Breaking News LIVE: பள்ளிக்கல்வி இயக்குநராக கண்ணப்பன் நியமனம்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Breaking News LIVE: தொடக்க கல்வி இயக்குநராக இருந்த கண்ணப்பன்,பள்ளிக்கல்வி இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
டாஸ்மாக் மதுவை இறக்குமதி செய்ததில் ஊழல் நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுவுக்கு உரிய வரி செலுத்தப்படாத காரணத்தால் அரசுக்கு 30.5 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேலும் 14 நாள்களுக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கம்: அத்துமீறல் தொடர்பாக, வியாபாரிகளுக்கும், கடை உரிமையாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர்.
சென்னை சைதாப்பேட்டை: கழிவுநீர் கலந்த மெட்ரோ குடிநீரை குடித்த சிறுவன் உயிரிழப்பு என புகாரையடுத்து, அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
Breaking News LIVE: டெல்லி மதுபான கொள்கை குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு: 3 நாள் சிபிஐ காவல் நிறைவடைந்த நிலையில் டெல்லி நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிக்காலத்தை நீட்டித்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, 2025 மே 19ம் தேதி வரை ஜெகநாதனின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மானியக் கோரிக்கைகள் தொடர்பான கோரிக்கைகள் மற்றும் விவாதங்கள் முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடப்படாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள், இந்த கூட்டத்தொடரில் முக்கிய பிரச்னைகளாக எதிரொலித்தது.
பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதில் திமுக அரசுக்கு விருப்பம் உள்ளது. படிப்படியாக மதுக்கடைகளை குறைப்பதே அரசின் எண்ணமாக உள்ளதாக அமைச்சர் முத்துசாமி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் செயல்படும் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
லடாக்கில் ராணுவ வீரர்கள் பயிற்சியின்போது டாங்க் வாகனம் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவை தேர்தலில் 40க்கு 40 என்ற அளவில் செய்கூலி, சேதாரம் இல்லாமல் வெற்றி பெற்றுள்ளோம். 2026 சட்டமன்ற தேர்தலிலும் மகத்தான வெற்றி பெறுவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஒருபக்கம் தேர்தலில் தோல்வி, மறுபக்கம் சொந்த கட்சியினரிடன் நெருக்கடி ஆகியவற்றால் அதிமுக சிக்கி தவிக்கிறது. இதனை மறைக்க சட்டப்பேரவையில் குந்தகம் விளைவிக்கும் அதிமுக நிலைப்பாடு வருத்தமளிக்கிறது.
கள்ளச்சாராய மரணங்களை மூடி மறைக்கவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் குற்றங்களை தடுக்க சட்டங்கள் கடுமையாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொடநாடு வழக்கில் இதுவரை 268 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்று சட்டசபையில் முதலமைச்சர் பேசியுள்ளார்.
இன்று மதுவிலக்கு திருத்தச் சட்டத்தை சட்டசபையில் தாக்கல் செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பந்தலூரில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள பல கிராமங்களில் மழைநீர் வெள்ளமாக சூழ்ந்துள்ளது.
ரூபாய் 5 கோடி மோசடி செய்த தெலங்கானா வாலிபரை சென்னை போலீசார் கைது செய்தனர்.
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாநில கல்விக் கொள்கை குறித்து நாளை மறுநாள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுவிலக்கு திருத்தச் சட்டம் இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சரால் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூரில் கடந்த 24 மணி நேரத்தில் 27 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Background
- ஜுன் மாதம் நடைபெறுவதாக இருந்து ஒத்திவைக்கப்பட்ட, பல்கலைக்கழக மானியக் குழு-தேசிய தகுதித் தேர்வு (UGC-NET) 2024 ஜூன் அமர்வு மற்றும் பிற தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட தேதிகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அதன்படி NCET 2024 தேர்வு ஜூலை 10ஆம் தேதியும், கூட்டு CSIR UGC NET ஜூலை 25 முதல் 27ஆம் தேதி வரையும் நடத்தப்படும். UGC NET ஜூன் 2024 அமர்வு ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4 வரை நடைபெறும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய தேதிகள் மற்றும் தேர்வு முறை குறித்து விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கும் வகையில், "வரவிருக்கும் தேர்வுகளுக்கான NTA தேர்வு காலண்டர்" என்ற தலைப்பில் NTA அறிவிப்பு வெளியிடப்பட்டிள்ளது.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, 2024 டி 20 உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டியை எட்டியுள்ளது. இன்று நடைபெறும் இறுதிப்போட்டி மோதலில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இதன்மூலம், டி20 உலகக் கோப்பையில், 10 வருட காத்திருப்புக்குப் பிறகு இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா 5 முறை ஐசிசி நடத்தும் போட்டியில் இறுதி போட்டிக்கு முன்னேறியிருந்தாலும், தொடர்ந்து தோல்விகளை சந்தித்துள்ளது.
- ஜியோ, ஏர்டெலை தொடர்ந்து ஃவோடபோன் நிறுவனமும் வாடிக்கையாளர் சேவை கட்டணத்தை அதிகரித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -