Breaking LIVE : நீங்கள் விஸ்வகுருவா, மவுனகுருவா என மக்கள் கேட்கிறார்கள்.. பிரதமரை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
”நீங்கள் விஸ்வகுருவா, மவுனகுருவா என மக்கள் கேட்கிறார்கள். பிரதமர் மீனவர்களை காக்கத் தவறிவிட்டார். எந்த முகத்தை வைத்துக்கொண்டு ஓட்டு கேட்க வருகிறார். கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது வேலைவாய்ப்பின்மை நிலவி வருகிறது” : பிரதமரை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்
காமெடி நடிகர் சேஷூ காலமானார்! 10' நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லொள்ளு சபா, வடக்குப்பட்டி ராமசாமி புகழ் நடிகர் சேஷூ காலமானார்! இலவச திருமணங்கள், ஏழைகளுக்கு உதவிகள் என இந்த சமூகத்திற்கு பேருதவி செய்துக் கொண்டிருந்த நடிகர் சேஷூ என்பது குறிப்பிடத்தக்கது
Vijayakanth Son Vijaya Prabhakaran Asset Declaration : ரூ.17.95 கோடி சொத்து மதிப்பைத் தாக்கல் செய்தார் விஜய பிரபாகரன்
நடிகை - மக்களவை தேர்தல், விருதுநகர் பாஜக வேட்பாளரான ராதிகா சரத்குமார் தன் சொத்து மதிப்பை ரூ.54 கோடியாக தாக்கல் செய்துள்ளார். 61 வயது நடிகரான இவர், 750 கிராம் தங்க நகைகள் இருப்பதையும் குறிப்பிட்டுள்ளார். ராடான் மீடியா வொர்க்ஸின் எம்.டியாக இருப்பதையும் தெரிவித்துள்ளார். இவருக்கு எதிராக களம்காணும் அதிமுக - தேமுக கூட்டணி வேட்பாளர், 33 வயது விஜய பிரபாகரன் ரூ.17.95 கோடி சொத்து மதிப்பு தாக்கல் செய்துள்ளார்.
Radhikaa Sarathkumar Asset Declaration : ரூ.54 கோடி சொத்து மதிப்பைத் தாக்கல் செய்தார் ராதிகா சரத்குமார்
நடிகை - மக்களவை தேர்தல், விருதுநகர் பாஜக வேட்பாளரான ராதிகா சரத்குமார் தன் சொத்து மதிப்பை ரூ.54 கோடியாக தாக்கல் செய்துள்ளார். 61 வயது நடிகரான இவர், 750 கிராம் தங்க நகைகள் இருப்பதையும் குறிப்பிட்டுள்ளார். ராடான் மீடியா வொர்க்ஸின் எம்.டியாக இருப்பதையும் தெரிவித்துள்ளார். இவருக்கு எதிராக களம்காணும் அதிமுக - தேமுக கூட்டணி வேட்பாளர், 33 வயது விஜய பிரபாகரன் ரூ.17.95 கோடி சொத்து மதிப்பு தாக்கல் செய்துள்ளார்.
அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் பேட்டி
”நான் கல்லூரியில் அப்பாவின் கோட்டாவில் வந்ததாக அண்ணாமலை கூறுவது தவறு. இது மன வருத்தத்திற்கு உரிய செயல். எனது தந்தை இறந்த போது எனக்கு வயது 11. நான் கல்லூரியில் சிறந்த மாணவர் விருது பெற்றுள்ளேன். 76 ஏக்கர் உள்ள அண்ணாமலை பண்ணையார் போல இருப்பவர். அவர் தகர டப்பாவை எடுத்து வந்ததாக கூறுவது நம்பத்தக்கதாக இல்லை. அண்ணாமலை கீழ்த்தரமாக பொய் சொல்கிறார். எனது அப்பா மக்களுக்கு நிறைய நல்லது செய்துள்ளார். எனது அப்பா நேர்மையான அரசியல்வாதி. அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும். தனிப்பட்ட முறையில் பேசுவது தவறு”
வாக்குப்பதிவு நாளன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலாளர் நல ஆணையத்திற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் எழுதியுள்ளார்.
ஈரோடு அ.தி.மு.க. வேட்பாளர் அசோக்குமாருக்கு ரூபாய் 648 கோடி சொத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
சட்டப்படி 2 தொகுதிகளில் போட்டியிட்டால்தான் பம்பரம் சின்னம் வழங்க முடியும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பா.ஜ.க. ஆட்சியை வீட்டிற்கு அனுப்பும் வரை பணி தொடர வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சித்த ஆம் ஆத்மி கட்சியினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உதகையில் தேர்தல் விதிகளை மீறி ஊர்வலமாக சென்ற அதிமுக, பாஜகவினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு. பாஜக மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், அதிமுக மாவட்ட செயலாளர் வினோத் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஒடிசாவை தொடர்ந்து பஞ்சாபிலும் பாஜக கூட்டணி அமைக்கும் முயற்சி தோல்வி. சிரோன்மணி அலாகி கூட்டணி அமைத்து போட்டியிட பாஜக நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 49 ஆயிரத்து 600க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரிய வழக்கில் உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 69.43 சதவீதம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இன்று தூத்துக்குடியில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றூம் அதிமுக எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். இதன் காரணமாக தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
Background
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலின் முதலில் திருச்சியில் பிரச்சார பயணத்தை தொடங்கினார். அதனை தொடர்ந்து நேற்று நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இன்று தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக இன்று வாக்கு சேகரித்தார். இது ஒரு பக்கம் இருக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் இன்று தூத்துக்குடியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதனால் தூத்துகுடி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இப்படி பரபரப்பான அரசியல் சூழலில், தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், இன்று (26 மார்ச்) தொடங்குகிறது. இன்று தொடங்கும் தேர்வு ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளான இன்று தமிழ் மற்றும் மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இந்த பொதுத் தேர்வை 12,616 பள்ளியை சேர்ந்த 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 மாணவர்கள் மற்றும் 4 லட்சத்து 52 ஆயிரத்து 498 மாணவிகள் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் தேர்வு எழுதுகிறார்கள். மேலும், 28 ஆயிரத்து 827 தனித்தேர்வர்கள், 235 சிறைவாசிகள் பொதுத்தேர்வை எழுதுகிறார்கள். தேர்வானது, 4 ஆயிரத்து 107 மையங்களில் நடைபெறுகிறது.
பொது தேர்வின் போது மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடாமல் இருக்க அறை கண்காணிப்பாளர்கள் 48,700 பேர் ஈடுபட்டுள்ளனர். 4,591 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 12 முதல் 22-ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் மே 10-ம் தேதி வெளியாகும் என அரசுத் தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்றைய தினத்திற்கான முக்கிய நிகழ்வுகளை காணலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -