Breaking News LIVE: சென்னை அருகே நிலநடுக்கம் : 3.9 ரிக்டர் அளவில் பதிவானது..
Breaking News Live: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் காணலாம்.
சென்னை அருகே நிலநடுக்கம்:
ஆந்திர பிரதேசம் மாவட்டத்தில் திருப்பதியில் மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.9 புள்ளியாக பதிவானது. சென்னையில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
மம்தா பானர்ஜி நெற்றியில் பலத்த காயம்
Electoral Bonds: தேர்தல் பத்திரங்கள்; தேதிவாரியாக பணம் அளித்தவர்கள் விவரத்தை வெளியிட்டது தேர்தல் ஆணையம்
தேர்தல் பத்திரங்கள் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றியது தேர்தல் ஆணையம்
அரைவேக்காட்டுத்தனமாக பேசும் எடப்பாடி பழனிசானி - அண்ணாமலை
பாஜக ஆளும் மாநிலங்களில் போதைப்பொருள் பிடிபடுவதாக எடப்பாடி பழனிசாமி பேசியது அரைவேக்காட்டுத்தனம். பாஜக ஆளும் மாநில எல்லைகளில் போதைப் பொருள்கள் பிடிக்கப்பட்டு, தடுக்கப்படுகின்றன - அண்ணாமலை
Rahul gandhi In Jyotirlinga Temple : மஹாராஷ்ட்ர மாநிலம் நாசிக்கில் இருக்கும் திரியம்பகேஸ்வர ஜோதிர்லிங்க கோவிலில் பிரார்த்தனையில் கலந்துகொண்ட ராகுல் காந்தி
தி.மு.க. ஆட்சியில் சென்னை மீண்டும் புதுப்பொலிவு பெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக வரும் மே மாதம் முதல் தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.
Monkeys Entering Homes of Bengaluru : தண்ணீரையும், உணவையும் தேடி பெங்களூரு வீடுகளுக்குள் படையெடுக்கும் குரங்குகள்..
தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், குரங்குகள் தண்ணீரையும், உணவையும் தேடி பெங்களூரு வீடுகளுக்குள் படையெடுக்கத் தொடங்கிவிட்டதாக பெங்களூரு மாநகராட்சி நிர்வாகத்துக்கு புகார்கள் குவிந்து வருகின்றன. பசி தாங்க முடியாமல் அவை மனிதர்களை தாக்கவும் தொடங்கியுள்ளதாக புகார் குவிகின்றன. “நாம் அவற்றின் குடியிருப்பு பகுதிகளை அழித்துவிட்டதால், இப்போது அவை நம் வீடுகளுக்குள் புகுந்துவிடுகின்றன” என நகரவாசி ஒருவர் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு தெரிவித்திருக்கிறார்.
Annamalai TO CM Mk Stalin : முதலமைச்சர் ஸ்டாலின் தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்க்கிறாரா? எத்தனை நோட்டீஸ் அனுப்பினாலும் சர்வதேச போதை மருந்து சந்தையில் திமுகவின் பங்கினை அம்பலப்படுத்தாமல் விடமாட்டோம் - அண்ணாமலை
100 நாள் வேலை திட்டத்திற்கான நிலுவைத் தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நெல்லை டவுண் சொக்கட்டான் தோப்பு அருகே ரேசன் கடையை திறந்து வைத்த நெல்லை எம் எல் ஏ நயினார் நாகேந்திரன் அப்பகுதியில் உள்ள மக்களிடம் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வாக்கு சேகரித்துள்ளார்.
இதன்மூலம் நெல்லை தொகுதியில் பாஜக போட்டியிடுவது உறுதியானதாக தெரிகிறது. வேட்பாளர் அறிவிப்பதற்கு முன்னரே நயினார் நாகேந்திரன் வாக்கு சேகரித்தது அவர் போட்டியிடுவது உறுதியானதாகவும் தெரிய வருகிறது.
நாடு முழுவதும் ஒரே கட்டமாக மக்களவை, சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது. 18 ஆயிரத்து 626 பக்க அறிக்கையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் ஒப்படைத்தது.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை மீது முதலமைச்சர் சார்பாக அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த அவதூறு வழக்கில், போதைப்பொருட்களைத் தடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார் எனவும் முதலமைச்சரின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமியும் அண்ணாமலையும் பேசி வருவதாக குறிப்பிட்டுள்ளது மட்டும் இல்லாமல் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
கடந்த அக்டோபர் மாதம் சந்திரபிரியங்கா அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அவர் வகித்து வந்த அமைச்சர் பதவி காலியாக வைக்கப்பட்டது, இந்நிலையில் 5 மாதங்களுக்கு பிறகு தற்போது திருமுருகன் அமைச்சராக பதவி ஏற்றார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா செங்கல்பட்டில் நடைபெறுகின்றது
இந்த விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துக்கொண்டு 15 கோடி ரூபாய் மதிப்பிலான மாவட்ட விளையாட்டு வளாகம் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்
தொடரந்து செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி வருகிறார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு 5-வது முறையாக நாளை தமிழ்நாடு வருகிறார்
குறிப்பாக நாளை கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு தனி விமான மூலம் வந்திறங்குகிறார்
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் வரவேற்க உள்ளார்கள்
மேலும் திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வருகிறார்
கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையிலிருந்து சாலை மார்க்கமாக பொதுக்கூட்டம் நடைபெறும் விவேகானந்தர் கல்லூரிக்கு செல்கிறார்
காலை 11.15 மணி முதல் 12.15 மணிவரை விவேகானந்தர் கல்லூரியில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றுகிறார்
வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் நீர் மோர் வழங்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை பல்லாவரத்தில் உள்ள எஸ்.டி.கொரியர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனியின் சகோதரர் அன்சாரி அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.
தி.நகர், பல்லாவரம், திருவான்மியூர், முகப்பேர், கொளத்தூர் உள்ளிட்ட 10 பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தி.நகர் பசுல்லா சாலையிலுள்ள நரேஷ் என்பவரின் சாய் சுக்கிரன் என்ற நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை. தேசிய நெடுஞ்சாலையில் பெயிண்ட் அடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருபவர் நரேஷ்.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ. 48,080 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.6,135 விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.52,840 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,605 ஆகவும் விற்பனையாகிறது.
நாம் தமிழர் கட்சியிடமிருந்த கரும்பு விவசாயி சின்னத்தை பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கியது இந்திய தேர்தல் ஆணையம். 2024 மக்களவைத் தேர்தலில், தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி அறிவித்துள்ளது.
வீட்டு வசதி வாரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி மேல்முறையீடு செய்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற மாட்டோம் என்றும், பாஜக தலைமையிலான அரசு அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
4,000 உதவிப் பேராசிரியர் காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. மார்ச் 28-ம் தேதி முதல் ஏப்ரல் 29-ம் தேதி மாலை 5 மணி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 04-ம் தேதி தேர்வு நடைபெறும் என டிஆர்பி அறிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம் கலபுரகியில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசினார். அப்போது பேசிய அவர், “வங்கி கணக்குகளை முடக்கிவிட்டதால் தேர்தலில் செலவு செய்ய எங்களிடம் பணம் இல்லை. பொதுமக்கள் வழங்கிய நன்கொடைகள் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.
சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பான அறிக்கையை இன்று தாக்கல் செய்கிறார் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு. இருப்பினும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இதை கொண்டு வருவது சாத்தியமில்லை என நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒரு தொகுதி எது என்பது இன்று முடிவாகிறது. ஒரு மக்களவை தொகுதி எந்து என்பது அடையாளம் காணப்பட்டு இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இதையடுத்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று சென்னை அண்ணா அறிவாலயம் வர உள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் நான்கு ஆயிரம் உதவிப் பேராசிரியர்களுக்கான காலி பணியிடங்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
ஆளுநர் ரவி ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்ததன் அடிப்படையில் மூன்று நாட்கள் பயணமாக டெல்லி செல்கின்றார். வரும் 16ஆம் தேதி பயணம் முடிந்து தமிழ்நாடு திரும்பவுள்ளார். பொன்முடி இன்று அமைச்சராக பொறுப்பேற்கவிருந்த நிலையில் ஆளுநர் டெல்லி பயணம்.
Background
ஒட்டுமொத்த இந்தியாவும் தற்போது மக்களவைத் தேர்தலுக்கு தயாராகி வருகின்றது. அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களைச் சந்திப்பதும், ஊடகங்களைச் சந்திப்பதும் என ஒட்டு மொத்தம் நாடுமே 18வது மக்களவைத் தேர்தல் திருவிழாவிற்கு ஆயத்தமாகி வருகின்றது. ஏற்கனவே 195 மக்களவைத் தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்களை அறிவித்திருந்த நிலையில், நேற்று புதிதாக 72 தொகுதிகளுக்கு வேட்பளர்களை அறிவித்துள்ளது. இதனால் தேர்தல் களத்தில் மற்றக் கட்சிகளைவிடவும் பாஜக தற்சமயம் முன்னிலையில் உள்ளது.
மத்திய அரசியல் இவ்வாறு இருக்க தமிழ்நாட்டில் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதனால் இந்த தீர்ப்பின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் பொன்முடியிடம் இருந்து பறிக்கப்பட்ட அமைச்சர் பொறுப்பும் சட்டமன்ற உறுப்பினர் அந்தஸ்தும் திருப்பி வழங்கப்பட வாய்ப்புள்ளது என பேச்சுகள் எழுந்தது. அதுபோலவே உச்சநீதிமன்ற தீர்ப்பு நகலை மையமாகக் கொண்டு சட்டமன்ற செயலகம் பொன்முடிக்கு சட்டமன்ற பொறுப்பை திரும்ப வழங்கி, திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினராக பொன்முடியே தொடர்வார் என தெரிவித்தது. மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பு நகலை மையமாக வைத்து பொன்முடிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கவும் பொன்முடியை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கவும் ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரைக் கடிதம் எழுதியதாக தகவல்கள் வெளியாகியது. இதனால் இன்று பொன்முடி அமைச்சராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி மூன்று நாள் பயணமாக டெல்லி செல்கின்றார். இதனால் ஆளுநர் ரவி 16ஆம் தேதி தமிழ்நாடு திரும்புவார். அதுவரை பொன்முடி அமைச்சராக பொறுப்பேற்க முடியாது. ஏற்கனவே தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் தொடர்ந்து மோதல் ஏற்பட்டுவரும் நிலையில் பொன்முடி விவகாரத்தில் ஆளுநர் ரவி என்னமாதிரியான நடவடிக்கையை மேற்கொள்ளப்போகின்றார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரையில் திமுக தலைமையிலான கூட்டணி ஏற்கனவே தொகுதிப் பங்கீடு வரை சென்று மற்ற கூட்டணிகளைவிடவும் தேர்தல் களத்தில் முன்னிலையில் உள்ளது. ஆனால் பிரதான எதிர்கட்சியாக உள்ள அதிமுக தலைமையிலான கூட்டணி, மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக தலைமையிலான கூட்டணி இன்னும் தங்களது கூட்டணிகளை இறுதி செய்யாமல் இருப்பதால் இந்த கூட்டணியில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என அரசியல் வட்டாரத்தில் புகைச்சலைக் கிளப்பி வருகின்றது. குறிப்பாக தேமுதிக, பாமக எந்த கூட்டணியில் இணையப் போகின்றது என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிய வாய்ப்புள்ளது.
அதேபோல் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக திமுக அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிய தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக விவாதித்து முடிவெடுக்க பிரதமர் மோடி தலைமையிலான குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. ஆதார் அட்டை புதுப்பிப்பதற்கான காலக் கெடு முடிவு உள்ளிட்ட தமிழ்நாடு, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் நடைபெறும் முக்கியச் செய்திகள் குறித்து இங்கு காணலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -