Breaking News LIVE, July 20: சென்னையில் ஆகஸ்ட் மாதத்திற்குள் மழைநீர் வடிகால் பணி நிறைவு - ஷிவ்தாஸ் மீனா உறுதி!
Breaking News LIVE, July 20: தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
பொற்பனைக்கோட்டையில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் செம்பு ஆணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை இரும்பு ஆணிகளே கிடைத்து வந்த நிலையில் இன்று ஐந்து செம்பு ஆணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஆகஸ்ட் மாதத்திற்குள் மழைநீர் வடிகால பணிகள் நிறைவடையும் என்று தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். நிகழ்நேர வெள்ள கண்காணிப்பு மையம் எழிலகத்தில் ரூ.5.12 கோடியில் அமைக்கப்பட்ட உள்ளது. அவசரகால செயல்பாட்டு மையத்தை பார்வையிட்டப்பின் தலைமைச் செயலர் ஷிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
கோவை, நீலகிரியில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது எனவும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள புலிவலம் பகுதியில் வசிப்பவர் நிவாஸ். இவர் தனது நண்பர்கள் உடன் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் வீலிங் சாகசம் செய்து சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவர்களை கைது செய்து திருச்சி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். இதை தொடர்ந்து நிவாஸ் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இது குறித்து நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து நீதிபதி மணிமொழி நிவாஸ் உள்ளிட்ட இரண்டு நண்பர்களுக்கும் இரு வார காலம் போக்குவரத்து காவல்துறையிடம் இருந்து போக்குவரத்தை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியுள்ளார்.
சென்னை ஏர்போர்ட்டில் மீண்டும் பழைய முறைப்படி போர்டிங் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் மைக்ரோசாஃப்ட் மென்பொருள் பாதிப்பால் விமான சேவை முடங்கியது.
இதன் ஒரு பகுதியாக சென்னை ஏர்போர்ட்டில் போர்டிங் பாஸ் கணினி மூலம் வழங்கப்படாமல் கையால் எழுதி வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது நிலைமை சீராகி கணினியில் வழங்கப்படுகிறது.
நாடு முழுவதும் விமான சேவை சீராகி வருவதாக விமானத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெரும்பாலான ஏரிகள், அணைகள் நிரம்பி வழிகின்றன. இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலமாக ஆலோசனை நடத்தி வருகிறார். மீட்பு பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.
அதிகாலை 3 மணி முதல் விமான நிலையங்கள் முழுவதும் விமான சேவைகள் மற்றும் பணிகள் வழக்கம் போல் செயல்படத் தொடங்கியுள்ளன. தற்போது விமானப் போக்குவரத்து சீராக நடந்து வருகிறது. நேற்றைய இடையூறுகள் காரணமாக ஒரு பின்னடைவு உள்ளது, அது படிப்படியாக குறைகிறது. இன்று மதியம், அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும் என எதிர்பார்க்கிறோம் - விமான போக்குவரத்து அமைச்சகம்
வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட ஆசிரியர் நகர் பகுதியில் உள்ள வீதியில் தனியாக சென்ற சிறுமியை வீதியில் இருந்த 3 தெருநாய்கள் அச்சுறுத்திய நிலையில், சிறுமி பயந்து, வீதியோரம் சென்ற போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகன ஓட்டி மற்றும் அக்கம்பக்கத்தினர் 3 தெருநாய்களையும் விரட்டியடித்து.
சிறுமியை பத்திரமாக அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுமியை தெருநாய்கள் அச்சுறுத்தும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று தமிழ்நாட்டில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் சண்டிபுரா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது. சண்டிபுரா வைரஸ் தொற்றால் 15 குழந்தைகள் உட்பட 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குஜராத் சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக முதுமலை யானைகள் காப்பகம் 3 நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ம்ன்சாரம் துண்டிப்பு, குடிநீர் தட்டுப்பாடு மற்றும் மரங்கள் விழுவது ஆகியவற்றால், சுற்றுலா பயணிகளுக்கான வாகன சவாரி நிறுத்தப்படுவதுடன், யானை முகாமும் மூடப்பட்டுள்ளது.
Background
- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 61 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு - நீர்வரத்து அதிகரிப்பால் அருவிகளில் குளிக்கவும், பர்சல் இயக்கவும் 5வது நாளாக தடை
- குரூப் 2 தேர்வுக்கு இன்று வரை அவகாசம் நீட்டிப்பு - பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று டிஎன்பிஎஸ்சி நடவடிக்கை
- கனமழை காரணமாக முதுமலை யானைகள் காப்பகம் 3 நாட்கள் மூடப்படுவதாக அறிவிப்பு - துற்றுலாப்பாயணிகளுக்கான சேவைகளும் நிறுத்தம்
- தூத்துக்குடியில் தனியார் ஆலையில் கேஸ் வெடித்து அம்மோனியா வாயு கசிவு - மூச்சுதிணறல் ஏற்பட்டு மயக்கமடைந்த 20-க்கும் மேற்பட தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதி
- நீலகிரியில் தொடரும் கனமழை காரணமாக இன்று உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுக்காக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த அஞ்சலை கைது
- மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று குற்றவியல் சட்டங்கள் மக்களை குழப்புகிறது - 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் கருத்து
- நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக ஜார்கண்ட் மருத்துவ மாணவி கைது
- சிறுமிகளின் ஆபாச வீடியோவை பார்ப்பது குற்றமில்லை - கர்நாடகா உயர்நீதிமன்றம் கருத்து
- கன்வர் யாத்திரை தொடர்பான உத்தரபிரதேச அரசின் உத்தரவு அரசியலமைப்புக்கு எதிரானது - பிரியங்கா காந்தி
- மைக்ரோசாஃப்ட் சேவை முடங்கியதால் உலகம் முழுவதும் விமான சேவை பாதிப்பு - பிரச்னையை சீர் செய்ய முயன்றுவருவதாக சிஇஒ சத்ய நாடெல்லா தகவல்
- மனைவி என நினைத்து வேறொரு பெண்ணை முத்தமிட சென்ற அமெரிக்க அதிபர் பைடன் - இணையத்தில் பரவும் வீடியோ
- மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் - பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபாரம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -