Breaking News LIVE: பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும்” ; மும்பை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
மும்பையில் நடைபெறும் இந்தியா அணி கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மக்களை பிளவுப்படுத்தும் பாஜகவை அகற்ற வேண்டும் என தெரிவித்தார்.
லாட்டரி சீட்டு, சூதாட்டம் நடத்தும் நிறுவனத்திடம் 509 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலமாக திமுக பெற்றுள்ளது இன்று அம்பலமாகியுள்ளது. மக்களின் உழைப்பை சுரண்டி உயிரைக் குடிக்கும் பாவப்பணத்தை பெற்றிருக்கும் திமுக கட்சியின் தலைவர் ஸ்டாலினுக்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Electoral Bonds DMK : தேர்தல் பத்திரங்கள் வழியாக திமுக பெற்ற தொகை : ரூ.656.5 கோடி. ரூபாய் 509 கோடி, லாட்டர் கிங் மார்டினின் ஃப்யூச்சர் கேமிங் நிறுவனத்திடம் பெறப்பட்டதாகும் - தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட தே.மு.தி.க. சார்பில் விருப்பமனு பெறப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட நன்கொடை தொடர்பான புதிய தகவல்களை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. நன்கொடை வழங்கியவர்களின் பெயர், எந்த அரசியல் கட்சி எவ்வளவு நன்கொடை பெற்றது தொடர்பான தகவல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டது.
விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் 199 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 19ம் தேதி அந்த சட்டமன்ற தொகுதியில், இடைதேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
திருச்சி மாவட்டம் துவாக்குடி பகுதியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள நடுக்குப்பம் கிராமத்தில் அமைந்திருக்கும் திரௌபதி அம்மன் கோவிலில் கடந்து 8 ஆண்டுகளுக்கு முன் திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக அக்கோவிலில் திருவிழா நடத்த அதிகாரிகள் தடை வித்தனர். இந்த நிலையில் கடந்த 8 ஆண்டுகளாக திருவிழா நடத்த அனுமதி கோரி பலமுறை அதிகாரிகளை சந்தித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் தற்பொழுது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக ஒன்று கூடி முடிவு செய்து அறிவித்துள்ளனர்.
ராகுல் காந்தியின் இந்தியா ஒற்றுமை நியாய யாத்திரை மும்பையில் இன்று நிறைவடைகிறது. இதையொட்டி, I.N.D.I.A. கூட்டணி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
18 வ்யதை பூர்த்தி செய்தவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்க்க இன்றே கடைசி நாளாகும். அருகில் உள்ள பள்ளிகள் போன்றவற்றில் நடைபெறும் பெயர் சேர்ப்பு முகாமிற்கு சென்றும், இணையதளம் வாயிலாகவும் பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்க்கலாம்.
Background
தமிழக மக்களே காலையில் எழுந்ததும் நாம் அனைவருக்கும் ஒவ்வொரு தேடல்கள் கண்டிப்பாக இருக்கும். இன்றைய நாளை எப்படி கடக்கப்போகிறோம் என்பதே சில பேருக்கு யோசனையாக இருக்கும். நம் வீட்டு காரியங்களை கவனிப்பது மட்டும் அல்லாமல் அவ்வபோது நாட்டு நடப்புகளையும் தெரிந்து வைத்து கொள்வது நல்லதுதானே.. அதற்காக ஏபிபி வழங்குகிறது சுட சுட பிரேக்கிங் நியூஸ்.
நேற்று என்னெவெல்லாம் நடந்தது, இன்று என்ன நடக்கப்போகிறது... நாளை என்ன நிகழ்வுகள் நடக்கும் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
நேற்றைய தினம் நாடே எதிர்பார்த்து காத்திருந்த ஜனநாயக திருவிழாவுக்கான தேதியை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதாவது மக்களவை தேர்தல் தேதியைதான் சொல்றோம்.
அதன்படி பார்த்தீங்கன்னா இன்னும் 3 நாட்கள்ல ஜனநாயக திருவிழாவுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்குது. அதாவது மார்ச் 20ஆம் தேதி.
மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடக்க போகுது. தமிழ்நாட்டில் முதல்கட்டத்திலேயே வாக்குப்பதிவு நடக்கப்போகுது. அதாவது ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்குது. இதுமட்டுமில்லாம இன்னும் பல்வேறு கட்டங்களா பல்வேறு மாநிலங்களில் மக்களவை தேர்தல் நடக்க இருக்குது.
இது இப்படி இருக்க இன்னைக்கு திடீரென இலங்கை மீனவர்கள் 21 தமிழக மீனவர்கள் கைது பண்ணி வச்சிருக்காங்க. நேற்றுதான் தமிழ்நாடு மீனவர்கள் விவகாரத்தில் விஸ்வகுரு என மார்தட்டும் பிரதமர் மோடி மவுன குருவானது ஏன்? என்று முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினாரு. அதுக்குள்ள இன்னைக்கு 21 மீனவரக்ளை புடிச்சிட்டு போய்ட்டாங்க. இதுக்கும் ஒரு கடிதம் எப்படியும் முதல்வர் எழுதிடுவாரு.
சரி தேர்தல் கதைக்கு வருவோம். ஒரு பக்கம் தேர்தல் தேதியை அறிவிச்சிட்டாங்க. ஆனால் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணியவே முடிவு பண்ணாம அல்லாடிகிட்டு இருக்காங்க. இதுல திமுக கொஞ்சம் பரவாலன்னு சொல்லலாம். பெரும்பாலம் தொகுதி பங்கீட்டை முடிச்சி யாருக்கு எந்த தொகுதியை கொடுக்கலாம்ங்கற வரைக்கும் முடிவு பண்ணிட்டாங்க. ஆனால் பாஜகவோ, அதிமுகவோ யாருக்கூட கூட்டணி வைக்குறாங்கன்னே தெரியல. இன்னும் பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தைன்னுதான் போய்ட்டு இருக்கு.
அந்த வகைல அதிமுக தேமுதிக இன்று 3ஆம் கட்ட ரகசிய பேச்சுவார்த்தை நடக்குதாம்.
அப்புறம் இன்னைக்குதான் வாக்காளர் பட்டியல்ல பெயர் சேர்க்க கடைசி நாள். அதையும் நியாபகத்துல வச்சிக்கோங்க. 18 வயதுக்கு மேல ஆச்சின்னா வாக்காளர் பட்டியல்ல பெயர் சேர்க்கலைன்னா உங்க ஜனநாயக கடைமைய நீங்க ஆற்ற முடியாது மக்களே!
தேர்தல் அறிவிச்சதால நடத்தை விதிமுறைகள் நேற்றே அமலுக்கு வந்துடுச்சி. அதுனால ரூ.50 ஆயிரத்துக்கு மேல எங்கேயும் எடுத்து செல்லாதீங்க. தகுந்த ஆவணங்கள் வச்சிக்கோங்க. இல்லைன்னா பறிமுதல்தான்.
இதுக்கு இடைல நைஜீரியாவுல இரண்டு சமூகங்களுக்கு இடையில மோதல் போக்கு நிலவியதுல 4 அதிகாரிகள் உயிரிழந்துருக்காங்க... மொத்தமாக 16 பேர் உயிரிழந்துருக்காங்க. அமெரிக்காவில் 2 அடி நீள வளர்ப்பு பல்லி கடிச்சதுல அதை வளர்த்த உரிமையாளர் இறந்த சம்பவம் அரங்கேறி இருக்கு.
இன்று இன்னும் பல சம்பவங்கள் காத்திருக்கு. அதை தெரிஞ்சிக்க இந்த பிரேக்கிங் நியூஸ் லைவ் பக்கத்தை பார்த்துட்டே இருங்க
- - - - - - - - - Advertisement - - - - - - - - -