Breaking Tamil LIVE: ஆபாச வீடியோ விவகாரம்.. முன்னாள் பிரதமரின் பேரனுக்கு எதிராக வழக்குப்பதிவு!
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா, பல பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பச்சைத் துரோகம் செய்வதாக வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். வெள்ள பாதிப்புக்கு தமிழ்நாடு அரசு ரூ. 37, 907 கோடி கேட்ட நிலையில் மத்திய அரசு வெறும் ரூ. 276 கோடியை ஒதுக்கியது.
கனடாவில் நடந்த கேண்டிடேட் செஸ் தொடரை வென்று உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு குகேஷ் தகுதிபெற்றார். இதையடுத்து, உலக செஸ் சாம்பியன்சிப் போட்டிக்கு தகுதி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த குகேஷ் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இவருக்கு தமிழ்நாடு சார்பில் ரூ. 75 லட்சம் ஊக்கத்தொகையா வழங்கப்பட்டது.
கனடாவில் நடந்த கேண்டிடேட் செஸ் தொடரை வென்று உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு குகேஷ் தகுதிபெற்றார். இதையடுத்து, உலக செஸ் சாம்பியன்சிப் போட்டிக்கு தகுதி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த குகேஷ் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இவருக்கு தமிழ்நாடு சார்பில் ரூ. 75 லட்சம் ஊக்கத்தொகையா வழங்கப்பட்டது.
ஈரானால் சிறைபிடிக்கப்பட்ட 16 இந்திய மாலுமிகள் விரைவில் விடுதலை ஆகின்றனர். கடந்த ஏப்ரல் 13ம் தேதி 17 இந்திய மாலுமிகளுடன் கப்பலை சிறைபிடித்தது ஈரான்.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகளை கட்டுவதற்காக ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரு ஆண்டுகள் ஆகியும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் புதிய வகுப்பறைகள் கட்டப்படவில்லை.
அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருக்குமானால், அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பொய்க்கணக்கு காட்டுவதை விடுத்து வகுப்புக்கு குறைந்தது ஓர் ஆசிரியரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் - ராமதாஸ் அறிக்கை
சென்னை - பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் நாளை விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதையடுத்து, நாளை காலை 10.40 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மறுநாள் (ஏப்.30) காலை 9 மணி முதல் மே ஒன்றாம் தேதி காலை 9 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தம்
Southern China Tornado : தெற்கு சீனாவில் சூறாவளி புயல் : 5 பேர் மரணம்.. 33 பேருக்கு காயம்.
6 நாடுகளுக்கு 39 ஆயிரத்து 156 மெட்ரிக் டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. உள்நாட்டு விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு தடை விதித்தது. இந்தநிலையில் வெங்கதேசம், அமீரகம், பூடான், பஹ்ரைன், மொரீசியஸ், இலங்கைக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய அனுமதி.
PM Modi In Karnataka : வட கர்நாடகாவில் நான்கு இடங்களில் பேரணியை துவக்கி வைத்து பேசும் பிரதமர் மோடி
ராஜாவாக ராஜஸ்தான்
தமிழ்நாடு, உள் கர்நாடகா, ஜார்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் கடும் வெப்ப அலை வீச வாய்ப்பு இருப்பதாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
AAP Walkathon walk for Kejriwal Campaign : அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் வைத்துவிட்டால் பரப்புரை செய்யமுடியாது என நினைக்கிறார்கள். டெல்லி மக்கள் கெஜ்ரிவாலுக்கு பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள் - அதிஷி
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Background
- மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா அதன் நிறைவு பகுதியை எட்டியுள்ளது. கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சியில் திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபம் என முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் வெகுசிறப்பாக நடைபெற்றது. தேனூர் மண்டபத்தில் இருந்து மீண்டும் தனது இருப்பிடம் நோக்கி கள்ளழகர் புறப்பட்டார். இன்று காலை அழகர்கோவில் வந்து சேர்ந்த கள்ளழகருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பக்தர்கல் கோவிந்தா! கோவிந்தா! என்று கோஷங்கள் முழங்க மலர்களை தூவி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
- ஷாங்காயில் நடந்து வரும் உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில்ஆசிய விளையாட்டு சாம்பியனான ஜோதி சுரேகா வென்னம் தலைமையிலான இந்திய வில்வித்தை வீரர்கள் 4 தங்க பதக்கங்களை வென்றுள்ளனர். உலகக்கோப்பை வில்வித்தையின் முதற்கட்ட போட்டிகள் ஏப்ரல் 23 ஆம் தேதி 28 ஆம் தேதி வரை ஷாங்காயில் நடைபெறுகிறது.
- மக்களவை தேர்தலின் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 7 ஆம் தேதி நடைபெறுகிறது. இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் 2 கட்ட வாக்குப்பதிவு மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் வித்தியாசமான பிரச்சார யுக்திகளை தலைவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -