Breaking Tamil LIVE: ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒரு வழிப்பாதையாக மாற்றம்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
சென்னையில் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
வார இறுதி நாட்கள் என்பதால் சென்னை கோயம்பேட்டில் இருந்து நாளை மற்றும் நாளை மறுநாள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
பாட்னா தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வருகின்ற ஏப்ரல் 29ம் தெதி காலை 11 மணிக்குள் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பிரிவினை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக ராகுல் மீது பாஜகவும், பிரதமர் மோடி மீது காங்கிரஸும் புகார் அளித்ததன் அடிப்படையில், தேர்தல் ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
குமரி, நெல்லை மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்கள் மிதமான மழைவக்கு வாய்ப்பு.
தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திருப்பத்தூர், கரூர், ஈரோடு உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. திபெங் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ரோகிங் - அனினி தேசிய நெடுஞ்சாலை அடித்து செல்லப்பட்டது. நிலச்சரிவு காரணமாக மற்ற மாவட்டங்களில் இருந்து திபெங் மாவட்டம் துண்டிப்பு.
இந்திய பங்குச்சந்தைகளில் கோடக் மஹிந்திரா வங்கி பங்குகளின் விலை 12 சதவீதம் வரை சரிந்துள்ளது. கோடக் மஹிந்திரா வங்கியின் ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க நேற்று ரிசர்வ் வங்கி தடை விதித்தது. இதையடுத்து, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளால் கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் விலை கடும் சரிவை சந்தித்து வருகிறது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் 5 மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராகியுள்ளனர். சட்டவிரோத மணல் கொள்ளை விவகாரத்தில் திருச்சி, வேலூர், தஞ்சாவூர், கரூர், அரியலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராகியுள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் ரூ.11 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது. தோகாவில் இருந்து வந்த இளைஞரிடம் இருந்து 11 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 11 கிலோ ஹெராயின் போதைப் பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.11 கோடி என தகவல். ஹெராயின் போதைப் பொருள் கடத்தி வந்த இளைஞரிடம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபார் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு 2வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சம்மனை கையெழுத்திட்டு பெற்றுக்கொண்டதாக தாம்பரம் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மே 2 ஆம் தேதி நேரில் ஆஜராக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 6-ம் தேதி சென்னை தாம்ரம் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச்செல்லபட்ட ரூ.4 கோடி பணம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் சதீஷ், பெருமாள், நவீர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தாம்பரம் ரயில் நிலையத்தில் நயினார் நாகேந்திரனின் விடுதி மேலாளரிடம் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், தாம்பரம் போலீசார் நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் திற்பரப்பில் அதிகபட்சமாக 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சிவலோகத்தில் - 6 செ.மீ, பேச்சிப்பாறையில் - 3.6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.53,680 ஆக விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ.20 குறைந்து ரூ.6,710க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.86க்கு விற்பனையாகிறது.
உடல் பருமன் சிகிச்சையில் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என உயிரிழந்த இளைஞரின் உறவினர்களுடம் அமைச்சர் மா.சுப்பிரமணியம் தொலைபேசி வாயிலாக ஆறுதல் கூறினார்.
பீகார், மேற்கு வங்கம், கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கடும் வெப்பநிலை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய அளவில் நேற்று அதிக வெப்பநிலை நிலவிய நகரங்களில் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் 8வது பிடித்துள்ளது.
மக்களவை தேர்தலில் 2ம் கட்டத்தில் கேரளா, கர்நாடகா உள்பட 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு. அசாம், பீகாரில் தலா 5 தொகுதிகள், சத்தீஸ்கரில் 3 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை கிராண்ட் மாஸ்டர் தொடரை நடத்திய தமிழ்நாடு அரசுக்கு கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் குகேஷ் நன்றி தெரிவித்தார்.
Background
காலநிலை மாற்றம் மற்றும் கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் தொடங்கியது முதல் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. வழக்கமாக மே மாதம் அக்னி நட்சத்திரத்தின் போது 40 டிகிரி செல்சியஸ் கடந்து பதிவாகும் வெப்பநிலை தற்போது ஏப்ரல் மாதம் முதலே பல்வேறு மாவட்டங்களில் பதிவாகி வருகிறது. குறிப்பாக நேற்று முன் தினம் இந்தியாவில் பதிவாக அதிகபட்சமான வெப்பநிலையில் சேலம் மூன்றாவது இடம் பிடித்துள்ளது. அதாவது 108 டிகிரி பாரன்ஹீட் பதிவாகி சேலம் 3வது இடத்திலும், 109 டிகிரி பாரன்ஹீட் பதிவாகி ஒடிசா 2வது இடத்திலும், 110 டிகிரி பாரன்ஹீட் பதிவாகி ஆந்திரா முதல் இடம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதில் இன்று திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கருர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 18 வடக்கு உள் மாவட்டங்களில் இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இப்படி வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் கடந்த வாரம் தமிழ்நாட்டிற்கான மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்தது. சுமார் 69 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று தமிழ்நாடு முதலமைச்சரை கூட்டணி கட்சிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். நாளை அதாவது ஏப்ரல் 26 ஆம் தேதி, கேரளா, கர்நாடகா மற்றும் உத்திர பிரதேச மாநிலங்களில் இருக்கும் 89 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் நேற்று மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க இருக்கும் நிலையில் அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் முழு வீச்சில் செய்து வருகிறது. பரபரப்பான அரசியல் சூழலில் நாட்டில் நடக்கும் முக்கிய விஷயங்களை உடனுக்குடன் காணலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -