Breaking News LIVE :சென்னை திரிசூலம் மலை அருகே தீ விபத்து - தீயை அணைக்க போராட்டம்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
சென்னை திரிசூலம் மலை அருகே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதை அணைக்க தீயணைப்புத் துறையினர் தீவிரமாக போராடி வருகின்றனர்.
சென்னையில் கேளிக்கை விடுதி விபத்து தொடர்பான வழக்கில் அந்த விடுதி உரிமையாளர் சரண் அடைந்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சி இருண்ட கால ஆட்சி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
விதிகளை மீறி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டதாக அண்ணாமலை, தங்கர் பச்சான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கருப்பு பணத்தை வெள்ளையாக்கவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்று உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா பேசியுள்ளார்.
வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விளக்கம் அளித்துள்ளது.
வேலூர் தொகுதியில் போட்டியிடும் மன்சூர் அலிகானுக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
வி.சி.க.விற்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கமல்ஹாசன் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அங்கு கலந்து கொண்டவர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக வீடியோ வெளியான நிலையில், பெயர் மற்றும் முகவரி தெரியாதவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க.வுக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கரூரில் அதிகபட்சமாக 56 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.
வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் நிறைவு பெற்றுள்ளது.
ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்கு மறுக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். ரயில்வே தொழிலாளர்களுக்கு தபால் வாக்கு வழங்க 2021ல் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது என தெரிவித்திருந்தார்.
சுதந்திரம் அடைந்ததில் இருந்து 67 அண்டுகளாக 2014 வரை நாட்டின் மொத்த கடன் ரூ. 55 லடசம் கோடி. கடந்த 10 ஆண்டு கால கோடி ஆட்சியின் மட்டும் நாட்டின் கடன் ரூ. 205 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
”விசிக வேட்பாளர் ரவிக்குமாருக்கு பானை சின்னத்தில் வாக்களிக்க கேட்டு வந்துள்ளேன். இது பிரச்சார கூட்டமா? பொதுகூட்டமா? வெற்றி விழா கூட்டம் போன்று உள்ளது என பேசினார்
மறைந்த நடிகர் டேனியல் பாலாஜிக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் நடிகர் விஜய் சேதுபதி.
சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனை மீண்டும் வெற்றி பெற வைக்க திமுக உடன் பாஜக டீலிங் வைத்திருக்கிறது. பாஜகவுக்கு தமிழகத்தில் பெரிய வளர்ச்சி என்று எதுவும் இல்லை. அவை எல்லாம் கட்டமைக்கப்பட்ட பிம்பங்கள்தான்: தடா பெரியசாமி
மறைந்த முன்னாள் பிரதமர்களான நரசிம்ம ராவ், சரண் சிங் மற்றும் பசுமை புரட்சியின் தந்தை எம்.எஸ். சுவாமிநாதன், பீகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாக்கூர் உள்ளிட்டோருக்கு பாரத ரத்னா விருதை அறிவிக்கப்பட்டதையடுத்து, அவர்களது குடும்ப உறுப்பினரிடம் விருதை வழங்கினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலோட்டுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது
"மு.க.ஸ்டாலின் நினைத்திருந்தால் வன்னியர்களுக்கு எப்போதோ இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும். ஆனால், பிற சமூகங்களின் கோரிக்கைகளைக் கேட்டுக் கேட்டு நிறைவேற்றும் மு.க. ஸ்டாலினுக்கு வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மட்டும் மனம் வரவில்லை. ஆனால், மேடைகளில் மட்டும் சமூகநீதியில் அக்கறைக் கொண்டவர் போல நடிக்கிறார். மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமூகநீதியில் உண்மையாகவே அக்கறை இருந்தால் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கி விட்டு, தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி விட்டு, அதன்பிறகு சமூகநீதி பற்றி பேச வேண்டும்.
ஒருவரை ஒரு முறை ஏமாற்றலாம்... சிலரை சில முறை ஏமாற்றலாம். ஆனால், வன்னியர்களை ஒவ்வொரு முறையும் ஏமாற்ற முடியாது. வன்னியர் சமூகத்திற்கு இழைத்த துரோகங்களுக்காக திமுகவுக்கு வரும் தேர்தலில் பாடம் புகட்ட மக்கள் தயாராகி விட்டனர். அதை திமுக விரைவில் உணரும்" என ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார்
“பொய்களை மட்டுமே பேசுவேன் என்று சபதமெடுத்து, பிரதமர் பதவிக்கே இழுக்கு ஏற்படுத்தும் வகையில் மோடி செயல்படுகிறார்!” - புரசைவாக்கம், மண்ணடி ஆகிய பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன்..
மத்திய பாஜக அரசை கண்டித்து நாடு முழுவதும் இன்று மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் இன்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. மாநில மற்றும் மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
CM Stalin Campaign In Salem : சேலம் அக்ரஹாரம் கடை வீதி பகுதியில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், திமுக வேட்பாளர் டி எம் செல்வகணபதி ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்
”பணமோசடி தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கங்களை கவிழ்க்கும் பாஜக ஃபார்முலா வெற்றி பெறாததால் இன்று கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். நாளை மம்தாவை பானர்ஜி, மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன் என அனைத்து எதிர்க்கட்சிகளை சேர்ந்த முதலமைச்சர்களையும் சிறையில் அடைத்து அவர்களின் ஆட்சியை கவிழ்ப்பார்கள். சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை பாஜக பயன்படுத்திக்கொள்கிறது. தேர்தலில் வெற்றி பெறும் மாநிலங்களில் மட்டுமின்றி, தோற்கும் மாநிலங்களில் கூட எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்கிறார்கள். பல மாநிலங்களில் ஆபரேஷன் தாமரை நடந்துள்ளது. யார், எப்போது, எங்கு, எப்படி பணம் கொடுத்தார்கள் என்பதை வெளிப்படுத்துவோம். பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என்பது அனைவரும் அறிந்ததே” என ஆம் ஆத்மி அதிஷி சாடியுள்ளார்.
Daniel Balaji Passes away : டேனியல் பாலாஜி உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன் மற்றும் கெளதம் வாசுதேவ் மேனன்
நடிகர் டேனியல் பாலாஜியின் கண்கள் தானம் செய்யப்பட்டு அஞ்சலிக்காக புரசைவாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஓட்டேரி மின் மயானத்தில் டேனியல் பாலாஜி உடல் தகனம் செய்யப்படுகிறது.
நடிகர் டேனியல் பாலாஜி நேற்று இரவு மாரடைப்பால் மரணமடைந்தார். வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வடசென்னை உள்ளிட்ட பல்வேறு படங்களில் கவனிக்கத்தக்க வேடங்களில் நடித்துள்ளார்
Background
நாடாளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை அனைத்து கட்சி தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேட்புமனு தாக்கல் 27 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் அதன் மீது பரிசீலனை நடத்தப்பட்டது. பல்வேறு இடங்களில் வாக்குவாதங்கள், குழப்பங்களுக்கு மத்தியில் பல முக்கிய வேட்பாளர்களிடன் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. சில நூறு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. கடந்த 20ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை நடைபெற்ற வேட்புமனு தாக்கலில், மாநிலத்தில் உள்ள 39 தொகுதிகளில் போட்டியிட 1,403 வேட்பாளர்கள் 1,749 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அதைதொடர்ந்து இன்று தொகுதிவாரியாக இறுதி வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது.
இந்நிலையில் அனைத்து கட்சிகள் தரப்பில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சேலம் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். சேலம் அக்ரஹாரம் கடை வீதி பகுதியில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி எம் செல்வகணபதி ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அக்ரகாரம் கடை வீதிகளில் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பஅங்கு இருந்த மக்கள் அனைவரும் முதலமைச்சருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் அப்பகுதியில் இருந்த டீ கடை ஒன்றில் அவர் அமர்ந்து டீ குடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
இது ஒரு பக்கம் இருக்க இந்தியாவில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பரபரப்பான அரசியல் சூழலில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியினர் தரப்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. டெல்லியில் இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற சூழலில் நாட்டில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காணலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -