Breaking News LIVE : மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - செல்வப்பெருந்தகை
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
பெயரை மாற்றினால் அது சீனாவுக்கு சொந்தமாகிவிடாது - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
உங்கள் வீட்டின் பெயரை நான் மாற்றினால் அது எனக்கு சொந்தமாகிவிடுமா? அருணாச்சல பிரதேசத்தில் 30 இடங்களின் பெயரை மாற்றினால் அது சீனாவுக்கு சொந்தமாகிவிடாது - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஞானவாபி மசூதியில் இந்து பக்தர்கள் பூஜை செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
பா.ம.க.வில் பூத் கமிட்டி அமைக்கக்கூட ஆட்கள் கிடையாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.
மார்ச் 30 ஆம் தேதி முன்னாள் துணை பிரதமர் அத்வானி பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட போது, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நின்று கொண்டிருப்பது போலும், பிரதமர் மற்றும் எல்.கே அத்வானி அமர்ந்திருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியானது. அப்போது, நாட்டின் குடியரசுத் தலைவரை பாகுபாடோடு நடத்துகிறார்கள் என குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதிமுகவுக்கு உயிர் கொடுத்து, பழனிசாமியை முதலமைச்சராக தொடர வைத்ததுதான் நாங்கள் செய்த துரோகம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 2019ல் 22 தொகுதி இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் அதிமுக வெற்றிபெற்றது. அதில், 5 தொகுதி பாமகவால் வெற்றி பெற்றீர்கள் என தெரிவித்தார்.
கச்சத்தீவு விவகாரத்தில், தமிழ்நாடு அரசுக்கு தெரிந்தே அனைத்து நடவடிக்கைகளும் நடைபெற்றன; கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய அரசின் முடிவுகளுக்கு கருணாநிதி சம்மதம் கூறியுள்ளார் - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
Gold Price Hike : அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. ஆபரணத் தங்கம், சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்துள்ளது
பரதநாட்டியக் கலைஞர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு..
பிரபல மோகினியாட்டக் கலைஞர் ராமகிருஷ்ணனை தரக்குறைவாக விமர்சித்த பரத நாட்டியக் கலைஞரான கலமண்டலம் சத்யபாமா மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ், கேரள போலீசார் வழக்குப்பதிவு
தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயரும் என்று அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, குறிப்பிட்ட மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை 0.00551 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 12 சதவிகிதமும், அதற்கு முந்தைய ஆண்டு 10 சதவிகிதமும் மருந்துகளில் விலை உயர்த்தப்பட்டது.
ஏப்ரல் 1 ஆம் தேதியான இன்று சென்னையில் வணிக சிலிண்டர் விலை ரூ.30 குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் ரூ.1,930க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Background
மாதத்தின் முதல் நாள் ஏப்ரல் 1ம் தேதி இன்று என்பதால் வணிகரீதியாக பல ஏற்ற இறக்கம் ஏற்பட்டுள்ளது. மகிழ்ச்சியான செய்தியுடன் தொடங்க வேண்டும் என்றால், வணிக சிலிண்டர் விலை ரூ. 30 குறைந்து ரூ. 1930க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து, அப்படியே நம்மை எல்லாம் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும் 29 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
மேலும், தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயரும் என்று அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, குறிப்பிட்ட மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை 0.00551 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 12 சதவிகிதமும், அதற்கு முந்தைய ஆண்டு 10 சதவிகிதமும் மருந்துகளில் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் பரப்புரையின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி வரும் 9ம் சென்னையில் ரோட் ஷோ மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், மக்களவை தேர்தலை முன்னிட்டு 6வது முறையாக தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி.
தொடர்ந்து, விளையாட்டு பக்கம் போனால் நேற்றைய போட்டியில் வெளுத்தெடுத்துள்ளார் எம்.எஸ்.தோனி. எப்போது பேட்டிங் வருவார் என்று எதிர்பார்த்த அவரது ரசிகர்களுக்கு எல்லாத்தையும் சேர்த்து வைத்து மொத்தமாக கொடுத்துள்ளார். டெல்லிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 16 பந்துகளில் 37 ரன்களை குவித்து கெத்து காட்டியுள்ளார் எம்.எஸ்.தோனி.
இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மற்றும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -