Breaking News LIVE: சென்னை புறநகர் பகுதிகளில் மழை!
Breaking News LIVE, July 8 : நாடு முழுவதும் இன்றைய பல்வேறு முக்கிய நிகழ்வுகள் தொடர்பான தகவல்களை, உடனுக்குடன் அறிய ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் தொடர்ந்து இணைந்திருங்கள்
Breaking News LIVE: சென்னை புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஆவடி , திருவேற்காடு, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
விஜயவாடாவிலிருந்து காரைக்குடி வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 124 கிலோ கஞ்சாவுடன் 5 பேர் கைது. குன்றக்குடி போலீசார் நடவடிக்கை!
வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள 'லக்கி பாஸ்கர்' திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி திரைக்கு வருகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என 4 மொழிகளில் திரைப்படம் வெளியாகிறது.
Breaking News LIVE: இன்று இரவு 10 மணி வரையில் கோவை, தேனி , திருவள்ளூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Breaking Tamil LIVE: ஜம்மு-காஷ்மீரில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில், வேலு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை 22 பேரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
"பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்குவதைக் கட்டாயமாக்குவது அவர்களை ஒதுக்கி வைக்க வழிவகுக்கும்!" - உச்ச நீதிமன்றம் கருத்து
Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் 10 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் பரப்புரை ஓய்ந்தது
"நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களிடம் இருந்து, நேர்மையாக தேர்வெழுதியவர்களை பிரிக்க முடியுமா? என்பதை முதலில் ஆராய வேண்டும்..." உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கருத்து
Swami Avimukteshwaranand Sarawathi : ”ராகுல் அவமதிக்கவில்லை” - மக்களவையில் ஆற்றிய உரை குறித்து அவிமுக்தேஷ்வரனந்த் சரஸ்வதி!
”இந்து மதத்தை ராகுல் அவமதிக்கவில்லை” - மக்களவையில் ஆற்றிய உரை குறித்து அவிமுக்தேஷ்வர்னந்த் சரஸ்வதி!
மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களின் மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கும் ஆரூத்ரா கோல்ட் நிறுவனத்திற்கும் தொடர்பு உள்ளாதா? என்ற கோணத்தில் விசாரிக்க வேண்டும் - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை
Actor Ajith - Cricketer Natarajan Meet up : நடிகர் அஜித் உடனான சந்திப்பு குறித்து பேசிய கிரிக்கெட் வீரர் நடராஜன்.
”நடிகர் அஜித்தை பார்க்கவேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அன்று அந்த சந்திப்பு யதார்த்தமாக அமைந்தது. அவ்ளோ பெரிய மனுஷன் மிகவும் பணிவாக இருந்தார். அனைவரையும் அனுப்பிவிட்டு, கார் கதவை மூடிவிட்டுச் சென்றார். அப்படியான மனிதர்களை பார்க்கும்போது வாழ்க்கையில் என்ன நடந்தாலும் முன்னேறலாம் என்னும் நம்பிக்கை ஏற்படும். அஜித்தைப் பார்த்தபோது அப்படி ஒரு நம்பிக்கை வந்தது” என நடராஜன் அந்த சந்திப்பை குறித்து தெரிவித்தார்
சென்னை காவல் ஆணையராக புதியதாக நியமிக்கப்பட்ட அருண் உடனடியாக பதவியேற்றார்.
Breaking News LIVE: இன்று மாலை 5.30 மணிக்குள் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததை உச்ச நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்ட மத்திய அரசு. ஒரு இடத்தில் மட்டும் வினாத்தாள் கசிந்ததாக நீதிபதி கேட்ட கேள்விக்கு மத்திய அரசு பதில்
திருவனந்தபுரத்தில் காருக்குள் சாவியுடன் சிக்கிய 2.5 வயது குழந்தையைப் பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறை வீரர்கள்! வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை அங்கிருந்த சாவியை எடுத்துக்கொண்டு காரில் ஏறியுள்ளது.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் ஹேமந்த் சோரன் வெற்றி! 81 எம்.எல்.ஏக்களில், 45 பேர் ஆதரவுடன் வெற்றி பெற்றார் ஹேமந்த் சோரன்!
வேங்கைவயல் வழக்கில் 2 ஆண்டுகளாகியும் இதுவரை ஒரு குற்றவாளியை கூட கைது செய்யாதது ஏன்? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஜார்கண்ட் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமயிலான அரசு வெற்றி பெற்றது. சட்டப்பேரவை 81 உறுப்பினர்களை கொண்ட நிலையில், ஹேமந்த் சோரன் அரசுக்கு 45 பேர் ஆதரவாக வாக்களித்தனர். ஊழல் வழக்கில் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டபோது சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார். 6 மாதங்களுக்குப் பிறகு அண்மையில் பிணையில் வெளியே வந்த சோரன், கடந்த வாரம் மீண்டு முதலமைச்சராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் அதிமுக அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா மீதான குட்கா முறைகேடு வழக்கின் விசாரணையை சென்னை எம்.பி, எம்.எல்.ஏ எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி சிறப்பு நீதிமன்ற நீதிபதி எழில் வளவன் உத்தரவு
மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னை நீதிமன்ற வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், பெண் வழக்கறிஞர்கள் சங்கம், மெட்ராஸ் பார் அசோஷியேசன் ஆகியவை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் அன்னியூர் சிவாவை ஆதரித்து, அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி வாக்கு சேகரித்தார். திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை பட்டியலிட்டு அவர் வாக்கு சேகரித்தார்.
ஜப்பான் நாட்டின் போனின் தீவுகளில் இன்று அதிகாலை 4.01 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.2ஆக பதிவாகியுள்ளது. மலேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜப்பானின் ஹமாமட்சுவில் இருந்து 871 கிமீ தெற்கே 567 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது எனவும் சுனாமி எச்சரிக்கை இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் வங்கி ஆவணங்களை வழங்க உத்தரவிடக்கோரி செந்தில்பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார். ED வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரியும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
வங்கி ஆவணங்களை கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் இன்று உத்தரவு வெளியாக உள்ளது.
மும்பை டிவிஷனில் உள்ள பல்வேறு ரயில் நிலையங்களில் இன்று தண்ணீர் தேங்கியுள்ளதால், பின்வரும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
1) 12110 (MMR-CSMT)
2) 11010 (புனே-சிஎஸ்எம்டி)
3) 12124 (புனே சிஎஸ்எம்டி டெக்கான்)
4) 11007 (புனே-சிஎஸ்எம்டி டெக்கான்)
5) 12127 (CSMT-புனே இன்டர்சிட்டி எக்ஸ்பி)
மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி சமூகத்தினரிடையே கடந்த ஆண்டு மே மாதம் ஏற்பட்ட மோதல் போக்கு கலவரமாக மாறியது. 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
ஏராளமானோ வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்டவரகளை பார்த்து அவர்களது குறைகளை கேட்க எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி மணிப்பூர் புறப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அசாம், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் இன்னும் 3 நாட்களுக்கு மழை தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மும்பையில் கடந்த 6 மணிநேரத்தில் 30 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் வந்த டிரோனில் 250 கிராம் ஹெராயின் போதைப்பொருள் இருந்தது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தின் எல்லை பாதுகாப்பு படையினர் டிரோனை கைப்பற்றினர். அதில் ஹெராயின் இருப்பது தெரியவந்தது. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகாராஷ்டிரா: மும்பையில் கனமழை பெய்து வருவதால், விலே பார்லே அருகே உள்ள வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள டெட்ராய்ட் நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். கேளிக்கை விருந்து நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் படுகாயம் அடைந்தனர்.
நேற்று இரவு பெய்த கனமழையால் மும்பையே வெள்ளக்காடாக மிதக்கிறது. தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கியதால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சியோன், பாண்டுப் பகுதியில் மழைநீர் வடிந்துள்ளதால் அந்த ரயில்நிலையங்களில் மட்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் சாலையெங்கும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. இதனால் மும்பை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
Background
- விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது - கடைசி கட்ட வாக்கு சேகரிப்பில் தலைவர்கள் தீவிரம்
- படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடல் பொத்தூரில் நல்லடக்கம் - ஏராளமானோர் மழையையும் பொருட்படுத்தாமல் கண்ணீர் அஞ்சலி
- ஓபிஎஸ் ஒரு சுயநலவாதி ; விசுவாசமாக இருந்ததாக வரலாறே கிடையாது அண்ணாமலை ஒரு பச்சோந்தி துரோகத்தின் மொத்த உருவம்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
- சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் நள்ளிரவில் பெய்த மழை - வெயிலின் தாக்கம் குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி
- காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் 13ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
- ரூ.100 கோடி மதிப்பிலான நிப அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை - அவரது மனைவியிடமும் சிபிசிஐடி விசாரணை
- மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றபின் முதன்முறையாக இன்று ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி - நாளை அதிபர் புதினை சந்திக்க திட்டம்
- நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
- CUET எனப்படும் பொது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு தொடர்பான மாணவர்களின் குறைகள் நியாயமாக இருந்தால் மறுதேர்வு நடத்தப்படும் - தேசிய தேர்வு முகமை
- ஒடிசாவில் கோலாகலமாக நடைபெற்ற பூர் ஜெகன்நாதர் கோயில் தேரோட்டம் - கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலி
- ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
- டி.என்.பி.எல்: திருப்பூர் அணியை 1 ரன் வித்தியாசத்தில் விழ்த்தி கோவை அணி த்ரில் வெற்றி
- - - - - - - - - Advertisement - - - - - - - - -