Breaking Tamil LIVE : பத்ம விருதுகளை வழங்கி கவுரவிக்கும் குடியரசுத் தலைவர்

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்

ஆர்த்தி Last Updated: 22 Apr 2024 06:23 PM
பத்ம விருதுகளை வழங்கி கவுரவிக்கும் குடியரசுத் தலைவர்

டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி வருகிறார்.

திருவண்ணாமலைக்கு சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு, 2500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்திரை மாத பௌர்ணமி கிரிவலம் நடைபெறுவதால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து செல்வதுற்கு 2500 சிறப்பு பேருந்துகள் 5326 நடைகள் இயக்கபடவுள்ளது. 

Breaking Tamil LIVE : வைகையில் இறங்க 2400 பேருக்கு அனுமதி..!

கள்ளழகர் வைகையில் இறங்கும் நிகழ்வில் 2400 பேர் மட்டுமே ஆற்றில் இறங்க அனுமதி; அழகருக்கு பீய்ச்சி அடிக்கும் நீரில் ரசாயனம் ஏதும் கலக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. 

Breaking Tamil LIVE : அடுத்த 3 மணிநேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி கோவை, திருவாரூர், தஞ்சாவூர், திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, சிவகங்கை, ராமநாதபுரம், குமரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Breaking Tamil LIVE : செந்தில் பாலாஜியின் காவல் வருகின்ற ஏப்ரல் 25ம் தேதி வரை நீட்டிப்பு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வருகின்ற ஏப்ரல் 25ம் தேதி பரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் வங்கியின் அசல் ஆவணங்களின் நகல் செந்தில்பாலாஜியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

PM Modi : யோகி ஆதித்யநாத் தான் உத்தரபிரதேசத்தில் வளர்ச்சியை கொண்டு வந்தார்.. மோடி பரப்புரை

Neeya Movie Director Durai Passes Away : நீயா பட இயக்குநர் துரை காலமானார்!

Neeya Movie Director Durai Passes Away : தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்த பிரபல இயக்குநர் துரை இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.


கமலின் நீயா, ரஜினியின் ஆயிரம் ஜென்மங்கள், சிவாஜியின் துணை, கிளிஞ்சல்கள் உள்பட 40க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை இயக்கியவர். அவளும் பெண்தானே, பசி படங்களுக்காக இரண்டு தேசிய விருதுகள், தமிழ்நாடு அரசின் சிறந்த இயக்குநர் விருது மற்றும் கலைமாமணி விருதுகளை வென்றவர். அவரின் மறைவிற்கு பலரும் இரங்கல் வருகின்றனர்.

Breaking Tamil LIVE : இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தவுடன் CAA சட்டம் ரத்து செய்யப்படும் - ப. சிதம்பரம்!

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் நாடாளுமன்ற முதல் கூட்டத் தொடரிலேயே CAA சட்டம் ரத்து செய்யப்படும். கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் மக்களுக்கு எதிராக இயற்றப்பட்ட அனைத்து சட்டங்களும் மாற்றியமைக்கப்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 




Breaking Tamil LIVE : இலங்கையிலிருந்து எட்டு வயது சிறுவன் உள்பட 3 பேர் அகதிகளாக வருகை.!

இலங்கை மட்டக்களப்பு பகுதியில் இருந்து சிவனேஸ்வரன் என்பவரின்  குடும்பத்தை சேர்ந்த எட்டு வயது சிறுவன் உள்பட மூன்று பேர் ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்துள்ளனர். இவர்களிடம் பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Breaking Tamil LIVE :கோடை காலத்தில் சிறப்பு வகுப்புகள் கூடாது - பள்ளிக்கல்வித்துறை

கோடை காலத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. சிறப்பு வகுப்புகளால் மாணவர்களுக்கு உளவியல் பாதிப்புகள் ஏற்படுவதாக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் வந்ததாக கூறி பள்ளிக்கல்வித்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. 

Breaking Tamil LIVE : திருப்பத்தூர்: திருப்பதி கெங்கை அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்!

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பொன்னியம்மன் கோவில் தெருவில் சித்தம் கொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு திருப்பதி கெங்கையம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது.


இந்த விழாவில் முதற்காலை யாக வேள்வி பூஜைகள் மற்றும் இரண்டாம் கால வேள்வி பூஜைகள், பம்பை மேல வாத்தியங்கள் முடழங்க திருக்கோவிலுக்கு சீர் கொண்டு வருதல், திரு கல்யாண வைபவம், மகா தேவாரதனை உன்கிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Breaking Tamil LIVE : சேலம் பனமரத்துப்பட்டியில் இரவுப் பணியில் இருந்த காவலர் உயிரிழப்பு..!

சேலம் பனமரத்துப்பட்டியில் இரவுப் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு


சேலம் பனமரத்துப்பட்டியில் இரவுப் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளர். காவல் நிலையத்தில் மயங்கி விழுந்த ஹரிதாஸ் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

Breaking Tamil LIVE : கோடநாடு வழக்கு ஏப்ரல் 29ம் தேதிக்கு மாற்றம்..!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை வருகின்ற ஏப்ரல் 29ம் தேதிக்கு ஒத்தி வைத்தது உதகை சார்பு நீதிமன்றம். 


 

Kanchipuram Chitragupta Temple : சித்ரா பெளர்ணமியில் ஏன் சித்திரகுப்தர் வழிபாடு? காஞ்சிபுர கோயிலும், அதன் சிறப்பும்..





Breaking Tamil LIVE: மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேர் திருவிழா - குவிந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள்!

மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவை காண நூற்றுக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். 


காலை 6.05 மணிக்கு சுந்தரேஸ்வரர் தேர் வீதியுலாவும், 6.45 மணிக்கு மீனாட்சி அம்மன் திருவீதி உலாவும் நடந்தது. "மீனாட்சி சுந்தர மகாதேவா- சோம சுந்தர மகாதேவா, ஹர ஹர சங்கர மகாதேவா, சம்போ சங்கர - மகாதேவா, கடம்பவன சுந்தர - மகாதேவா" என நூற்றுக்கணக்கானோர் கோஷமிட்டபடி தேர் இழுக்கப்பட்டது.






இதைத் தொடர்ந்து, கள்ளழகர் தனது தங்கப் பல்லக்கில் மதுரை நகரை நோக்கி தனது வருடாந்திர பயணத்தைத் தொடங்கினார்.

Breaking Tamil LIVE: தாம்பரம் - காட்டாங்கொளத்தூர் இடையே சிறப்பு ரயில்கள்..!

தாம்பரம் - காட்டாங்கொளத்தூர் இடையே 30 நிமிட இடைவெளியில் இன்று 9 சிறப்பு ரயில்கள் இயக்கம். தென் மாவட்டங்களில் இருந்து வடும் பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே அறிவிப்பு. 

பிரதமர் மரியாதைக்குரியவராக இல்லாதபோது, நாட்டின் அறிவுமிகுந்தவர்கள் குரல் எழுப்ப வேண்டும். மோகன் பகவத் ஏன் மெளனமாக இருக்கிறார் - கபில் சிபல், எம்.பி

பிரதமர் மரியாதைக்குரியவராக இல்லாதபோது, நாட்டின் அறிவுமிகுந்தவர்கள் குரல் எழுப்ப வேண்டும். மோகன் பகவத் ஏன் மெளனமாக இருக்கிறார் - கபில் சிபல், எம்.பி





திருச்சி, தாயுமானவர் கோவில் தேர் திருவிழா... பக்தி பரவசத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்..

Breaking Tamil LIVE: மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு..!

மணிப்பூர் மாநிலத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட 11 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது. கடந்த 19ம் தேதி நடந்த தேர்தலின்போது துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றதை அடுத்து மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 


Breaking Tamil LIVE: ஐபிஎல் 2024: ராஜஸ்தான் - மும்பை மோதல்..!

ஐபிஎல் 2024ல் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மோத இருக்கிறது. இரு அணிகள் மோதும் போட்டி ஜெய்ப்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. 

Breaking Tamil LIVE: பரந்தூர் விமான நிலையம் விவகாரம்: ஏகனாம்புரம் கிராம மக்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீஸ் ..

