Breaking News LIVE: பாஜக கூட்டணியில் பாமக.. மோடியுடன் இணையும் ராமதாஸ்!
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஈரோடு மற்றும் சேலம் மாவட்டத்தில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. இரண்டு மாவட்டங்களிலும் 38.2 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது என தமிழ்நாடு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் ஜுன்=14ம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ளார். செந்தில் பாலாஜியின் காவல் மார்ச் 21-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 27-வது முறையாக காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் அதிமுக ( ஓ.பி.எஸ் ) என்ற பெயரில் போட்டியிட ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மக்களவையில் மனுதக்கல் செய்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறேன் என்று பாரிவேந்தார் தெரிவித்துள்ளார். தேர்தல் பத்திரம் மூலம் அதிக நிதிபெற்ற பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதில் எந்த முரண்பாடும் இல்லை என்றும் தெரிவித்தார்.
மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட உள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி நடைபெர உள்ளது. இந்நிலையில் திமுக கூட்டணியில் இருக்கு மதிமுகவிற்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர், கிருஷ்ணகிரி, சிவகங்கை, விருதுநகர், கரூர், கடலூர், திருநெல்வேலி, மயிலாடுதுறை, கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய 10 தொகுதிகளில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது.
அதிமுக தொகுதி பங்கீடு குழுவினருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கே.பி.முனுசாமி, வேலுமணி, தங்கமணி உள்ளிடோர் இருக்கின்றனர்.
சென்னை எழும்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் மதிமுக நிர்வாகக் குழு தொடங்கி நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியை அடையாளம் காண்பது, வேட்பாளர் தேர்வு தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது.
புதுச்சேரி, தெலங்கானா ஆளுநர் பதவியில் இருந்து தமிழிசை ராஜினாமா செய்தார்
மக்களவை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் நிலையில், அதிமுக கூட்டணியில் தேமுதிக, பாமக இடம்பெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 20 ஆம் தேதி பாமக அதிமுக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாமகவிற்கு 6 மக்களவை தொகுதியும், 1 மாநிலங்களவை தொகுதி ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட உள்ள தொகுதிகள் தொடர்பாக இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. திமுக - காங்கிரஸ் இடையே இன்று ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் சபர்மதி - ஆக்ரா அதிவிரைவு ரயில் தடம் புரண்டு விபத்து. இதையடுத்து போலீசார், தீயணைப்பு வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது முதல் தேர்தல் பரப்புரையை திருவாரூரில் தொடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
போதை பொருள் விவகாரத்தை திசை திருப்ப அதிமுக மீது அவதூறு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பொன்னேரி - மீஞ்சூர் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் புறநகர் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் காலை 9.25 முதல் 11.40 வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 6 ரயில்கள் பகுதி அளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து நாளை முதல் விருப்ப மனு பெறப்படுகிறது. மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தங்களது விருப்ப மனுவை நாளை அளிக்கலாம்.
அதிமுக - பாமக கூட்டணி இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகிறது. இதில், அதிமுக கட்சி பாமகவிற்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கும் என்பது சுவாரஸ்யமாக இருக்கும்.
மக்களவை தேர்தல் பணிகள் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மக்களவை தேர்தல் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.
நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான டிக்கெட் இன்று விற்பனை செய்யப்பட இருக்கிறது.
பிரதமர் மோடி இன்று கோவையில் ரோட் ஷோ எனப்படும் வாகன பேரணியில் ஈடுபட உள்ளார்.
டெல்லியில் நாலை காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் வழங்கும் காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிக்கு ஒப்புதல் பெறப்படுகிறது.
Background
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் தொடங்கி நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேர்தல் ஆணையம் சனிக்கிழமை அறிவித்தது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் முக்கியமாக தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற வேண்டும் என்பதற்காக போராடி வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் பாஜக கூட்டணியில் அம்முக, தமிழ் மாநில காங்கிரஸ், ஓபிஎஸ், ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த வாரத்தில் கன்னியகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றினார் பிரதமர் மோடி. அதேபோல் 6வது முறையாக இன்று தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர், கோவை மாவட்டத்தில் நடைபெறும் ரோடு ஷோவில் கலந்துக்கொள்கிறார். இதனை தொடர்ந்து மீண்டும் 22 ஆம் தேதி அவர் தமிழ்நாட்டிற்கு வருகை தருகிறார்.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 10 இடங்கள் என்ன என்பது குறித்து இன்று முடிவாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதேபோல் அதிமுக தரப்பில் தொடர்ந்து கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று பாமக மற்றும் தேமுதிக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை முடிவாகும் என கூறப்படுகிறது. இன்று அதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. மேலும், மக்களவை தேர்தல் பணிகள் குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ ஆலோசனை இன்று நடத்துகிறார். இத்துடன், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் யார் யார் என்ற பட்டியல் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது.
அதேபோல், நாம் தமிழர் கட்சி தரப்பில் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கி தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், அந்த சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி முன் விசாரணைக்கு வருகிறது.
இரண்டு நாட்களுக்கு முன் இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ் அணியினர் பயன்படுத்த அனுமதி தர வேண்டும் என்ற கோரிக்கை முன் வைத்து தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியிருந்தார். இதனை தொடர்ந்து இரட்டை இலை சின்னம், கட்சி பெயர், கொடி ஆகியவற்றை ஓபிஎஸ் நிரந்தமாக பயன்படுத்த தடை விதிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிற்பகல் 2.15 மணிக்கு தீர்ப்பளிக்கிறது. ஏற்கனவே, இறுதி தீர்ப்பு வரும் வரை கட்சி, சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்த மாட்டேன் என கோர்ட்டில் உத்தரவாதம் அளித்து, அதனை பின்பற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நாடு முழுவதும் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து காணலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -