Breaking News LIVE: விஷச்சாராய உயிரிழப்பு 16ஆக அதிகரிப்பு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
கள்ளக்குறிச்சி: விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மேலும், அவர்களது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த உயிரிழந்தவர்களின் உடல்கள் இரவோடு இரவாக பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவரை இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் பாக்கெட் சாராயம் விற்ற கோவிந்தராஜ் என்கிற கண்ணுகுட்டி என்ற நபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 200 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டு விழுப்புரம் மண்டல தடய அறிவியல் ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டு சோதனையில் அதில் மெத்தனால் கலந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்த நிலையில் விசாரணையை சி.பி.சி.ஐ.டி.யிடம் தமிழக அரசு ஒப்படைத்துள்ளது.
கள்ளக்குறிச்சி மதுவிலக்கு பிரிவு அதிகாரிகள் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளச்சாராயம் குடித்து 10 பேர் உயிரிழந்த விவகாரத்தில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதில் உயிரிழந்த நபர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது. சம்பவ இடத்துக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு இருவரும் செல்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி துரிதமாக கிடைக்க முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
கர்நாடகாவைச் சேர்ந்த சோமன்னாவை மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சராக நியமித்தது கண்டிக்கத்தக்கது. இது மிகப்பெரிய துரோகம். மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும்.
நீட் விவகாரத்தில் திமுக மற்றும் கூட்டணிக்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டும். இங்கு கொடுத்து எந்த பயனும் இல்லை.
இவ்வளவு நாள் கட்சியை யார் காப்பாற்றியது. பொதுவாழ்வில் இருந்து விலகி விட்டதாக கூறிவிட்டு இப்போது சசிகலா ரீ எண்ட்ரி என்று சொல்கிறார்கள்.
நிலுவை ஜிஎஸ்டி தொகையான ரூ.5.24 கோடியை தமக்கு செலுத்த லைகா நிறுவனத்துக்கு உத்தரவிடக்கோரி விஷால் தொடர்ந்த வழக்கில் மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறுவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
”கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தார்கள் என்பது உறுதியாகவில்லை. பாதிப்படைந்தவர்கள் 11 பேரில் 4 பேர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்கள் வெவ்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனர். வெவ்வேறு உடல் உபாதைகள் இருந்துள்ளன. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவ ஆய்வுக்கு பிறகே முடிவு தெரியும். தவறான தகவலை பரப்பக்கூடாது. பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்றக் காவல் 40வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. காணொலியில் செந்தில் பாலாஜி ஆஜரான நிலையில், நீதிமன்றக்காவல் ஜூன் 25ஆம் தேதிவரை நீட்டித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஓராண்டுக்கு மேலாக சிறையில் உள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர், காவல் கண்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் விசாரணை மேற்கொள்வதாக டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்ததாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக, பிரவீன், சுரேஷ், சேகர் உள்ளிட்டோர் உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லியில் இருந்து தர்பங்காவிற்கு (SG 476) பயணிக்கும் ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்றில் ஏசி இல்லாமல் பயணிகள் ஒரு மணி நேரம் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். இருக்கையில் அமர்ந்திருந்த அனைத்து பயணிகள், கடும் வெக்கைக்கு மத்தியில் காத்திருக்க வேண்டியிருந்தது. பலர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் சி. அன்புமணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உடனிருந்தார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி இறந்ததாக தவறான செய்திகளை பரப்புகின்றனர். குடிப்பழக்கமே இல்லாத ஒருவர் உயிரிழந்துள்ளார். அதனால் தவறான தகவலை பரப்ப வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.
25 ஆண்டுகளுக்கு பிறகு பிரபுதேவா - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் அறிமுக இயக்குநர் மனோஜ் இயக்கத்தில் உருவாகிவரும் புதிய படத்திற்கு Moon walk என பெயரிடப்பட்டுள்ளது!
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிலர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
"திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு, மறுவாழ்வு வசதிகளைச் செய்துதரும் வரை யாரையும் அங்கிருந்து வெளியேற்றக்கூடாது" - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தல் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு தரப்பில் நாளை மறுநாள் உரிய விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைப்பு! மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பகுதியில் 700 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குத்தகை காலம் முடிவடைவதற்கு முன்பாகவே BBTC நிறுவனம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ள நிலையில், நீதிமன்றம் அறிவுறுத்தல்!
Manjolai Estate : மாஞ்சோலை விவகாரம் : தேயிலை தோட்ட பணியாளர்களுக்கு மறு பணிவாய்ப்பு வசதி வாய்ப்புகள் வழங்கும் வரை அவர்களை அங்கிருந்து அகற்றும் நடவடிக்கை கூடாது - மதுரை உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வேட்புமனு தாக்கல்! ஜூலை 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது!
“பாஜக, அதிமுக இடையே ஒட்டும், உறவும் இல்லை என ஏற்கனவே தெரிவித்துவிட்டோம்; திமுக அரசு சட்டத்துக்கு புறம்பாக செயல்பட வாய்ப்பு உள்ளதால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்து இருக்கிறோம்; வாக்கு வங்கியை தெரிந்து கொள்வதற்காக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுகிறது” - மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேட்டி
Chennai Rain : சென்னையில் இன்று இரவும் மழை பெய்ய வாய்ப்புள்ளது : கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் பலத்த காற்றுடன் மழை பெய்து வரும் நிலையில், தனியார் வானிலை ஆய்வாளர் ப்ரதீப் ஜான் இன்றும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கணித்துள்ளார்.
3 நாட்களில் 20,000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்படும் படகில் பயணித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது
ஜூன் 19-ஆம் தேதியான இன்று வெளியாகிறது தமிழ்நாடு, பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்!
யூரோ வரலாற்றில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சாதனையை முறியடித்தார் 19 வயதான துருக்கி வீரர் அர்டா குலேர்! ஜார்ஜியாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் தனது முதல் கோலை பதிவு செய்தார் குலேர்
95ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் தொடர்ந்து வருகிறது
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டமானது காலை 10.30 மணிக்கு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் 7 செ.மீ, மீனம்பாக்கத்தில் 3.6 செ.மீ மழை பெய்துள்ளது. மேற்கு தாம்பரத்தில் 5.4 செ.மீ, வில்லிவாக்கத்தில் 4.3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
சென்னையில் மழை காரணமாக 2வது நாளாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. 12 விமானங்கள் தரையிறங்குவதிலும், 14 விமானங்கள் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது.
பாவோ நூர்மி கேம்ஸ் 2024 இல் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் நிகழ்வில் நீரஜ் சோப்ரா, தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். முன்னதாக கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் இவர் வெள்ளிப் பதக்கம் மட்டுமே வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று கட்சியின் மையக்குழு கூட்டம் நடைபெறுகிறது. சென்னையில் உள்ள தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகமான கமலாயத்தில் கூட்டம் நடைபெறவுள்ளது.
மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று ஆலோசனை நடத்த உள்ளார். அதன்படி மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
Background
- சென்னை: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளிகள் தேர்வை வரும் ஜூன் 25-ம் தேதி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், ஜூலை மாதம் திட்டத்தை தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், சென்னையில் கடந்த ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இரவு 9.45 மணியளவில் தொடங்கிய மழை, அதிகாலை வரை தொடர்ந்தது.
- தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று கட்சியின் மையக்குழு கூட்டம் நடைபெறுகிறது. சென்னையில் உள்ள தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகமான கமலாயத்தில் கூட்டம் நடைபெறவுள்ளது.
- மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று ஆலோசனை நடத்த உள்ளார். அதன்படி மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -