Breaking Tamil LIVE: முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி காலமானார்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி சென்னையில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் நடைபெறும் மக்களவைத் தேர்தல் ஜனநாயகமா? சர்வாதிகாரமா? என்பதை தீர்மானிக்கும் தேர்தல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
எம்.ஜி.ஆரின் கனவுகளை பா.ஜ.க. முன்னெடுத்துச் செல்கிறது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நெல்லையில் பரப்புரை மேற்கொள்ள அம்பாசமுத்திரம் வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. கேரளாவிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் நெல்லை வந்துள்ள பிரதமர், நெல்லை, தென்காசிம், விருதுநகர்,குமரி, தூத்துக்குடி விளவங்கோடு ஆகிய பகுதி வேட்பாளர்களுக்காக தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தலையாட்டி பொம்மை போல உள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் கார்கே பேசியுள்ளார்.
Gujarat Businessman Bhavesh Bhandari : 200 கோடி ரூபாய் சொத்தை துறந்து துறவறம் மேற்கொள்ளும் குஜராத் தொழிலதிபர் பவேஷ் பந்தாரி.
கடந்த பிப்ரவரி மாதம், பவேஷ் பந்தாரியும் அவரது மனைவியும் ஒரு நிகழ்ச்சி வைத்து, தங்களின் 200 கோடி ரூபாய் சொத்தை பிரித்தளித்துவிட்டனர். இந்த மாத இறுதியில் அவர்கள் துறவறம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பந்தாரியின் மகளும், மகனும் ஏற்கெனவே துறவற தீட்சை பெற்று துறவறம் மேற்கொண்டுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
தென்மேற்கு பருவமழை இந்த முறை இயல்பை விட கூடுதலாகப் பெய்யும். ஜுனுக்குப் பிறகு தொடங்கும் தென்மேற்கு பருவ மழை இம்முறை செப்டம்பர் வரை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
தர்பூசணி பழம் வெட்டி கொடுத்து நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் பாஜக சார்பில் போட்டியிடும் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அஸ்வத்தாமன்
பாஜக சார்பில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அஸ்வத்தாமன் போட்டியிடுகிறார் அதன் காரணமாக திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிகளான கசிநாயக்கன்பட்டி,பெரியகரம்,மானவள்ளி, கெஜல்நாயக்கன்பட்டி,கந்திலி, சின்னக்கந்திலி,கும்மிடிகாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கும்மிடிகாம்பட்டி பகுதியில் வாக்கு சேகரிக்கும்போது சாலையின் ஓரத்தில் தர்பூசணி கடை வைத்து கொண்டிருந்த நபரிடம் தர்பூசணி பழங்களை வாங்கி அதனை வெட்டி அப்பகுதி மக்களுக்கு கொடுத்து நூதன முறையில் வாக்கு சேகரித்தார்.
GST: வரி அல்ல… வழிப்பறி! “தன் பிணத்தின் மீதுதான் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த முடியும்” என்று முதலமைச்சராக எதிர்த்த திரு. நரேந்திர மோடி, பிரதமரானதும், “ஜி.எஸ்.டி பொருளாதாரச் சுதந்திரம்’’ என்று ‘ஒரே நாடு ஒரே வரி’ கொண்டு வந்தார். பேச நா இரண்டுடையாய் போற்றி! ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜி.எஸ்.டி.யா? ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், Bill-இல் உள்ள GST-யைப் பார்த்து #GabbarSinghTax எனப் புலம்புகின்றனர்! அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் GST கட்ட வேண்டுமா? 1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பா.ஜ.க.வால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா? ஜி.எஸ்.டி-யில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜி.எஸ்.டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜி.எஸ்.டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள். ஏழைகளைச் சுரண்டும் இந்த முறையை மாற்ற #Vote4INDIA!
தஞ்சை பெரிய கோயில் சித்திரை தேர்த்திருவிழாவினை முன்னிட்டு வரும் ஏப்.20ம் தேதி (சனிக்கிழமை) தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவிப்பு
Raghuram Rajan PM Modi : நான் மோடி அரசிடமும் பணிபுரிந்திருக்கிறேன். கொள்கைக்காக விமர்சிக்கிறேன் - ரகுராம் ராஜன்
நான் மோடி அரசிலும் 28 மாதங்கள் பணிபுரிந்திருக்கிறேன். மற்றவர்கள் விமர்சிக்காத காரணத்தால் நான் விமர்சிக்கிறேன். நல்ல கொள்கை வேண்டும் என்பதற்காக விமர்சனங்களை முன்வைக்கிறேன் - தனியார் தொலைக்காட்சிக்கு ரகுராம் ராஜன் அளித்த நேர்காணல்
Ø இது தகவல் அறியும் சட்டத்தின் துணை கொண்டு வெளிவந்த ஊழல் – வீட்டுக் கடன் ஊழல்
கோவா மாநில பா.ஜ.க.அரசின் தொழில் துறை அமைச்சர் மகாதேவ் நாயக்- கோவா அரசின் எம்.எல்.ஏ.க்களுக்கான வீட்டு வசதித் திட்டத்தில் வெறும் 2 சதவீத வட்டியில் ஏற்கனவே உள்ள நிலத்தில் வீடுகளைக் கட்ட அல்லது குடியிருப்பு நோக்கத்திற்காகப் புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவதற்காக அனுமதிக்கப்படும் நிதியில் புதிய வணிக வளாகங்களை வாங்கிடத் தவறாகப் பயன்படுத்தினார் என்று தகவல் அறியும் உரிமைச் சட்ட RTI ஆவணத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
Ø கும்பமேளா ஊழல் - சி.ஏ.ஜி. வெளிப்படுத்திய ஊழல்
o உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியில் 2010-ஆ ஆண்டு கும்பமேளா கொண்டாட ஒன்றிய அரசு ரூ.565 கோடி வழங்கியது. இந்த நிதி தவறாகப் பயன்படுத்தட்டதால் பல வளர்ச்சிப் பணிகள் முடிவடையாமல் பாழானது. சி.ஏ.ஜி. தணிக்கை அறிக்கை ரூ.180.07 கோடி மதிப்பிலான 54 வளர்ச்சிப் பணிகள் முழுமையடையாமல் விடப்பட்டன என்று கூறி உத்தரகாண்ட் பா.ஜ.க. ஆட்சி ஊழலை வெளிப்படுத்தியுள்ளது.
Ø ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. ஆட்சி ஊழல்
பொது சுகாதாரப் பொறியியல் துறைக்கு நியாயமற்ற விலையில் எல்.இ.டி. பல்புகள் கொள்முதல் செய்யப்பட்டு கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
அதாவது 15 வாட் பல்பு ஒன்று ரூ.15,000 : 9 வாட் பல்பு ஒன்று ரூ.972: 12 வாட் பல்பு ஒன்று ரூ.12,000 என வாங்கி ரூ.2 கோடி கொள்ளையிடப்பட்டுள்ளது.
Ø IL and FS ஊழல்
இன்ப்ரா ஸ்ட்ரக்கர் லீசிங் பைனான்சியஸ் சர்வீஸ் நிறுவனம் 31.3.2018 நிலவரப்படி வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் சாதாரண முதலீட்டாளர்களுக்கு 91 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 900 சதவீதம் குறைந்து; அதன் கடன் 44 சதவீதம் அதிகரித்துள்ளது. இப்போது கடனைத் திருப்பிச் செலுத்த வழியில்லை. ரேட்டிங் ஏஜென்சிகளால் அதன் பங்கு பயனற்றது என தற்போது வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் IL and FS நிறுவனங்களுக்குக் கடன் வழங்கிய இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் எல்.ஐ.சி, ஸ்டேட் பேங்க், சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா ஆகியவை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
Ø அமித்ஷாவின் மகன் ஊழல்
மோடி பிரதமர் ஆன பிறகு இன்றைய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவிற்குச் சொந்தமான நிறுவனத்தின் வர்த்தகம் ஒரே ஆண்டில் 16,000 மடங்கு அதிகரித்து – அதன் வருவாய் வெறும் ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.80 கோடிக்கு மேல் அதிகரித்தது. இத்தனைக்கும் அந்த நிறுவனத்தில் எந்த வர்த்தகமும் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது
Ø ரபேல் ஊழல்
காங்கிரஸ் தலைமையில் இருந்த ஒன்றிய ஆட்சியின்போது பிரெஞ்சு நாட்டு ரபேல் போர் விமானங்களை வாங்கிடப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. அப்போது ஒரு விமானத்தின் விலை ரூ.526 கோடி என நிர்ணயிக்கப்பட்டது. மோடி ஆட்சி அமைந்த பின் ரூ.1,660 கோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு 36 விமானங்களின் மொத்த விலை ரூபாய் 60 ஆயிரம் கோடி என முடிவு செய்யப்பட்ட கொடுமை நிகழ்ந்தது.
Ø நீரவ் மோடியின் மெகா ஊழல்
இந்தியாவில் இதுவரை நடைபெறாத மிகப் பெரிய ஊழல் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நகைக்கடை மற்றும் வடிவமைப்பாளரான நீரவ் மோடிக்கு ரூ.22 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டு நீரவ் மோடியும் அவரது உறவினர் மெகுல் சோக்சியும் கடனை வங்கிக்குச் செலுத்தாமல் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்று விட்டனர். இந்த மோசடி தொடர்பாக 2016 ஆம் ஆண்டிலேயே செபி (SEBI), அமலாக்கத்துறை, புலனாய்வுத்துறை ஆகியவற்றுக்குப் புகார்கள் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நீரவ் மோடி 23.1.2018 அன்று வெளிநாட்டில் டாவோஸ் நகரில் பிரதமர் மோடி பங்கேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருடன் மேடையில் வீற்றிருந்தார் என்றால் என்ன அர்த்தம்?. இது எந்த வகை ஊழல் என்று சிந்திக்க வேண்டும் மக்கள் !
Ø மற்றொரு பொருளாதாரக் குற்றவாளி விஜய் மல்லையா
சி.பி.ஐ. விஜய் மல்லையாவைத் தேடப்படும் குற்றவாளி என அறிவித்தது. பல வங்கிகளில் அவர் வாங்கிய கடன்களைத் திரும்பச் செலுத்தாமல் அவர் மீது சி.பி.ஐ. வழக்கு புனைந்து எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்ல அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இது பா.ஜ.க.வின் மிகப்பெரிய ஊழல் செயல் அல்லவா !
Ø மோடி - அதானி - அம்பானி ஊழல்
மோடி பிரதமர் ஆனது முதல் உலகில் அவர் செல்லாத நாடுகள் இல்லை எனும் அளவுக்கு எல்லா நாடுகளுக்கும் விமானப் பயணம் சென்றுள்ளார்.
அப்படி அவர் பயணம் செய்த போதெல்லாம் அவருடன் பயணம் செய்தவர்கள் அதானியும் அம்பானியும். இது உலகம் அறிந்தது. மோடியின் இந்தப் பயணங்களால் பயனடைந்தவர்கள் யார் ?
இந்திய மக்கள் அல்ல ! அம்பானியும் அதானியும் தான் !.
Ø மோடி 2014-இல் ஆஸ்திரேலியா சென்றார். உடன் சென்ற அதானிக்கு அங்கு ரூ.6,200 கோடி மதிப்புள்ள நிலக்கரி ஒப்பந்தம் கிடைத்தது. அடுத்து பிரான்ஸ் சென்றார். அங்கு அம்பானிக்கு ரூ.58,000 கோடி ரஃபேல் விமான ஒப்பந்தம் கிடைத்தது.
2016-இல் மோடி ஈரான் சென்றார். அங்கு அவருடன் சென்ற அதானிக்கு சதார் துறைமுக ஒப்பந்தப் பணி ரூ.4000கோடி கிடைத்தது.
2017 மோடி இஸ்ரேல் சென்றார். அப்போது அவருடன் பயணித்த அம்பானிக்கு ரூ.65000 கோடி வான்வழி ஏவுகனை ஒப்பந்தம் கிடைத்தது.
அதே ஆண்டில், அடுத்த முறை இஸ்ரேல் சென்ற மோடியுடன் பயணித்த அதானிக்கு ரூ.1,500 கோடி ஆளில்லா விமானத் தயாரிப்பு ஒப்பந்தம் கிடைத்தது.
2018 – ஸ்வீடன் நாட்டிற்குச் சென்ற மோடியுடன் பயணித்தவர் அதானி. அங்கு அவருக்கு ரூ.60 ஆயிரம் கோடிக்கான ஒற்றை என்ஜின் போர் விமானத் தயாரிப்பு ஒப்பந்தம் கிடைத்தது.
அதே ஆண்டில் அம்பானியுடன் பயணித்த பிரதமர் மோடி அவர்களால் 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான - அமெரிக்காவின் 7வது கடற்படை பராமரிப்பு ஒப்பந்தம் அம்பானிக்குக் கிடைத்தது.
இப்படி பெரும் முதலாளிகளுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கிடைத்ததே பிரதமர் அவர்களின் இந்தப் பயணங்களால். இந்திய மக்களுக்கு என்ன பயன் ?
இப்படி எண்ணற்ற ஊழல்களின் உறைவிடமாகத் திகழ்பவர் இன்று புதுவேடமிட்டு வருகிறார். எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே! சத்தியம் தவறாத உத்தமர் போல் நடிக்கும் மோடியின் உண்மையான வேடங்களை பொது மக்கள் அறியட்டும்.
நாளை மறுநாள் 17ம் தேதி மாலை 6:00 மணி வரை தேர்தல் பிரசாரம் செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு தேர்தல் கமிஷனர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புலாணி அடுத்த ஆணைகுடி கிராமத்தில் தனியார் உப்பளம் அமைக்க அனுமதி வழங்க கூடாது என வலியுறுத்தி, கருப்புக்கொடி ஏந்தி நாடாளுமன்ற தேர்தலை கிராம மக்கள் புறக்கணித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட கேசிஆர் மகள் கவிதாவுக்கு ஏப்ரல் 23ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகரராவ் மகள் கவிதா அமலாக்கத்துறையால் கைதாகி சிறையில் உள்ளார்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்தி சாலை அருகே தேரடியில் எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனித் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகர் ஆதரித்து திறந்தவெளி வாகனத்தில் நின்று கொண்டு பரப்பரை மேற்கொண்டு வருகிறார்.
நீலகிரி மாவட்டம் பந்தூரில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார். வயநாடு செல்லும் வழியில் நீலகிரி வந்த ராகுல், தேயிலை தொழிலாளர்களுடன் பேசினார்.
7 மாவட்டங்களில் மிதமான மழைப்பு வாய்ப்பு
நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை உட்பட 7 மாவட்டங்களில் மதியம் ஒரு மணிக்குள்ளாக, மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வயநாடு தொகுதிக்கு செல்லும் வழியில் நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதிக்கு ராகுல் காந்தி வருகை தந்தார். அப்போது, ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தமிழ்நாடு பொதுமேடை அமைப்பு சார்பில் கோவையில் இன்று மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. பாசிச பாஜகவை தோற்கடிக்க, இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்ய இந்த பொதுக்கூட்டம் என தமிழ்நாடு பொதுமேடை அமைப்பு தெரிவித்துள்ளது.
Gold Rate April 15 : தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்துள்ளது. சற்றே ஆசுவாசமடைந்தனர் மக்கள்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 520 குறைந்துள்ளது. இதையடுத்து ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 6, 790க்கும், ஒரு சவரன் ரூ. 54, 320க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் அன்பழகன் வீட்டில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதால் பரபரப்பு - குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றிருந்த நேரம் மர்ம நபர்கள் கைவரிசையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு தமிழ்நாட்டில் அனைத்து தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மாணவர், இளைஞர், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்களை வஞ்சிக்கும் மோடி அரசை அகற்றி நாட்டை பாதுகாக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
மக்களவை தேர்தல் பரப்புரைக்காக இன்று தமிழ்நாடு வருகிறார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே. புதுச்சேரியில் இன்று காலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே உரையாற்ற உள்ளார்.
ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்களுக்கு, கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரையிலான கிழக்குக் கடற்கரைப் பகுதியில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளது.
ஐபிஎல் 2024ன் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதவுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இதுவரை இந்த சீசனில் 6 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியுடன் புள்ளிகள் பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 போட்டிகளில் 3 வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உள்ள அகஸ்தியர்பட்டியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இன்று பிரதமர் மோடி, திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி பாஜக வேட்பாளர் பொன் ராதா கிருஷ்ணன், தூத்துக்குடி தமாக வேட்பாளர் எஸ்டிஆர் விஜயசீலன், தென்காசி வேட்பாளர் ஜான் பாண்டியன் ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு கேட்கிறார்.
இதையடுத்து, இன்று திருநெல்வேலியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Background
- 2திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உள்ள அகஸ்தியர்பட்டியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இன்று பிரதமர் மோடி, திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி பாஜக வேட்பாளர் பொன் ராதா கிருஷ்ணன், தூத்துக்குடி தமாக வேட்பாளர் எஸ்டிஆர் விஜயசீலன், தென்காசி வேட்பாளர் ஜான் பாண்டியன் ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு கேட்கிறார்.
- நேற்று சூலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில் நேற்றிரவு 10:30 மணி அளவில் சிந்தாமணி புதூரில் இருந்து ஒண்டிப்புதூர் வரும் வழியில் அவருடன் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர். இரவு 10 மணியுடன் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி இல்லை என்ற நிலையில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பிரச்சாரம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
- கருணாநிதி குடும்பத்திற்கு மிக நெருக்கமானவர் ஜாபர் சாதிக் உலகம் முழுவதும் போதைப்பொருள் சப்ளை செய்துள்ளார். திமுக பொறுப்பில் இருப்பவர்கள் போதைப்பொருள் விற்கின்றனர். தேர்தலை முன்னிட்டு மகளிர் உரிமைத்தொகை என ஆயிரம் கொடுத்து மாமியார் மருமகளுக்கு சண்டை விட்டுள்ளனர் என முன்னாள் அமைச்சர் கேசி.வீரமணி பேச்சு
ஐபிஎல் 2024ன் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதவுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இதுவரை இந்த சீசனில் 6 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியுடன் புள்ளிகள் பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 போட்டிகளில் 3 வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -