Breaking LIVE :சென்னையில் ரூ.7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
Pot - VCK : விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்க மறுப்பு.
விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக இன்றே முடிவெடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் விசிகவுக்கு பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது
Sadhguru Discharged : டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சத்குரு அவர்கள் இன்று (மார்ச் 27) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
சில வாரங்களாக கடும் தலைவலிக்கு உள்ளான சத்குருவிற்கு மார்ச் 17-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மிகவும் ஆபத்தான அந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு சத்குரு அவர்கள் மருத்துவர்கள் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக உடல்நலனில் முன்னேற்றம் கண்டார். கிட்டத்தட்ட 10 நாட்கள் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
முன்னதாக, அப்போலோ மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குனர் டாக்டர் சங்கீதா ரெட்டி அவர்கள் சத்குருவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில் “சத்குரு அவர்கள் உடல் நலம் தேறி வருவது குறித்து மருத்துவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அவர் குணமடையும் அதே வேளையில் அவருடைய உற்சாகத்தை அப்படியே தக்கவைத்து கொண்டுள்ளார். உலகளாவிய நன்மைக்கான அவரது அர்ப்பணிப்பு, அவருடைய புத்தி கூர்மை மற்றும் அவரின் நகைச்சுவை உணர்வு அனைத்தும் அப்படியே சிறப்பாக உள்ளது. அவருடைய உடல்நலம் குறித்து விசாரிக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு இது ஒரு நற்செய்தியாக இருக்கும் என நினைக்கிறேன்” என்றார்.
சத்குருவிற்கு சிறப்பான சிகிச்சை அளித்த டாக்டர் வினித் சூரி, டாக்டர் பிரணவ் குமார், டாக்டர் சுதீர் த்யாகி, டாக்டர் எஸ். சாட்டர்ஜீ மற்றும் அப்போலோ மருத்துவமனையின் ஒட்டு மொத்த குழுவிற்கும் ஈஷா அறக்கட்டளை மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. அதுமட்டுமின்றி, இந்த சவாலான சூழலில் உலகெங்கும் இருந்தும் சத்குருவிற்கு அன்பையும் ஆதரவையும் அளவற்ற வகையில் வெளிப்படுத்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் ஈஷா அறக்கட்டளை மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
சென்னையில் ரூ.7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல். தனது 14 வயது மகளுடன் துபாயில் இருந்து சென்னை வந்திறங்கிய 43 வயது பெண்மணியிடம் இருந்து ரூ.7 கோடி மதிப்பிலான தங்கத்தைப் பறிமுதல் செய்து, நீதிமன்ற காவலில் அடைத்தது சுங்கத்துறை
அமலாக்கத்துறை காவலில் உள்ள டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு உடல்நிலை பாதிப்பு என ஆம் ஆத்மி கட்சி தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. முதலமைச்சர் கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவு ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருப்பூர் மக்களவை தொகுதியில் இதுவரை 25 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிட 33 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
குறுகிய காலமே இருந்தாலும், என் சின்னம் மக்கள்கிட்ட போய் சேர்ந்துடும். சீமான், திருமாவளவன், வைகோவுக்கு கேட்ட சின்னம் கிடைக்கல. ஜி.கே வாசனுக்கு உடனே கிடைக்குது. நான் தப்பிச்சு ஓடணும்னு நினைக்கிற விலங்கு. என்னுடைய வேகம் அதிகம் - நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்
தமிழ்நாட்டில் 648 நட்சத்திர பேச்சாளர்கள் பிரச்சாரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 648 நட்சத்திர பேச்சாளர்கள் பிரச்சாரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
திருச்சி ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ பேட்டி: தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் கொடுக்க மறுத்தாலும் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வரும் போது அவர்கள் பம்பரம் சின்னம் ஒதுக்குவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. ஒரு வேளை அவர்களும் ஒதுக்கவில்லை என்றால் வேறு சின்னத்தில் போட்டியிடுவோம்.
பா.ஜ.க வை எதிர்க்கும் இயக்கங்களை முடக்கவே இது போன்று வருமான வரி துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையத்தை பா.ஜ.க அரசு பயன்படுத்துகிறது.
பானைச் சின்னம் கோரி விசிக தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பம் செய்திருந்தது. அதற்கான பதில் ஏதும் வராத நிலையில், தற்போது பானைச் சின்னம் ஒதுக்க வேண்டி வழக்கு தொடர்ந்துள்ளது
கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கிராந்திகுமார் பாடியிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
அமைச்சர்கள் சக்கரபாணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கரூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் அப்துல்லா எம்.பி ஆகியோருடன் சென்று, கரூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கவேலிடம் ஜோதிமணி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
மக்களவை தேர்தலுக்கான பாமக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. தியாகராஜர் நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் பாமக நிறுவனர் ராமதாஸ். அதில், 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பை ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்த பாமக வலியுறுத்தியுள்ளது.
புனித வெள்ளி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக்கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து தென்மாவட்டங்களின் பல்வேறு இடங்களுக்கு வரும் 28 அன்று 505 பேருந்துகளும், 29 அன்று 300 பேருந்துகளும், 30 அன்று 345 பேருந்துகளும் இயக்கம். கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர் ஆகிய இடங்களுக்கு 28, 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் 120 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூரு திரும்பவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என, அக்கட்சி வழக்கறிஞர்களுக்கு தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணை பிற்பகலில் நடைபெற உள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ. 49,720 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ரூ.6,215 விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.53,480 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,685 ஆகவும் விற்பனையாகிறது.
தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கரூர் மக்களவை தொகுதி வேட்பாளர் செ.ஜோதிமணி உள்ளிட்டோர் ரிப்பன் வெட்டி தேர்தல் பணி மனையை திறந்து வைத்தனர்.
கரூர் மக்களவை காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எஸ். ஜோதிமணி இன்று காலை 11 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
Background
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வரும் ஏபரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் அனைத்து கட்சிகள் தரப்பில் பிரச்சாரம் மேர்கொள்ளப்பட்டு வருகிறது.
கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் வேட்பமனு தாக்கல் செய்து வருகின்றனர். வேட்பமனு தாக்கல் கடந்த 20 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்று முடிவடைகிறது. நேற்று முன் தினம் பங்குனி உத்திரம் நல்ல நாள் என்பதால் பெரும்பாளான கட்சி வேட்பாளர்கள் வேட்பமனு தாக்கல் செய்தனர். இதனால் நேற்று முன் தினம் மட்டும் 405 வேட்பாளர்கள் வேட்ப மனு தாக்கல் செய்தனர். சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டில் இருக்கும் இதர தொகுதிகளிலும் வேட்பாளர்கள் வேட்பமனு தாக்கல் செய்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் இதுவரை 700 பேர் வேட்பமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 100க்கும் மேற்பட்டோர் பெண்கள் ஆவர். மேலும் பாமக தரப்பில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி மதுபானக் கொள்கை வழக்குடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களான மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். விசாரணை அமைப்பு மற்றும் டெல்லி உயர் நீதிமன்றத்தால் அவருக்கு ஒன்பது சம்மன்கள் அனுப்பப்பட்டும் அவர் ஆஜராகாமல் இருந்தார். இந்நிலையில், அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
ராமகிருஷ்ணா மிஷன் தலைவர் சுவாமி ஸ்மரணானந்தா தனது 95வது வயதில் வயது மூப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். அவரது மறைவிற்கு பிரதமர் மோடி, சுவாமி ஸ்மாரானந்தா அவரது வாழ்க்கையை ஆன்மீகத்திற்காக அர்ப்பணித்தார் என எக்ஸ் தள பக்கத்தில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இன்றைய தினத்திற்கான முக்கிய நிகழ்வுகளை காணலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -