Breaking News LIVE :அமைச்சர் சி.வி.கணேசன் முன்னிலையில் சண்டையிட்ட வி.சி.க. நிர்வாகிகள்

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்

ஆர்த்தி Last Updated: 29 Mar 2024 08:57 PM
அமைச்சர் சி.வி.கணேசன் முன்னிலையில் சண்டையிட்ட வி.சி.க. நிர்வாகிகள்

அமைச்சர் சி.வி.கணேசன் முன்னிலையில் வி.சி.க. நிர்வாகிகள் சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் துரோகி எடப்பாடி பழனிசாமி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டின் துரோகி எடப்பாடி பழனிசாமி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

மக்களவைத் தேர்தலை சாதாரண தேர்தலாக நினைக்கக்கூடாது - ப.சிதம்பரம்

மக்களவைத் தேர்தலை சாதாரண தேர்தலாக நினைக்கக்கூடாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியுள்ளார்.

மோடி ஆதிக்கத்தில் இருந்து நாடு விடுபட வேண்டும் - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

மோடி ஆதிக்கத்தில் இருந்து நாடு விடுபட வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியுள்ளார்.

மதுரை அருகே 5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் - பறக்கும் படை விசாரணை

மதுரை அருகே 5 கிலோ தங்க நகைகள் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பீகாில் இந்தியா கூட்டணியிடையே எட்டிய தொகுதி உடன்பாடு

பீகார் மாநிலத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கிடையே தொகுதி உடன்பாடு எட்டியது.  ஆர்ஜேடி 26 தொகுதிகளிலும், காங்கிரஸ் 9 தொகுதிகளிலும், இடது சாரிகள் 5 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. 

மக்களவை தேர்தல் பணிக்கு வராத 1,500 ஊழியர்களுக்கு நோட்டீஸ்

மக்களவை தேர்தல் பணிக்கு வராத 1,500 ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்தார். 

Kangana Ranaut Road Show : நான் நடிகையோ, ஸ்டாரோ இல்லை.. உங்களின் சகோதரி, உங்கள் மகள் - ஹிமாச்சல் மண்டி தொகுதியில் கங்கனா ரனாவத் பிரச்சாரம்

Whatsapp Number - Arvind Kejriwal : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கான செய்திகளை, ஆசிகளை வழங்க வாட்சப் எண்ணை அறிவித்தார் சுனிதா கெஜ்ரிவால்

கைது செய்யப்பட்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டிருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கான செய்திகளை மக்கள் பரிமாறிக்கொள்வதற்காக வாட்சப் எண்ணை அறிவித்தார், அரவிந்த் ஜெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால்





Breaking News LIVE : திருவள்ளூர் தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து பொன்னேரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம், மத்திய பாஜக அரசை தோற்கடிக்க தமிழ்நாட்டு மக்கள் தயாராகிவிட்டனர் என பேசினார். 

The Goat Life Aadu Jeevitham : ஆடு ஜீவிதம் திரைப்படத்துக்கு குவிந்து வரும் ஆதரவுக்கு மிக்க நன்றி : ப்ரித்விராஜ் சுகுமாறன் இன்ஸ்டா பதிவு

Breaking News LIVE : மக்களவை தேர்தல்: ஏப்ரல் 19 ஆம் தேதி ஊதியத்துடன் விடுமுறை அளிக்க உத்தரவு..!

மக்களவை தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது. வாக்குப்பதிவு நாளன்று தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்க அறிவுறுத்தல். 

Breaking News LIVE : தூத்துக்குடியில் இன்று 4 செ.மீ மழைப்பதிவு

தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்த நிலையில் இரண்டாவது நாளாக இன்று அதிகாலை முதல்  கன மழை பெய்து வருகிறது இதன் காரணமாக  குளிர்ந்த சூழ்நிலை நிலவி வருகிறது இதன் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாநகரில் கடந்த சில நாட்களாக வானிலை மையம் வெயில் கொடுமை அதிகரிக்கும் என அறிவித்ததை தொடர்ந்து பகலில் கடும் வெயில் அடித்தது இதன் காரணமாக பொதுமக்கள் பாதிப்படைந்தனர். 


 இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை முதல் பலத்த காற்று வீசிய நிலையில் நேற்று அதிகாலை முதல் பரவலாக தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. ஆனால் பகலில் நல்ல வெயில் வாட்டி எடுத்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை 2மணி முதல் விட்டு விட்டு மழை பெய்ந்து வந்த நிலையில் காலை 4;30 மணி முதல் கனமழை பெய்தது

பில்கேட்ஸுக்கு தூத்துக்குடி முத்துக்களை பரிசாக அளித்தார் பிரதமர் மோடி

Latest Gold Silver Rate: வரலாற்றில் முதன்முறையாக ரூ.51,000 கடந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.1,120 அதிகரிப்பு..

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1120 அதிகரித்து ரூ. 51,120 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு  ரூ.140 அதிகரித்து  ரூ.6,390  விற்பனை செய்யப்படுகிறது.


24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.54,880 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,860 ஆகவும் விற்பனையாகிறது.


 

Breaking News LIVE : ரூ.51,000 கடந்து விற்பனையாகும் தங்கம்..!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1120 அதிகரித்து ரூ. 51,120 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு  ரூ.140 அதிகரித்து  ரூ.6,390  விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.54,880 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,860 ஆகவும் விற்பனையாகிறது.

Coimbatore Annamalai - Singai Ramachandran : அண்ணாமலை தொடர்ந்து பொய்கள் சொல்பவர்.. பட்டியல் போட்ட அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்

Coimbatore Annamalai - Singai Ramachandran : அண்ணாமலை தொடர்ந்து பொய்கள் சொல்பவர்.. பட்டியல் போட்ட அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்





Breaking News LIVE : மக்களவை தேர்தல்: ஈரோட்டில் இன்று பரப்புரை தொடங்குகிறார் கமல்ஹாசன்..!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று ஈரோட்டில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார். திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Breaking News LIVE : ஐபிஎல் 2024: பெங்களூரு - கொல்கத்தா அணிகள் இன்று மோதல்..!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 10வது போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இன்று மோதுகிறது. இரு அணிகளும் மோதும் போட்டி பெங்களூருவில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. 

Annamalai : பாஜக எப்போதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. பிரதமர் மோடி மக்களுடன் எளிமையாக இருக்கிறார் - அண்ணாமலை

Breaking News LIVE : ரூ.1,700 கோடி வரி செலுத்த காங்கிர்ஸ் கட்சிக்கு நோட்டீஸ்..!

4 நிதி ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி வரி செலுத்தவில்லை என கூறி, ரூ.1,700 கோடி வரி செலுத்த வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2017-18 முதல் 2020-21 வரை முறையாக வரி செலுத்தாததால் அபராதத்துடன் ரூ.500 கோடிக்கு அதிகமாக வரி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Narendra Modi - Bill Gates : டிஜிட்டல் புரட்சி குறித்து பிரதமர் - பில்கேட்ஸ் உரையாடல்.. நமோ ட்ரோன் திதி குறித்து பேசிய பிரதமர் மோடி

Breaking News LIVE : சென்னையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளிக்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்த போது அது வெறும் புரளி என தெரியவந்தது. 

Breaking News LIVE : கூட்டணி தர்மத்தை கடைப்பிடிக்கும் கட்சி அதிமுக - ஈபிஎஸ்

கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கும் கட்சி அதிமுக என எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். பிரச்சாரத்தின் போது மோடி, மத்திய அரசை விமர்சிக்காதது குறித்து விளக்கம். 

Breaking News LIVE : சென்னை: மேற்கூரை இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழப்பு - வழக்குப்பதிவு..

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் இருக்கும் கேளிக்கை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் அமிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Background

நாடாளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை அனைத்து கட்சி தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேட்புமனு தாக்கல் 27 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் நேற்று அதன் மீதான பரீசிலனை நடைபெற்றது. இதில் நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்ட பின் ஏற்கப்பட்டது. அதேபோல் கோவை மக்களவை தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேட்புமனு ஏற்கக்கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அவரது வேட்புமனு ஏற்கப்பட்டது. மேலும் நாளை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. 


இந்நிலையில் தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகள் தரப்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரச்சார கூட்டத்தில் ஒவ்வொரு கட்சியும் தனக்கு எதிராக களத்தில் இருக்கும் கட்சியினரை சாடி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மக்களவை தேர்தலை முன்னிட்டு கட்சிகள் தரப்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி காங்கிரஸ் கட்சி தரப்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என காங்கிரஸ் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா தெரிவித்துள்ளார். 


டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைதான முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேலும் 4 நாட்கள் காவல் நீடிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லி முதலமைச்சர் கைதானதை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி தரப்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அவரது இல்லம், அலுவலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் கெஜ்ரிவால் கைதுக்கு நியாமான விசாரணை நடத்த வேண்டும் என அமெரிக்க கருத்து தெரிவித்துள்ளது. இது போன்ற சூழலில் இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காணலாம்.. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.