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து , 630 நாட்களுக்கு மேலாகப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக  ஏகனாம்புரம் மற்றும் நாகப்பட்டு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 


இந்தநிலையில் வட்டாட்சியர் கொடுத்த புகாரின் பெயரில் சுங்குவார்சத்திரம் போலீசார் 5 பிரிவின் கீழ் கிராம மக்கள் 10 பேர் மீது  வழக்கு பதிவு செய்துள்ளனர்.  சுப்பிரமணியன், கதிரேசன், கணபதி, பலராமன் , முனுசாமி, இளங்கோவன், கவாஸ்கர், சுதாகர், ஓம் பகவதி, விவேகானந்தன் ஆகிய 10 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Breaking Tamil LIVE: மதுரை மீனாட்சியம்மன் கோயில் திருத்தேரோட்டம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

மதுரை மீனாட்சியம்மன் கோயில் திருத்தேரோட்டம் கோலாகலமாக நடந்து வருகிறது. பல்வேறி மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்றுள்ள நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

Breaking Tamil LIVE: இந்தியக் கூட்டணியில் இருந்து விலகாததால் சோரன் கைது - மல்லிகார்ஜுன் கார்கே..

இந்தியக் கூட்டணியில் இருந்து விலகாததால் ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சோரன் கைது செய்யப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற இந்தியக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் இவ்வாறு பேசியுள்ளார். 

Breaking Tamil LIVE: திருவண்ணாமலைக்கு இன்றும் நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

சித்திராப் பௌர்ணமியை முன்னிட்டு இன்றும் நாளையும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இன்றும் நாளையும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 1,820 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. 

Background

சித்திரைத் திருவிழாவின் 11-வது நாளான இன்று மாசி வீதிகளில் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. சித்திரை திருவிழாவின் 8 ஆம் நாள் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் செய்யும் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து 9வது நாளின் இரவு திக் விஜயம் நடந்தது. 10 ஆம் நாளான நேற்று மீனாட்சியம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வைபவம் வெகுவிமரிசையாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருக்கல்யாண மேடையில் மங்கல வாத்தியங்கள் முழுங்க திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து இரவில் யானை வாகனத்தில் சுந்தரேஸ்வரரும், ஆனந்த ராயர் பூப்பலக்கில் மீனாட்சியம்மனும் எழுந்தருளினர். 


சித்திரை பெருவிழாவின் முற்பகுதியில் நடைபெறும் மீனாட்சி கோயில் விழாக்களின் உச்ச விழாவும், இறுதி விழாவுமான தேரோட்டம் இன்று காலை 6:30 மணிக்கு துவங்கி கோலகலமாக நடைபெற்று வருகிறது. திருத்தேரோட்ட நிகழ்வை காண மதுரை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் மதுரையில் வருகை தந்துள்ளனர். முன்னதாக கீழ மாசி வீதிக்கு மீனாட்சி - சுந்தரேஸ்வரர் பல்லக்கில் அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து “ஹரஹர மகாதேவா.. நமச்சிவாயம் வாழ்க” என்ற கோஷம் விண்ணதிர பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து வருகின்றனர். 


அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜி நீதிமன்ற காவல் இன்று முடிவடைகிறது. இதன் காரணமாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்  நேரில் ஆஜர்படுத்தப்படுகிறார். அவரது காவல் நீடிக்கப்படுமா அல்லது மாறுபட்ட தீர்ப்பு வருமா என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும். 


தமிழ்நாட்டில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வர, இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தலுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் பணிகள் கட்சிகள் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் பல்வேறு மாநிலங்களில் இந்தியா கூட்டணி சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இந்தியா கூட்டணி சார்பில் இன்று மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பிரபாத் தாரா மைதானத்தில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் 28 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்காக பொதுக்கூட்ட மேடையில் இரண்டு இருக்கைகள் காலியாக விடப்பட்டிருந்தன.  இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில் நாட்டில் நடக்கும் பல்வேறு முக்கிய விஷயங்களை உடனுக்குடன் காணலாம். 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.