Breaking News LIVE:என் அரசியல் எதிரி சாதிதான் - கமல்ஹாசன் பேச்சு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
என் அரசியல் எதிரி சாதியம்தான் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளா்.
செத்தாலும் வேறு சின்னத்தில் போட்டியிட மாட்டோம் என்று துரை வைகோ பேசியுள்ளார்.
கோவையில் என்னைத் தோற்கடிக்க ஏப்ரல் 10ம் தேதிக்கு பிறகு தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் ஒன்று சேரும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க. ஆட்சியில்தான் கேஸ் விலை உயர்ந்துள்ளது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு எப்போதும் வெற்றி என்று எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்காக அனைத்துக்கட்சி வேட்பாளர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான பணிகள் அரசியல் கட்சிகள் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். திருச்சியில் நடைபெறும் மாநாட்டில் கலந்துக்கொண்டு அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கிறார்.
தேனியில் அ.ம.மு.க. வேட்பாளராக டிடிவி தினகரனும், திருச்சியில் அ.ம.மு.க. வேட்பாளர் செந்தில் நாதன் களமிறங்குகின்றனர்.
Background
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பணிகள் தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பறக்கும் படை மற்றும் சோதனை சாவடிகள் மூலம் பணப்பட்டுவாடா, பரிசுப்பொருட்கள் வழங்குவது உள்ளிட்டவை குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தேர்தல் பணிகள் வாக்குச்சாவடி அமைத்தல் பதற்றமான வாக்குச்சாவடி கண்டறிதல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். இதில் தேர்தல் நடத்தை விதிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மாவட்ட வாரியாக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது பிரச்சாரத்தை திருச்சியில் தொடங்கினார். அந்த வகையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். திருச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.
தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில், அமமுக, தமாக, பாமக ஓபிஎஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. பிற கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இன்று அமமுக தரப்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் 4 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் காங்கிரஸ் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் இன்றைய முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காணலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -