Breaking Tamil LIVE: காவிமயமாக்கும் பாஜக சதித்திட்டத்தின் முன்னோட்டம்தான் - முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்காக வைகை ஆற்றுக்கு நீர் வந்தடைந்தது. நாளை மறுநாள் கள்ளழகர், வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வுக்காக வைகை அணையில் நேற்று 1,000 கன அடி நீர் திறப்பு.
திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெல்லும். வாக்குப்பதிவு முடியும் வரை வாக்காளர் பட்டியல் குறித்து எந்த குறையும் பாஜகவினர் கூறவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ரூ.1,000 மதிப்பிலான மாதாந்திர பயணச்சீட்டு ஏப்ரல் 23ம் தேதி வரை விற்பனை செய்யப்படும். மாநகர் போக்குவரத்துக்கழக மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படும் என போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற தீவனூர் ஸ்ரீ சுயம்பு பெய்யாமொழி விநாயகர் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. தீவனூர் ஸ்ரீ சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் பாட்டாளி மக்கள் கட்சியின் தர்மபுரி வேட்பாளர் சௌமியா அன்புமணி சாமி தரிசனம் செய்தார்.
புழல் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 215 கன அடியில் இருந்து 395 கன அடியாக அதிகரிப்பு. 3,300 மில்லியன் கன டி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர் இருப்பு 2, 815 மில்லியன் கன அடியாக உள்ளது.
கனடாவில் நடைபெற்று வரும் பிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் தமிழ்நாடு வீரர் குகேஷ் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தார். இன்று அதிகாலை நடந்த 13வது சுற்றில் பிரான்ஸின் அலிரேசா ஃபிரோஸ்ஜாவை வீழ்த்தினார்.
நடந்து முடிந்த 2024 பாராளுமன்ற தேர்தலில் ஒரு கோடியே 90 லட்சம் பேர் வாக்களிக்காதது மத்திய, மாநில அரசுகளின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டார்களோ என எண்ணத் தோன்றுகிறது - பிரேமலதா விஜயகாந்த்
மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தின்போது பெண்களும் புதிய தாலிச் சரடு அணிந்து மனமுருக வழிபட்டனர். தங்கள் வீட்டு திருமணம் போல் பக்தர்கள் விருந்து உண்டு, மொய் எழுதும் பழக்கமும் நடைமுறையில் உள்ளது.
சித்திரைக் திருவிழாவின் 10ம் நாள் மதுரை மீனாட்சி சுந்தேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. வைரக்கற்கள் பதித்த தங்க திருமாங்கல்யம் மீனாட்சியம்மனுக்கு அணிவிக்கப்பட்டது.
Background
நாடாளுமன்ற முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் நடைபெற்று முடிந்தது. வாக்குப்பதிவு முடிந்த நிலையில் எத்தனை சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என்பது தொடர்பாக குழப்பங்கள் நிலவி வந்தது. ஏப்ரல் 19 ஆம் தேதி சுமார் 72 சதவீதம் வாக்கு பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று அதிகாலை வெளியிட்ட அறிக்கையில் சுமார் 69.46% வாக்குகள் மட்டுமே பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
மத்திய சென்னையில் 53.91 சதவிகித வாக்குகளும் தென் சென்னையில் 54.24 சதவிகித வாக்குகளும் பதிவானதாக தேர்தல் ஆணையத்தின் திருத்தப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டது. பொதுவாக திருத்தப்பட்ட வாக்குப்பதிவு விவர அறிக்கையில் சிறிய சிறிய மாற்றங்கள் நிகழலாம். ஒரு சதவிகிதம் 2 சதவிகிதம் என கூட குறையலாம். ஆனால், சென்னையில் உள்ள மக்களவை தொகுதிகளின் வாக்குப்பதிவு விவரங்களில் 8 சதவிகிதம் முதல் 10 சதவிகிதம் வரை மாற்றம் ஏற்பட்டது பெரும் குழப்பங்களுக்கு வழிவகுத்தது. இதனால், பல சந்தேகங்கள் எழுந்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் வாக்குப்பதிவு விவரம் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் உறுதி செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் 69.49 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி தேர்தல் களத்தில் இருந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட நிலையில், உலக பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா ஏப்ரல் 12 ஆம் தேதி தொடங்கி மிகவும் விமர்சையாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் மிக முக்கிய நாளான திருக்கல்யாணம் இன்று நடைபெற்று வருகிறது. மதுரையின் அரசி மீனாட்சிக்கும் அவளது நாயகன் சுந்தரேசுவரருக்கும் இன்று காலை 8:35 மணி முதல் 8:59 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. நேற்று முன்தினம் மதுரையின் அரசியாக முடி சூடிய மீனாட்சி, நேற்று திக்கு விஜயம் செய்தார். அதனை தொடர்ந்து இன்று திருக்கல்யாணமும், நாளை தேரோட்டமும் நடைபெறுகிறது. இந்நிலையில் நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காணலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -