Breaking News LIVE: காஞ்சிபுரம் பாமக வேட்பாளராக ஜோதி வெங்கடேசன் அறிவிப்பு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
காஞ்சிபுரம் பாமக வேட்பாளராக ஜோதி வெங்கடேசன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பாமக வேட்பாளர்கள் 10 பேர் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆளுநரை வைத்து பா.ஜ.க. மிரட்டுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக திருச்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றார்.
தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி மீண்டும் பதவியேற்றுள்ளார்.
அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்னும் சற்று நேரத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி மீண்டும் பதவியேற்கிறார்.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தென்காசியில் வரும் 25ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தே.மு.தி.க. வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகரில் விஜயகாந்த் மகன் போட்டியிடுகிறார்.
Breaking LIVE Tamil : விருதுநகரில் ராதிகா சரத்குமார் போட்டி
பாஜக சார்பாக, விருதுநகர் தொகுதியில் ராதிகா சரத்குமார், திருப்பூரில் ஏ.பி முருகானந்தம், மதுரையில் ராம சீனிவாசன், நாகப்பட்டினத்தில் ரமேஷ், சிவகங்கையில் தேவநாதன், தென்காசியில் ஜான் பாண்டியன், வட சென்னையில் பால் கனகராஜ், நாமக்கல் தொகுதியில் கே.பி ராமலிங்கம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்,
மாலை 4 மணி வரை தென்காசி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூதுக்குடி ஆகிய 5 மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை நாளை தொடங்குகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். மத்திய சென்னையில் திமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.
நாம் தமிழர் கட்சி கேட்ட கரும்பு விவசாயி சின்னம் வேறு ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அரிக்கேன் சின்னம் ஒதுக்கப்படும் என தகவல் வெளியானது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுகவுக்கு லாட்டரிக்கு கிங் மார்ட்டின் அளித்த தொகை - ரூ.503 கோடி
திரிணாமுல் காங்கிரஸ் - ரூ.542 கோடி
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் - ரூ. 154 கோடி
பாஜக - ரூ.100 கோடி
காங்கிரஸ் - ரூ.50 கோடி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பொன்முடிக்கு பதவியேற்பு விழா நடத்தப்படுகிறது. ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்க ஒரு நாள் கெடு கொடுத்தது உச்ச நீதிமன்றம். அதனை தொடர்ந்து பதிவியேற்ப்புக்கு அழைப்பு விடுத்தார் ஆளுநர் ரவி.
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதை கண்டித்து திமுக போராட்டம் நடத்தி வருகிறது. மக்களவை தேர்தலில் டெல்லி, ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஆம் ஆத்மியின் வெற்றியை தடுக்க மத்திய அரசு திட்டமிட்டு செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகளுடன் இன்று காலை எடப்பாடி பழனிசாமி ஆலோசனை கூட்டம் நடத்திய பின்னர் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
2G Case : 2ஜி வழக்கில் சிபிஐ தொடர்ந்த மேல்முறையீட்டை ஏற்பதாக, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி தினேஷ்குமார் அறிவிப்பு. 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆ ராசா, கனிமொழி ஆகியோர் உட்பட 15 பேரும் சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
மக்களவை தேர்தலை முன்னிட்டு பாமக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் பாமவிற்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டது. அதற்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
- திண்டுக்கல் - கவிஞர் திலகபாமா
- அரக்கோணம் - கே.பாலு
- ஆரணி - கணேஷ் குமார்
- கடலூர் - தங்கர் பச்சான்
- மயிலாடுதுறை - ம.க ஸ்டாலின்
- கள்ளக்குறிச்சி - தேவதாஸ் உடையார்
- தருமபுரி - அரசாங்கம்
- சேலம் - அண்ணாதுரை
- விழுப்புரம் - முரளி சங்கர்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை தொடர்ந்து அவரது இல்லம் அருகே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் இல்லம் சுற்று அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் நிலவுகிறது.
நேற்று இரவு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நிலையில் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள மருத்துவர்கள் வருகை தந்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக மாவட்ட செயலாளர் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனைக்கு பின் அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இரவு 9 மணிக்கு கைது செய்யப்பட்ட அவர் 11 மணி அளவில் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முத்லமைச்சர் அரவிந்த கெஜ்ரிவாலை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Background
நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்திய அளவில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளது. தேர்தல் ஆணையமும் அத்றகான பணிகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள் வழங்குவது தொடர்பாக பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் நேற்று வரை சுமார் ரூ. 9.32 கோடி மதிப்பிலான ரொக்கப்பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு அரசியல் களம் பொறுத்தவரையில் அனைத்து திமுக, பாஜக, அதிமுக கூட்டணி கட்சிகள், நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. திமுக தரப்பில் தேர்தல் அறிக்கை மற்றும் 21 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் நாளாக இன்று திருச்சி சென்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
திமுக கூட்டணி கட்சிகள் வேட்பாளர் பட்டியல் அறிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் தரப்பில் இன்று வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பாஜக தரப்பில் முதல் கட்டமாக 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக தரப்பில் இன்று காலை ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இப்படி பரபரப்பான சூழலில் இன்றைய நிகழ்வுகளை உடனுக்குடன் விரிவாக பார்க்கலாம்.
இது ஒருபக்கம் இருக்க நாளை 23 ஆம் தேதி நாம் தமிழர் கட்சி தரப்பில் ஒரே மேடையில் 40 தொகுதிகளுக்கான வேட்பாளரை கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்ய உள்ளார். கடந்த முறை 20 பெண் வேட்பாளர்கள் மற்றும் 20 ஆண் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் இம்முறையும் அதேபோல் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வேட்பாளர்கள் அறிவிக்க இருக்கும் நிலையில், அரிக்கேன் விளக்கு சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. ஏற்கனவே கரும்பு மற்றும் விவசாயி சின்னத்தை வேறு ஒரு கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் தற்போது அரிக்கேன் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்று இரண்டாவது நாளாக தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க தமிழ்நாடு அரசு அனுப்பிய கடிதத்தை நிராகரித்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக அது தொடர்பாக வழக்கு விசாரணை தலைமை நீதிபதி அமர்வில் நடைபெறுகிறது.
இன்று சென்னை மற்றும் பெங்களூரு அணி இடையே முதல் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கும் நிலையில் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -