Breaking Tamil LIVE: பாலில் H5N1 வகை பறவை காய்ச்சல் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது : WHO
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
மொரதாபாத் மக்களவை தொகுதியில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில், பாஜக வேட்பாளர் குன்வார் சர்வேஷ் காலமானார்
Mamata Banerjee On Doordarshan : நாடு முழுக்க தேர்தல் நடக்கும்போது தூர்தர்ஷன் லோகோவை காவிமயமாக்குவதா? : மம்தா பானர்ஜி கண்டனம்
Breaking Tamil LIVE: பாலில் H5N1 வகை பறவை காய்ச்சல் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது : WHO
தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம்
ஈரோடு, கிருஷ்ணகிரி, தென்காசி, நெல்லை, கன்னியாக்குமரியில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. சிக்கள்ளி, அண்ணாநகர், இக்களூர், தலமலை, தொட்டகாஜனூர், ஆசனூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. 2 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருவதால் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஏஐஎம்ஐஎம் தலைவரும் ஹைதராபாத் தொகுதியின் வேட்பாளருமான அசாதுதீன் ஒவைசி மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
கடப்பா: ஆந்திர பிரதேச காங்கிரஸ் தலைவரும், கடப்பா மக்களவை தொகுதியில் அக்கட்சியின் வேட்பாளருமான ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல் செய்தார்.
மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 5,000 அரிய வகை சிவப்பு காது ஆமை குஞ்சுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நேற்று மக்களவை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தேனி வேட்பாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களித்து தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றிய மக்கள் அனைவருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் நடந்த விஜய் சங்கநாத் பேரணியில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "ராமர் கோவில் விவகாரத்தை காங்கிரஸ் கட்சி முடக்கியது. நீங்கள் இரண்டாவது முறையாக பிரதமர் மோடியை பிரதமராக தேர்ந்தெடுத்த பிறகு, ஐந்தாண்டுகளில் நீதிமன்ற தீர்ப்பு வந்தது. பூமி பூஜையும், பிரான் பிரதிஷ்டாவும் நடந்தது” என்றார்.
மகாவீர் ஜெயந்தியையொட்டி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள கள், சாராயம் மற்றும் பார் உள்ளிட்ட அனைத்து வகையான மதுபான கடைகளையும் மூட வேண்டும் புதுச்சேரி கலால் துறை உத்தரவிட்டுள்ளது.
6.5 கோடி கன்னட மக்களுக்கு மோடி அரசு சொம்பு கொடுத்திருக்கிறது. இளைஞர்கள் 2 கோடி வேலைவாய்ப்புகளை கேட்கிறார்கள்.. மோடி அரசு அவர்களுக்கு சொம்பை கொடுக்கிறது. பெங்களூரு மக்கள் சாலை நிதியைக் கேட்கிறார்கள், கர்நாடக மக்கள் அவர்களின் வரிக்கு சமமான அளவிலான நிதியைக் கேட்கிறார்கள். விவசாயிகள் அவர்களுக்கான வருமானத்தைக் கேட்கிறார்கள், ஆனால் மோடி அரசு அவர்களுக்கு சொம்பு கொடுக்கிறது - காங்கிரஸ்
மராட்டியத்தில் மாடர்ன் பண்டதலூன் விளையாட்டில் பங்கேற்கும் தமிழ்நாட்டு வீரர்களின் பட்டியலை அனுப்பக் கோரிய மனு. மாணவர்களை எவ்வாறு அந்த விளையாட்டில் பங்கேற்க அனுமதிப்பது? wild card entry போல ஏதேனும் முறைகள் உள்ளதா என்று பள்ளிக்கல்வி இணை இயக்குநருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்கு பெட்டிகள் வாக்கு என்னும் மையமான விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டு மத்திய தேர்தல் பார்வையாளர்கள், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பழனி ஆகியோர் முன்பாக சீல் வைக்கப்பட்டது.
வாக்கு என்னும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. வாக்கு பெட்டிகள் வைக்கப்படும் ஆரைக்கு மத்திய துணை ராணுவ படையினரும், வளாகத்தில் மாநில சிறப்பு காவல் படையினரும் மேலும் காவலர்கள் என 150 பேர் பாதுகாப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பிரபல எலக்ட்ரிக் நிறுவனமான டெஸ்லா அதிபர் எலான் மஸ்க்கின் இந்திய பயணம் திடீரென ஒத்துவைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எலான் மஸ்க் 20 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியானது .
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ. 55,080-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.6,885 விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.58,840 ஆகவும், கிராம் ஒன்று ரூ.7,355 ஆகவும் விற்பனையாகிறது.
நகர்புறங்களில் வசிக்கும் 10 பேரில் 4 பேர் வாக்களிக்கத் தவறிவிட்டனர்.
வாக்குச்சாவடி முகவர்கள் அளித்த தகவலின் பேரில் நேற்று தோராயமாக வாக்குப்பதிவு வெளியிடப்பட்டதாக விளக்கம்.
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் மொத்த சராசரி வாக்குப்பதிவு 69.46% என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் 72.44% வாக்குகள் பதிவான நிலையில் 2024 தேர்தலில் வாக்குப்பதிவு 3% சரிந்தது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 10 கன அடியில் இருந்து 22 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது. கடந்த நாட்களுக்காக குறைந்து வந்த நிலையில் இன்று கன அடி நீர் அதிகரித்துள்ளது.
Background
எப்போதும் வரும் என்ற எதிர்பார்ப்பு நேற்றுடன் முடிவடைந்தது. இந்தியாவில் முதற்கட்டமாக மக்களவை தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் நடந்து முடிந்தது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 70 சதவீதத்திற்கு அதிகமாக வாக்குகள் பதிவானதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், நேற்று பதிவான வாக்குகளில் ஓட்டு மெஷின்கள் இன்று பாதுகாப்பாக லாக்கர் ரூம்களில் வைக்கப்பட்டு வருகிறது.
இதுபோக, தருமபுரி அருகே மலை கிராம மக்களை டிராக்டர் மூலம் அழைத்துச் சென்று வாக்குப்பதிவு செய்த மாவட்ட நிர்வாகம்-வாக்குப்பதிவு முடிந்து இரவு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை டிராக்டரில் எடுத்து வந்த வாக்குச்சாவடி அலுவலர்கள்.
நேற்று தமிழகத்தில் 39 தொகுதிகளில் ஒரே கட்டமாக நடந்து முடித்த நாடாளுமன்ற தேர்தலில் 7 மணி வரை பதிவான வாக்குகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 7மணி வரை 72.09% வாக்குபதிவு பதிவாகி உள்ளது. ஒரு சில இடங்களில் டோக்கன் வழங்கப்பட்டு வாக்களித்து வருகிறார்கள்.
அதிகப்படியாக கள்ளக்குறிச்சி 75.76% மற்றும் தருமபுரி 74.44% மற்றும் குறைந்தபட்சம் மத்திய சென்னை 67.35%
பதிவாகி உள்ளது. குறைந்தபட்சமாக தென் சென்னை67.85% வாக்குகள் பதிவாகி உள்ளது.கடந்த முறையை விட இப்போது அதிகரித்துள்ளது” என குறிப்பிட்டு இருந்தார்.
விளையாட்டு செய்திகளில் சென்னை சூப்பர்கிங்ஸுக்கு எதிரான நேற்றைய போட்டியில் லக்னோ அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்று டெல்லி கேப்பிடல்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை அருண் ஜெட்லி மைதானத்தில் எதிர்கொள்கிறது. இந்த போட்டியானது இரவு 7. 30 மணிக்கு தொடங்குகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -