Breaking Tamil LIVE: வாக்கு இயந்திரங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க. மனு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
காஷ்மீரில் உள்ள சர்பால் பகுதியில் பெரும் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பனிச்சரிவு வனப்பகுதியில் பெரியளவில் சேதம் ஏற்படவில்லை.
வாக்கு இயந்திரங்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
வடதமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் மே 2 மற்றும் 3ம் தேதிகளில் வெப்ப அலை வீசும். வட தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நடிகர் பிரகாஷ் ராஜூக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். அதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசனுக்கு மார்க்ஸ் மாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வு, வழக்கை வருகின்ற மே 6ம் தேதிக்கு ஒத்துவைத்து உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை இன்று பதில் மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சேர்ந்த திலீப் என்ற வாலிபர் அனைவரையும் கவரும் வகையில் சிறிய சைக்கிளில் தலைக்கவசத்தை அணிந்து கொண்டு சைக்கிளை ஓட்டி செல்கிறார். இதனை அனைவரையும் திரும்பி பார்க்கும் வகையில் இருந்தது.
இது ஒருபுறம் நகைப்புக்குரியதாக இருந்தாலும்கூட பலரும் இதனை வரவேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 குறைந்துள்ளது. இதையடுத்து, ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 6, 740க்கு சவரன் 53,920க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனுதாக்கல் செய்துள்ளது.
திருச்சியில் மணல் திருட்டு தொடர்பாக செய்தி வெளியிட்ட நாளிதழ் செய்தியாளர் நாகேந்திரனை தாக்கிய பாஜக இளைஞரனி செயலாளர் விஜி உள்ளிட்ட 5 பேரை மைசூர் போலீசார் கைது செய்தனர். காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என வாட்ஸ் அப்பில் நாகேந்திரன் செய்தி வெளியிட்டுள்ளார்.
உதகையில் 126 வது மலர் கண்காட்சி வரும் மே 10 ஆம் தேதி தொடங்கி மே 20 ஆம் தேதி வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் நடைபெறும் கண்காட்சியை காண பல மாவட்டங்களில் இருந்து மக்கள் வருகை தருவது வழக்கம்
இன்று அதிகாலை இந்திய எல்லைப் பகுதியான மியான்மரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் 4.2 பதிவாகியது.
வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் கோயம்பேடு காய்கறி சந்தையில், காய்கறி வரத்து குறைந்துள்ளது. இதனால் காய்கறி விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பீன்ஸ் ரூ.140 வரை விற்பனை செய்யப்படுகிறது.
தமிழக வட உள் மாவட்டங்களான திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் என்றும், வெப்ப அலை வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Background
தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் தொடங்கியது முதலே கடுமையான வானிலை நிலவுகிறது. வழக்கமாக மே மாதம் வரும் அக்னி நட்சத்திர காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதலே வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் கரூர், ஈரோடு, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மண்டையை பிளக்கும் அளவு வெப்பநிலை பதிவாகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
வரும் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை வெப்பநிலை மேலும் அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக வட உள் மாவட்டங்களான திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவில் இரண்டு கட்டங்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இதைதொடர்து கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த, 95 தொகுதிகளில் வரும் மே 7ம் தேதி மூன்றாம்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் பாஜக பேரணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி, “ “மக்களின் சொத்துக்களை அதிகரிக்கும் விதமாக பாஜக செயல்படுகிறது. ஆனால் காங்கிரஸை சேர்ந்த ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி இருவரும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால், நாட்டை எக்ஸ்ரே செய்வோம் என்று பேசுகின்றனர். நான் உயிருடன் இருக்கும் வரை காங்கிரஸின் எண்ணம் நிறைவேற அனுமதிக்க மாட்டேன் என எச்சரிக்கை விடுக்க விருமுகிறேன்” என கூறியுள்ளார். இதுபோன்ற சூழலில் நாட்டில் நடக்கும் பல்வேறு விஷயங்கள் குறித்து உடனுக்குடன் காணலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -