Breaking News LIVE: பா.ஜ.க கூட்டணியில் ஐ.ஜே.கே.,வுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு; ஒப்பந்தம் கையெழுத்து!
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
அமமுகவுக்கு தேர்தல் ஆணையம் குக்கர் சின்னத்தினை ஒதுக்கீடு செய்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐ.ஜே.கேவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேலூர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்தார் நடிகர் மன்சூர் அலிகான்.
பாஜக கூட்டணியில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்துக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
எங்கள் நிர்வாகிகள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நல்லதொரு முடிவு எடுத்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
பாஜக கூட்டணியில் உள்ள தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொகுதி ஒப்பந்தத்தில் தமமுக நிறுவனர் ஜான் பாண்டியனும் அண்ணாமலையும் கையெழுத்திட்டனர்பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியனுக்கு ( தமமுக ) ஒரு தொகுதி ஒதுக்கீடு
அமமுக - பாஜக கூட்டணியிடையிலான தொகுதி பங்கீடு உறுதியானது. அமமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் கெங்கராயம்பாளையம் சோதனை சாவடி அருகில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட அப்பொழுது புதுச்சேரி தனியார் தனியார் கல்லூரியில் இருந்து ஆவணங்கள் இன்றி காரில் எடுத்துச் சென்ற 30 லட்சத்தை சக்திவேல் தலைமையிலான தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து விழுப்புரம் கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.
சென்னை பாஜக அலுவலகம் கமலாலயத்துக்கு டிடிவி தினகரன், ஓபிஎஸ், ஜி.கே.வாசன் வருகை தந்துள்ள நிலையில் சற்று நேரத்தில் தொகுதி பங்கீடு செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய மத்திய அமைச்சர் ஷோபா மீது மதுரையில் உள்ள காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தோழமை கட்சிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், வாக்குகள் குறைந்தால் பதில் சொல்ல வேண்டும் என்றும் மாவட்ட செயலாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை சவுந்தர்ராஜன் பா.ஜ.க.வில் இன்றுமீண்டு இணைந்தார்.
தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் விலை ரூபாய் 500, பெட்ரோல் ரூபாய் 75, டீசல் ரூபாய் 65 ரூபாயாக குறைக்கப்படும்
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. வேட்பாளர்கள் 16 பெயர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வில் தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் குவிந்துள்ளனர்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு இன்று காலை 10 மணி தேர்தல் அறிக்கை வெளியிடப்படுகிறது. ராயப்பேட்டையில் இருக்கும் தலைமை அலுவலகத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்று கூட்டணி குறித்தும் முடிவு எட்டப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
Zomato Pure Veg Fleet : சைவ உணவு டெலிவரிக்கும் சிகப்பு சட்டை டெலிவரி பணியாளர்களே.. நிறத்தால் பிரிக்கப்போவதில்லை என சொமேட்டோ நிறுவனர் அறிவிப்பு
சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பிருந்தா தேவி அவர்களிடமும் அதே போன்று சேலம் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலரான தனி துணை ஆட்சியர் அவர்களிடமும் வேட்பு மனுவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 102 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. தமிழ்நாடு உட்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு இன்று வேட்பு மனுதாக்கல் செய்யப்படுகிறது.
கேரளத்தை சேர்ந்த 80 மீனவர்களை நடுக்கடலில் தூத்துக்குடி மீனவர்கள் சிறைபிடித்தனர். தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கும் பகுதியில் கேரள மீனவர்கள் அத்துமீறி நுழைந்ததாக குற்றச்சாட்டு அடிப்படையில், கேரளா மாநில படகு, குளச்சலை சேர்ந்த 5 படகுகளையும் தூத்துக்குடி மீனவர்கள் சிறைபிடித்தனர்.
பிரதமர் மோடி பேரணியில் மாணவர்களை பங்கேற்க வைத்த விவகாரத்தில் கோவை ஸ்ரீ சாய்பாபா பள்ளி நிர்வாகம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் நிலையில் திமுக கூட்டணி கட்சிகளுக்கான இட ஒதுக்கீடு முடிந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திமுக தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்.
Breaking News Tamil : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
ராமேஷ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ விசாரித்து வரும் நிலையில், பாஜக இன்றிய இணையமைச்சர் ஷோபா தமிழர்களை தொடர்புபடுத்தி பேசியிருப்பது ஆச்சர்யமாக உள்ளது. பாஜக தனது பிரிவினைவாத அரசியலால் தரம் தாழ்ந்துள்ளது என கண்டனம் தெரிவித்துள்ளார் அமைச்சர் உதயநிதி
மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி என 40 இடங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று முதல் வேட்பமனு தாக்கல் செய்யலாம். இன்று தொடங்கும் வேட்பமனு தாக்கல் வரும் 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மக்களவை தேர்தல் இன்னும் ஒரு மாத காலத்தில் நடைபெற இருக்கும் நிலையில், அதிமுக - தேமுதிக இடையே இன்று கூட்டணி உடன்படிக்கை எட்டப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இன்று முதல் 27 தேதி வரை வேட்பனு தாக்கல் நடைபெறுகிறது.
Background
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் தொடங்கி நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேர்தல் ஆணையம் சனிக்கிழமை அறிவித்தது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து அரசியல் கட்சிகள் தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் வேட்பாளர் அறிவிப்பு தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக கூட்டணி கட்சிகளுக்கான இட ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான உடன்படிக்கை கையெழுத்தாகியுள்ளது. இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் திமுக தரப்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி கட்சிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. ஆனால் அதிமுக தரப்பில் இன்னும் கூட்டணி குறித்து முடிவாகவில்லை. அது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தேமுதிக - அதிமுக கூட்டணி உடன்படிக்கை எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தேமுதிக தரப்பில் 7 இடங்கள் கேட்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பாமக, அதிமுக உடன் கூட்டணி அமைக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையைல் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளது. பாஜக கூட்டணியில் பாமகவிற்கு 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை தொடர் இழுபறியில் இருக்கும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் வேட்பமனு தாக்கல் தொடங்குகிறது. இன்று தொடங்கி வரும் 27 ஆம் தேதி வரை வேட்பமனு தாக்கல் நடைபெறுகிறது. அதேசமயம் வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.
வேட்புமனு தாக்கலுடன் ரூ.25 ஆயிரம் டெபாசிட் தொகையாக அளிக்க வேண்டும். தனி தொகுதி வேட்பாளருக்கு ரூ.12, 500 டெபாசிட் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளருடன் அவரையும் சேர்த்து, மொத்த 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். வேட்புமனு பெறும் நிகழ்வு அனைத்து வீடியோ பதிவு செய்யப்படும். ஒவ்வொரு வேட்பாளரும் வேட்புமனு தாக்கல் செய்தவதற்கு முந்தைய நாள் தொடங்கி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் வரை புதிய வங்கி கணக்கு தொடங்கி பராமரிக்க வேண்டும். அந்த வங்கி கணக்கு வேட்புமனு தாக்கலுக்கு 2 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டிருக்க வேண்டும். வேட்புமனு தாக்கல் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மட்டுமே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி பரபரப்பான சூழலில் இன்றைய நிகழ்வுகளை உடனுக்குடன் விரிவாக பார்க்கலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -