Breaking News LIVE: பொன்முடி அமைச்சராக பதவியேற்கவிருந்த நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி நாளை டெல்லி பயணம்
Breaking News Live: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் காணலாம்.
நாளை பொன்முடி அமைச்சராக பதவியேற்கவிருந்த நிலையில் ஆளுநர் ரவி நாளை டெல்லி பயணம் மேற்கொள்கின்றார். அவர் 16ஆம் தேதி திரும்பவுள்ளார். இந்த பயணம் ஏற்கனவே திட்டமிடப்பட்டது என கூறப்படுகின்றது.
இரட்டை இலை தொடர்பாக சூர்யமூர்த்தி தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், அ.தி.மு.க.கவின் பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் என்னை அங்கீகரித்துள்ளது என்றும், இதனால் சூர்யமூர்த்தியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் மனுவில் தெரிவித்துள்ளார்.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 906 புள்ளிகள் சரிந்துள்ளது. அதானி குழும மதிப்பு ஒரே நாளில் 90 ஆயிரம் கோடி சரிந்துள்ளது.
பிரதமருக்கும் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கும் வழக்கத்தை விட கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் போதைப்பொருள் வழக்கில் கடந்த 9 நாட்களில் 114 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திமுக துணைப்பொதுச்செயலாளர் பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்ற தீர்ப்பு நகல் வெளியானது.
பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்புக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம் எந்த நிபந்தனையையும் குறிப்பிடவில்லை.
பொன்முடி இழந்த எம்.எல்.ஏ. பதவி, உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து அவருக்கு மீண்டும் கிடைக்க இருக்கிறது. திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினராக பொன்முடி மீண்டும் பதவி வகிப்பதாக சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
கரூரில் ரயிலில் இருந்து தவறி விழுந்த இராணுவ வீரர் தலை துண்டித்து பரிதாபமாக உயிரிழந்தார். உடலை கைப்பற்றி ரயில்வே போலீசார் விசாரணை.
கரூர் ரயில்வே நிலையத்தில் தினசரி 50க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றது.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பாஸ்கர் என்ற இராணுவ வீரர்
ஒரு மாத விடுப்பில் சொந்த ஊருக்கு செல்ல சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து மதுரை நோக்கி சென்ற ரயிலில் பயணித்துள்ளார்.
இன்று மதியம் கரூர் வந்தடைந்த ரயில் சிறிது நேரம் நின்றது. அப்போது கீழே இறங்கி விட்டு மீண்டும் ரயிலில் ஏறும் போது பாஸ்கர் தடுமாறி கீழே விழுந்து ரயில் சக்கரம் ஏறியதில் தலை துண்டிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
உடலை கைப்பற்றி ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூரில் ரயில் நிலையத்தில் ராணுவ வீரர் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக எஸ்பிஐ வங்கி, உச்சநீதிமன்றத்தில் பிரமான பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை, தேர்தல் ஆணையத்திடம் ஒரு பென் டிரைவில் இரண்டு கோப்புகளாக வழங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்கள், தேதி தொடர்பான விவரங்கள், தொகை குறித்த விவரங்கள் முதல் கோப்பில் உள்ளன. தேர்தல் பத்திரங்களை பணமாக மாற்றிய கட்சிகள் தொடர்பான விவரங்கள் இரண்டாவது கோப்பில் உள்ளன.
தமிழ்நாடு அரசு வழங்கும் மகளிர் உரிமை தொகையை பிச்சை என கூறிய குஷ்புவுக்கு எதிராக கண்டனங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை, திருவள்ளூர், செய்யாறு, சேலம் என தமிழ்நாடு முழுவதும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நடிகை குஷ்பு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தியதாக கடந்த வாரம் தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஜாபர் சாதிக்கை கைது செய்தனர். அதனை தொடர்ந்து தற்போது அவரது கூட்டளியான சதா என்பவரை கைது செய்துள்ளனர்.
அதிமுக - பாஜக பிரிந்ததுபோல் நடிக்கிறார்கள். அதிமுக பாஜக கள்ளக்கூட்டணி வைத்திருக்கிறது. கள்ளக்கூட்டணியை மக்கள் அடையாளம் கண்டுவிட்டனர். பாசிசத்தை அழிக்க இந்தியாவை காக்க அழைக்கிறேன். தங்கள் கோட்டை என்று மேற்கு மண்டலத்தை கூறும் அதிமுக அவர்களுக்கு ஏதாவது நன்மை செய்ததா? - முதலமைச்சர் ஸ்டாலின் பொள்ளாச்சியில் பேச்சு
கர்நாடகாவிடம் இருந்து தண்ணீரை எப்படி பெறுவது என்று எங்களுக்கு தெரியும். ஒவ்வொரு முறையும் உச்சநீதிமன்றம் சென்றுதான் கர்நாடகாவிடம் இருந்து தண்ணீரை வாங்குகிறோம் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் கோவை மாவட்டத்திற்கு 13 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். முக்கியமாக 15 அங்கன்வாடி மையங்கள், 18 நியாயவிலை கடைகள், 7 பேரூராட்சியில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம், கோவை மருத்துவ கல்லூரியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கான்க்ரீட் சாலை மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட 13 அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
கோவையில் 560 கோடி மதிப்பிலான 273 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் "தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய தெம்போடு துணிவோடு வந்திருக்கிறேன். மக்களிடம் மகிழ்ச்சியை காணும் போது எந்த தேர்தல் வந்தாலும் நாம் தான் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. கலைஞர் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரியில் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். மக்களின் கோரிக்கைகளை கருத்துக்களை காது கொடுத்து கேட்கும் முதலமைச்சர் ஆக செயல்படுகிறேன்" என்றார்.
பொள்ளாச்சியில் ரூ.1,273 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றி உள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
பங்குனி மாத பூஜை மற்றும் உத்திர திருவிழாவையொட்டி சபரிமலை அய்யப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை காட்டுவார். 25-ந் தேதி 10-ம் நாள் திருவிழாவன்று பம்பையில் அய்யப்பனுக்கு ஆராட்டு நடைபெறுகிறது. அன்று மாலையில் கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவுபெறும்.
Background
Petrol Diesel Price Today, March 13: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 21 மாதங்களை கடந்துவிட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.
பெட்ரோல், டீசல்:
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இன்றைய விலை நிலவரம்
இந்நிலையில் சென்னையில் இன்று ( மார்ச் 13ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 662வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 21 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.
அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 16 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -