 4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்று தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவில் அம்மாநில போலீசை பழங்குடியின மக்கள் விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரத்தில் சுயேட்சை வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் என்பவருக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் வழக்கு தொடர்ந்துள்ளது.
டெல்லி மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வரும் ஏப்ரல் 2ம் தேதி இயக்குநர் அமீரை ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளது.
ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்ற பெயரில் இந்தியா கூட்டணி டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டத்தில் 20க்கு மேற்பட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட்: சண்டைசர்ஸ் ஹைதராபாத் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று மாலை 3.30 மணிக்கு அகமதாபாத்தில் மோதுகிறது. டெல்லி கேப்பிடல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் மோதுகின்றன.
புதுச்சேரி இண்டியா கூட்டனியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார், இன்று பிரச்சார வாகனத்தில் ரெய்ன்போ நகர், வெங்கட்டா நகர் பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், ஜீவா நகர் பகுதியில் திடீரென மயங்கி விழுந்தார்.
உடன் இருந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் அவரை பத்திரமாக பிடித்து அருகில் இருந்த கட்சி நிர்வாகி வீட்டில் ஓய்வு எடுக்க அழைத்து சென்றனர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்பட 700 பேர் மீது திருச்சி தில்லை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டதை அடுத்து 5 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
போராட்டம் நடைபெறுவதை ஒட்டி டெல்லியில் ராம்லீலா ஸ்டேடியத்தில் ஒட்டிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் சுமார் 25, 000 பேர் திரள்வார்கள் என்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டினால் அதனை எதிர்த்து அதிமுக- தேமுதிக கூட்டணி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கைதை கண்டித்து டெல்லியில் இன்று இந்தியா கூட்டணி சார்பில் மெகா பேரணி நடைபெற இருக்கிறது.
எதிர்க்கட்சிகள் அடங்கிய I.N.D.I.A கூட்டணியின் தில்லி பிரமாண்ட பொதுக்கூட்டம், "லோக்தந்த்ரா பச்சாவ் பேரணி" என்ற பெயரில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது.
கும்மிடிப்பூண்டியில் சசிகாந்த் செந்திலை ஆதரித்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், மக்களவை தேர்தலில் மோடி 400 இடங்களுக்கு மேல் தோற்கப்போவதைத்தான் அவர் மாற்றி கூறுகிறார் என பேசினார்.
திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து அமைச்சர் ஐ.பெரியசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், கடந்த 10 ஆண்டாக பறிபோன மாநில உரிமைகளை மீட்க மக்கள் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.
டிடிவி தினகரனுக்கு ஓட்டுகேட்டு அவரது மனைவி அனுராதா முதல் முறையாக பிரச்சார களத்தில் இறங்கினார். போடி அருகே உள்ள கிராமங்களில் தனது கணவர் டிடிவி-க்காக அனுராதா வாக்கு சேகரித்தார்.
Background
நாடுமுழுவதும் எங்கு பார்த்தாலும் மக்களவை தேர்தலுக்கான பணிகளே மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளுக்கு எந்த சின்னங்கள் என்று நேற்று வரை தெரியாமல் இருந்த நிலையில், மதிமுகவுக்கு தீப்பெட்டி, விசிகவுக்கு பானை மற்றும் ஓபிஎஸுக்கு பலாப்பழ சின்னங்களை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.
இப்படி தமிழ்நாட்டில் ஒருபுறம் நிகழ்வுகள் நடக்க, ரூ.1823 கோடி வருமான வரி அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகிறது. இதுபோக, கெஜ்ரிவால் கைதை கண்டித்து டெல்லியில் இன்று இந்தியா கூட்டணி மெகா பேரணியை நடத்துகிறது.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் திருப்பதை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் விறுவிறுக்கு மத்தியில் ஐபிஎல் 2024ம் இந்தியாவில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ஒரு போட்டிகள் நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோத இருக்கின்றன. மற்றொரு போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோத இருக்கின்றன.
நேற்றைய போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை பந்தாடி வெற்றியை ருசித்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் லக்னோ அணிக்காக நேற்றைய போட்டியில் அறிமுகமான மயாங்க் யாதவ் 150 கி.மீ வேகத்தில் பந்துவீசி முக்கிய விக்கெட்களை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -