Breaking Tamil LIVE: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
திரிபுராவில் 3 இடங்களில் 100 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவுகள் பதிவான வினோதம் அரங்கேறியதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Patanjali Ad Supreme Court : பதஞ்சலி நிறுவன விளம்பரங்களை இதுபோன்றுதான் வெளியிடுவீர்களா? - உச்சநீதிமன்றம் கேள்வி
புதுச்சேரி உருளையன்பேட்டை பெரியார் நகர் பகுதியில் நடைபெற்ற பால்குட ஊர்வலத்தில் உத்ரேஷ் (28) என்ற இளைஞரை பைக்கில் வந்த 3 பேர் பயங்கர ஆயுதங்களுடன் சராமரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
உடலை கைப்பற்றிய உருளையன்பேட்டை போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரதமர் மோடி ராஜஸ்தானில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பற்றி கருத்துகளை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. மோடியின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி மட்டுமின்றி அனைத்துக் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
தேர்தல் ஆணைய அதிகாரியிடம் மோடி பேச்சு குறித்து கேட்டதற்கு ஆணையம் அது பற்றி கருத்து தெரிவிக்காது என்று பதில் அளித்தது.
இந்தியாவில் நேற்றைய தினம் அதிக வெப்பநிலை நிலவிய நகரங்களில் இந்திய அளவில் 3வது இடம் ஈரோடு மாவட்டம் பிடித்தது . நேற்று 109.4 பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
தமிழ்நாடு, கர்நாடாகாவின் உள் மாவட்டங்கள், ஒடிசா, உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். மேற்குவங்க மாநிலத்தில் மட்டும் அதிகளவு வெப்ப அலை வீசும் என்பதால் சிவப்பு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் குண்டு வெடிப்புகள் நடந்திருக்கும் என ராஜஸ்தான் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியில் ஆட்சியில் இருந்திருந்தால் ஜம்மு காஷ்மீரில் நம் படைகள் மீது கற்கள் வீசப்பட்டிருக்கும் என கூறியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் மிகவும் அரிதான சித்திரகுப்தர் கோவில் அமைந்துள்ளது. சித்ரா பௌர்ணமி முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
மக்களவை தேர்தல் செயல்பாடு, வாக்குப்பதிவு உள்ளிட்ட முக்கிய விஷயங்களை பற்றி மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சென்னை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்களுடன் இந்த ஆலோசனை நடைபெறுகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு மகாபலிபுரம் பகுதியில் நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் விபத்துக்குள்ளானதில் அவரது தோழி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இது தொடர்பான வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் இன்று நான்காவது முறையாக நடிகை யாஷிகா ஆனந்த் நேரில் ஆஜரானார்.
தீர்த்தவாரி உற்சவ நிகழ்ச்சிக்காக ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளிய கள்ளழகர் - வழியெங்கும் தோல்பைகளில் தண்ணீரை பீய்ச்சி அடித்து பக்தர்கள் வரவேற்றனர்.
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில் தவறி விழுந்த திருப்பூரைச் சேர்ந்த இளைஞர் வீரக்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் - கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி சாமி தரிசனம் முடித்து விட்டு கீழே இறங்கும் போது தவறி விழுந்தார்.
நடிகர் விஷால் நடிக்கும் ரத்னம் திரைப்படத்தின் ப்ரோமோஷன் விழா திருச்சி மாவட்டம் எஸ் ஆர் எம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் நடிகர் விஷால் இயக்குனர் ஹரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் விஷால் கூறியதாவது:
சமூகத்தில் நடக்கும் தவறுகளுக்கு மாணவர்கள் குரல் கொடுக்க வேண்டும். நீங்கள் குரல் கொடுக்கவில்லை என்றால் மற்றவர்கள் உங்களை தவறாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது.
விஜய் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அரசியல் என்பது பொழுதுபோக்கு அல்ல. நான் அரசியலுக்கு வரக்கூடாது என வேண்டிக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் நடிகர்களாக மாறினால் நடிகர்களாகிய நாங்கள் அரசியல்வாதிகளாக மாறுவோம் எனத் தெரிவித்தார்.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,160 குறைந்துள்ளது. இதையடுத்து, ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 6700க்கும் சவரன் ரூ. 53,600க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் கடந்த சில நாட்களாக ஆபரணத்தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தநிலையில் தற்போது குறைந்துள்ளது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2.50 குறைவு:
சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 2.5 குறைந்து ரூ. 86.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மலேசியா: கோலாலம்பூரில் நடுவானில் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளனாதில் 10 பேர் உயிரிழப்பு.
ஓய்வூதியம், இறப்பு கிராஜூவிட்டி,பயணப்படி ஆகியவை 25 சதவிதம் வீட்டு வாடகை படி அதிகபட்சமாக 30 சதவிதம்,குழந்தை கல்வி உதவித்தொகை மற்றும் சீருடை படி ஆகியவை 25 சதவிதம் உயர்வு
தைவானில் 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். தைவானில் நேற்றிறவு 11.56 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவானது. அதிகாலை 2.55 மணிக்கு மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானது.
பள்ளிக்கரணையில் கணவர் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட 4 மாதத்தில் மனைவி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியன் பிரிமீயர் லீக் 2024ன் 39வது போட்டியில் இன்று சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இரவு 7.30 மணிக்கு மோதுகின்றன.
சித்ரா பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து 628 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பேருந்தில் பயணிக்கும் பயணிகள் www.tnstc.in என்ற இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
சித்திரை திருவிழாவில் சிகர நிகழ்ச்சியாக பச்சை பட்டுடுத்தி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ தங்க குதிரை வாகனத்தில் ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.
Background
- புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று திருத்தேரோட்டம் நடைபெற்றது. இந்நிலையில் சித்திரை திருவிழாவில் சிகர நிகழ்ச்சியாக பச்சை பட்டுடுத்தி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ தங்க குதிரை வாகனத்தில் ஆற்றில் இறங்கினார்.
- ஜெகன் மோகனின் மொத்த சொத்து மதிப்பு 529 கோடியே 50 லட்சம் ஆகும். அதேநேரம், கடந்த 2019ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தனது சொத்து மதிப்பை 375 கோடியே 20 லட்சம் என அவர் அறிவித்து இருந்தார். அதன்படி, கடந்த 5 ஆண்டுகளில் ஜெகன்ன் சொத்து மதிப்பு 41 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2022-23 நிதியாண்டில் தனது பல்வேறு நிறுவன முதலீடுகள் மூலம், 57 கோடியே 75 லட்சம் வருவாய் ஈட்டியதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் நாட்டின் பணக்கார முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி திகழ்கிறார்.
பள்ளிக்கரணையில் கணவர் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட 4 மாதத்தில் மனைவி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பள்ளிக்கரணை அருகே கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி அங்குள்ள மதுபானக்கடை வாசலில் இளைஞர் ஒருவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இளைஞரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியது. அதாவது அந்த இளைஞர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இந்த துயரத்தில் இருந்து மீள முடியாத பெண்ணும் தற்போது தற்கொலை செய்துகொண்டார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -