Breaking News LIVE: தகனம் செய்யப்பட்ட வெற்று துரைசாமியின் உடல்; மனம் உருக பேசிய சைதை துரைசாமி
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.
சென்னை கண்ணம்மா பேட்டையில் வெற்றி துரைசாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது. தான் கலங்கப் போவது இல்லை எனவும் தனக்கு ஐ.ஏ.எஸ் படித்த மகன்கள் மகள்கள் சென்னையில் உள்ளனர் என்றும் சைதை துரைசாமி மனம் உருக பேசினார்.
விபத்தில் மரணமடைந்த வெற்றி துரைசாமியின் இறுதி ஊர்வலம் நடைபெற்று வருகின்றது. ஆளுநர், முதலமைச்சர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தடுப்புகளை அகற்றி டெல்லி கோட்டையை நோக்கி முன்னேறி வருகின்றனர்.
அரசு முறைப் பயணமாக அபுதாபி சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அபுதாபி அரசும் அங்குள்ள இந்தியர்களும் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
இமாச்சல் பிரதேசத்தில் கார் விபத்தில் உயிரிழந்த வெற்றி துரைசாமியின் உடல் தனி விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகாத நெல்லை மாவட்ட எஸ்.பிக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
மகாராஷ்ட்ரா மாநில முன்னாள் முதலமைச்சர் அசோக் சவான் பாஜகவில் இணைந்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவை தவறாக புரிந்துகொண்டு பயணிகளை பணிமனைகளில் ஏற்றி இறக்க கூடாது என ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை உதயகுமாருக்கு ஒதுக்கித் தர அதிமுக கோரிக்கை வைத்தது. இதையடுத்து, எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவரின் கோரிக்கையை பரிசீலிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கிளாம்பாக்கத்தை தேர்வு செய்தது அதிமுக ஆட்சி காலத்தில்தான் திட்டமிடப்பட்டது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை:
ஸ்ரீபெரும்புத்தூரில் அதிகமான தொழிற்சாலைகள் உள்ளதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. ஸ்ரீபெரும்புத்தூரில் முதல் சிங்கப்பெருமாள் கோயில் வரை நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
திருவள்ளூரில் இருந்து சென்னை நோக்கி வந்த மின்சார ரயிலின் சக்கரத்தில் இருந்து புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சக்கர உராய்வால் புகை வந்ததை தொடர்ந்து பயணிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி மீது உரிமை மீறல் பிரச்சினை தொடர்பான விவாதம் கொண்டு வர சபாநாயகர் அப்பாவுவிடம் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ஆளுநர் உரையை படிக்காமல் அவர் புறக்கணித்து நேற்றைய நிகழ்வில் இருந்து பாதியில் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாசி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது - மகரவிளக்கு, மண்டல பூஜை காலங்களில் வர முடியாத ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர்.
பல்வேறு புகார்களுக்கு உள்ளான சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் மருத்துவ விடுப்பில் சென்றார் - முறைகேடுகள் உறுதியானதால் அவரை சஸ்பெண்ட் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இம்மாத இறுதியில் தங்கவேல் பணி ஓய்வு பெறவிருந்த நிலையில் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார்.
Background
கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.
பெட்ரோல், டீசல்:
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இன்றைய விலை நிலவரம்
இந்நிலையில் சென்னையில் இன்று (பிப்ரவரி 13ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 633வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 20 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.
அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 16 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -