Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
சட்டம் ஒழுங்கு டி.ஐ.ஜி-ஆக உள்ள காவல்துறை இணை ஆணையர் ஜி. தர்மராஜன், புலனாய்வுத்துறை டி.ஐ.ஜியாக மாற்றப்பட்டுள்ளார். புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளராக உள்ள எஸ். அரவிந்த், திருச்சி காவல் தலைமைகத்தின் எஸ்.பி-ஆக மாற்றப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் துயரம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடன் நாங்கள் நிற்கிறோம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஜூலை 13ம் தேதி நடைபெற உள்ள குரூப் -1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது! தேர்வர்கள் http://tnpsc.gov.in என்ற இணைய முகவரிக்கு சென்று ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்
ம்க்களவையில் குடியரசுத்தலைவர் உரைக்கு பதிலுரை அளித்து பேசிய பிரதமர் மோடி சுமார் 2.15 மணி நேரம் பேசினார். இந்நிலையில் அவரது உரை தற்போது நிறைவடைந்துள்ளது.
சிறுபிள்ளை தனமாக செயல்படுபவர்களுக்கு இறைவன் நல்ல புத்தியை கொடுக்கட்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிந்த நிலையில் அவர்களுக்கு பிரதமர் மோடி மக்களவையில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹார்தரஸ் நகரில் நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவு நிகழ்வில் கலந்து கொண்டு கூட்ட நெரிசலில் சிக்கி 100 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் என்று மோடி கூறியுள்ளார்.
இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மணிப்பூருக்கு நீதி வேண்டும் என்று தொடர்ந்து எதிர்கட்சிகள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.
நாட்டின் முப்படைகளை பலப்படுத்தி பாதுகாப்பை உறுதி செய்து வருகிறோம். போர் சூழலை எதிர்கொள்ளும் வகையில் ராணுவத்தை பலப்படுத்தி உள்ளோன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஹிந்து மதத்தின் மீது பொய்யை பரப்ப சதி நடைபெற்று வருகிறது. ஹிந்துக்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஹிந்துக்களுக்கு எதிரானது காங்கிரஸ் கட்சி. அரசியல் ஆதாயத்திற்காக எதிர்கட்சிகள் ஹிந்து மதத்தை இழிவு படுத்தி வருகின்றன என்று மோடி பேசி வருகிறார்.
டெங்கு, மலேரியாவுடன் சனாதானத்தை தொடர்பு படுத்தி பேசிய உதயநிதி ஸ்டாலினை பெயர் குறிப்பிடமால் மோடி விமர்சனம் செய்துள்ளார்.
ஹிந்துக்களை அவமானப்படுத்துவதை நாங்கள் ஒரு போதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று மோடி கூறியுள்ளார்.
நேற்று ராகுல் காந்தி ஹிந்துக்களை புண்படுத்தி விட்டார். இதற்காக மக்கள் அவரை 100 ஆண்டுகள் ஆனாலும் மன்னிக்க மாட்டார்கள்.
நேரு அமைச்சரவையில் இருந்து அம்பேத்கர் விலகியது ஏன் என்று மோடி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சி தலித்களுக்கு எதிரானது என்றும் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியை அவர்கள் பேசும் பொய்யே அளித்து விடும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ராகுல் காந்தி அக்னிவீர் மற்றும் குறைந்த பட்ச ஆதரவிலை ஆகியவற்றில் பொய்யான தகவலை கூறினார்.
காப்பாற்று காப்பாற்று ஜனநாயகத்தை காப்பாற்று என்று தமிழ்நாட்டு எம்பிக்கள் மக்களவையில் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.
பிரதமர் மோடி உரையாற்றி வரும் சூழலில் தமிழ்நாட்டு எம்.பிக்கள் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்று தமிழில் முழக்கம் எழுப்பு வருகின்றனர்.
பிரதமர் மோடி உரையாற்றி வரும் சூழலில் தமிழக எம்.பிக்கள் தமிழில் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.
ராகுல் காந்தி நேற்று பேசும் பொழுது ஒரு குழந்தையை போல் பேசினார் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மக்களவையில் ராகுல் காந்தியை மறைமுகமாக மோடி விமர்சித்த்துள்ளார்.
காங்கிராஸ் கட்சி நாடு முழுவதும் வன்முறையை தூண்ட முயற்சி செய்து வருகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பிரதமர் மோடி குடியரசுத் தலைவர் உரைக்கு பதிலுரை அளித்து வரும் சூழலில் ராகுல் காந்தி அதை கூர்ந்து கவனித்து வருகிறார்.
பிரதமர் மோடி ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேசி வரும் சூழலில் எதிர்கட்சியினர் குரல் எழுப்புவதை நேரலையில் காட்டவில்லை. அதேநேரம் காங்கிரஸ் கட்சியை மோடி விமர்சன் செய்யும் சமயங்களில் எதிர்கட்சிதலைவர் ராகுல் காந்தியின் முகம் காட்டப்படுகிறது.
பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் நேருக்கு நேர் போட்டியிட்ட தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி விழுக்காடு வெறும் 26 சதவீதம் தான்.
காங்கிரஸ் கட்சி 100 தொகுதிகளுக்கு 99 தொகுதிகளில் வெற்றி பெறவில்லை 543 தொகுதிகளில் 99 தொகுதி வெற்றி பெற்றுள்ளது என்று பிரதமர் மோடி கிண்டல்.
காங்கிரஸ் கட்சி தோல்வி பெறுவதில் உலக சாதனை படைத்துள்ளது என்று பிரதமர் மோடி கிண்டல் செய்துள்ளார்.
1984 க்கு பிறகு காங்கியஸ் கட்சியால் 250 இடங்களுக்கு மேல் வெற்றி பெற முடியவில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி கடந்த மூன்று முறை 100க்கும் குறைவான இடங்களையே பெற்றுள்ளது. அவர்கள் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் இது.
கேரளாவின் வெற்றியைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்துள்ளது என்று பிரதமர் மோடி மக்களவையில் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடைபெற உள்ள ஹரியான, மகாராஷ்ட்ரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் வெற்றி பெறுவோம்.
எங்களது கணக்கை கேரளாவில் தொடங்கியுள்ளோம். மக்களைவைத் தேர்தலுடன் பேரவைத் தேர்தல் நடைபெற்றதில் நாங்கள் 4 மாநிலங்களில் வெற்றி பெற்றோம் என்று மோடி பேசியுள்ளார்.
பிரதமர் மோடி பேசும் போது எதிர்கட்சியினர் மாண்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று சபாநாயகர் கூறியுள்ளார்
370 சட்டப்பிரிவை நீக்கியதன் மூலம் காஷ்மீரில் ஜனநாயகம் தழைத்துள்ளது என்று பிரதமர் மோடி மக்களவையில் கூறியுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு வரலாற்று சாதனைகளை நாங்கள் நிகழ்த்தியுள்ளோம்- பிரதமர் மோடி
காங்கிரஸ் கட்சி அம்பேத்கரை இழிவு படுத்தியது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
2014 ஆம் ஆண்டிற்கு முன்னர் நாட்டில் தீவிரவாத தாக்குதல் அதிகமாக இருந்தது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
2014 ஆம் ஆண்டிற்கு முன்னர் இந்தியர்கள் தன்னம்பிக்கையை இழந்தனர். ஆனால் எங்களது ஆட்சி வந்த பிறகு செயல்படுத்த முடியாத அனைத்தையும் நாங்கள் செயல்படுத்தினோம்.
இந்தியாவில் ஊழல் அரசுகள் ஒழிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் ஒரு ஊழலை மறைக்க இன்னொரு ஊழல் நடைபெற்றது.
உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
2014 ஆம் ஆண்டிற்கு முன்னர் இந்த நாடு முன்னேறாது என்று மக்கள் நினைத்தனர் ஆனால் நாம் இப்போது முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறோம்.
இந்தியாவை வல்லரசாக்க வாரத்தின் 7 நாட்களும், 24 மணி நேரம் என்னுடைய அரசு உழைத்து வருகிறது என்று மக்களவையில் பிரதம் மோடி உரை.
பிரதமர் மோடி மக்களவையில் பேசி வரும் சூழலில் மணிப்பூர், மணிப்பூர் என்று எதிர்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றனர். சர்வாதிகார போக்கை கைவிடுங்கள் என்றும் முழக்கம்.
மக்களவையில் பிரதமர் மோடியின் உரைக்கு மத்தியில் மணிப்பூருக்கு நீதி வேண்டும் என்று எதிர்கட்சியினர் குரல் எழுப்பி வருகின்றனர்.
தேசம் தான் எங்களுக்கு முதன்மையானது என்று பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.
தேர்தலில் எதிர்கட்சிகள் தோற்றதன் வேதனையை நான் இப்போது உணர்கிறேன். எங்களின் ஆட்சி பற்றி மக்களுக்கு நன்றாகத் தெரியும். கொள்கையும் நிர்வாகமும் மட்டுமே எங்களின் இலக்கு என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
குடியரசுத்தலைவர் உரைக்கு மக்களவையில் பிரதமர் மோடி பதிலுரை அளித்துவருகிறார்.
எதிர்கட்சிகள் தோல்வியில் பிதற்றுகிறார்கள் என்று மக்களவையில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வரும் சூழலில் எதிர்கட்சியனர் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேசத்தின் மக்கள் எங்களுக்குத்தான் வாக்களித்தார்கள் என்று நாடாளுமன்றத்தில் பேசி வருகிறார்.
சென்னையில் பிராட்வே - கிளாம்பாக்கம், சிறுசேரி வரை செல்லும் ஏசி மாநகரப்பேருந்தில் திடீரென தீப்பற்றி மளமளவென எரிகிறது. சென்னை அடையாறூ பணிமணை அருகே புதிதாக கொள்முதல் செய்யப்பட்ட ஏசி பேருந்தில் தீவிபத்து ஏற்பட்டது. பேருந்தில் இருந்து புகை வந்த போது பயணிகள் விரைவாக பேருந்தை விட்டு இறங்கியதால் உயிர் தப்பினர்.
தனது கைது நடவடிக்கைக்கு எதிராக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் சிபிஐ-க்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அரசுப்பள்ளி மாணவர்களிடையே ஜாதி ரீதியிலான பிரச்சனைக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் ” திருநெல்வேலியில் அரசுப்பள்ளி மாணவர்களிடையே ஜாதி ரீதியான பிரச்சனையால் நேற்று ஏற்பட்ட மோதலில் 2 மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்திகேட்டு அதிர்ச்சியுற்றேன். சமூகநீதி என்று மேடையில் மட்டும் பேசும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் ஜாதி ரீதியான மோதல்கள் நடப்பது தொடர்கதையாகியுள்ள நிலையில், பள்ளிகளிலேயே இதுபோன்ற சம்பவம் நிகழ்வது கவலையளிக்கிறது. சமத்துவம் பேணும் கல்வியின் உறைவிடமாம் பள்ளிகளில் ஜாதி, மதம் உள்ளிட்ட பிரிவினைவாதத்திற்கு என்றும் இடமில்லை என்பதை உறுதிசெய்யவேண்டியது அரசின் கடமை. எனவே, வெற்று விளம்பர வார்த்தைகளை மட்டும் கூறுவதை விடுத்து, பள்ளிக்கூடங்களில் ஜாதிப் பிரிவினைகளை ஒழிக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதுடன், தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சமத்துவ எண்ணங்களை போதிக்குமாறு திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
”பாராளுமன்றத்தில் நேற்று ஒரு ஆரோக்கிய விவாதம் நடைபெறுவதற்கு பதிலாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஒட்டுமொத்த இந்துக்களையும் குறை சொல்லும் அளவிற்கு பேசி இருக்கிறார். இந்துக்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்று பேசியிருக்கிறார். பாராளுமன்ற விதிகளை மீறி இருக்கிறார்.” என்று நெல்லையில் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
குடியரசு தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான தனது உரையில் இருந்து நீக்கப்பட்ட, குறிப்பிட்ட பகுதிகளை மீண்டும் அவைக் குறிப்பில் சேர்க்க வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். காரணமற்ற முறையில் தனது பேச்சு நீக்கப்பட்டுள்ளது என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
"நாடு முழுவதும் சமூக நீதிக்காக சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்" மக்களவையில் அகிலேஷ் யாதவ் பேச்சு
அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உயர்க்கல்வி அமைச்சர் பொன்முடி பங்கேற்காதது குறித்து துணைவேந்தர் விளக்கம் அளித்துள்ளார்.
ஆளுநர் ரவி தலைமையில் அண்ணா பல்கைக்கழகத்தின் 44-வது பட்டமளிப்பு விழாவில் 1,14,957 மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் உயர்க்கல்வி அமைச்சர் பொன்முடி பங்கேற்கவில்லை. இவர் ஏற்கனவே நடைபெற்ற காமராஜர். பெரியார், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களை தொடர்ந்து இதிலும் பங்கேற்வில்லை. துறைரீதியான பணிகள் அதிகம் இருப்பதால் அமைச்சர் பொன்முடி பங்கேற்கவில்லை என துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
மக்களவை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று பேசிய உரையில் சில பகுதிகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள எம்.பி. ராகுல் காந்தி.” பிரதமர் மோடியின் உலகில் உண்மையை நீக்கிவிட முடியும். ஆனால், நிஜத்தில் உண்மையை நீக்கிவிட முடியாது. நான் என்ன சொல்ல வேண்டுமே அதையே பேசினேன். அவர்களுக்கு எவ்வளவு வேண்டுமோ அதை நீக்கிவிடலாம். ஆனால், Truth is Truth,” என்று தெரிவித்துள்ளார்.
சிறைகள் மற்றும் சீர்த்திருத்தப் பணிகள் துறைக்கு டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பணி நியமன 5 சிறை அலுவலர்கள் மற்றும் 44 உதவி சிறை அலுவகர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணிக்கையின்போது ₹1.15 லட்சம் திருடிய 2 பெண் ஊழியர்கள் கைது!
தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 100 சட்டப் புத்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞர் நூற்றாண்டு விழா நிறைவை ஒட்டி, சட்டப் புத்தங்களை முதலமைச்சர் வெளியிட்டார். மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையத்தின் மூலம் 100 சட்டப் புத்தங்கள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. 63 தமிழ்நாடு மாநிலச் சட்டங்கள் என மொத்தம் 100 சட்டப் புத்தகங்களை வெளியிட்டார்.
நெல்லையில் உள்ள மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்லவும் குளிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆறு நாட்களுக்குப் பின் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில்களில் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 84.3 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாகச் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்!
மணிப்பூர் மக்களை முழுவதுமாக தனது உரையில் புறக்கணித்துள்ளார் குடியரசுத் தலைவர்.. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது மக்களவையில் ஆவேசமாக உரையாற்றிய மணிப்பூர் காங்கிரஸ் எம்.பி. அங்கோம்சா பிமோல் அகோய்ஜம்.
Rahul Gandhi Lop Speech Expunged : பாஜக, இந்து, ஆர்.எஸ்.எஸ், பிரதமர் குறித்து ராகுல் காந்தி உரையில் 11 பகுதிகள் நீக்கப்பட்டிருக்கிறது. அந்த விமர்சனங்கள் அவைக்குறிப்பில் இடம்பெறவில்லை. பாஜகவினரால் விமர்சனங்களை தாங்கிக்கொள்ளமுடியவில்லை என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் விமர்சனம்.
Yogi Babu Temple Darshan : சுவாமி தரிசனம் செய்த நடிகர் யோகிபாபு.
செவ்வாய் பரிகார தலமான தையல்நாயகி அம்மன் உடன் வைத்தியநாத சுவாமி எழுந்தருளிய கோயிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் யோகிபாபு..
கேரளா: குருவாயூர் கோயிலில் உள்ள யானைகளுக்குப் புத்துணர்வு முகாம் தொடங்கியது - இதில் 26 யானைகளுக்கு சத்தான உணவு, சிகிச்சை மற்றும் பயிற்சி வழங்கப்படவுள்ளன.
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ஜூலை 5ம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மீனவர்கள் அறிவிப்பு! ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப் படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தல் ஈடுபடவுள்ளனர்.
சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!
3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2754 மில்லியன் கன அடியாக உள்ளது!
1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீரிருப்பு 124 மில்லியன் கன அடியாக உள்ளது!
500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீரிருப்பு 300 மில்லியன் கன அடியாக உள்ளது!
Background
- அமலுக்கு வந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்கள் என்பது அப்பட்டமான இந்தி திணிப்பு - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்
- நில அபகரிப்பு வழக்கில் அதிமுவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
- மக்களவையில் ராகுல் காந்தியின் பேச்சால் அனல் பறந்த விவாதம் - பிரதமர் மோடி உள்ளிட்டோரின் குறுக்கீட்டால் அவையில் பரபரப்பு
- குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் - பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு உரையாற்றுகிறார்
- ஜியோ, ஏர்டெல் கட்டண உயர்வுக்கு மத்தியில் சேவை கட்டணத்தை குறைத்த பி.எஸ்.என்.எல்.,
- தஞ்சையில் என்.ஐ.ஏ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 2 பேருக்கு 5ம் தேதி வரை காவல் - பலத்த பாதுகப்புடன் புழல் சிறையில் அடைப்பு
- மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற சிறை கைதியான இன்ஜினியர் ரஷித் எம்.பி., ஆக பதவியேற்க என்.ஐ. ஏ., அனுமதி
- புதிய குற்றவியல் சட்டத்தில் காவல்துறை விசாரணை காவலில் எடுப்பதற்கான நாட்கள் நீட்டிப்பா? - அமைச்சர் அமித் ஷா விளக்கம்
- ஹரியானா மாநிலம் குருகிராமில் நகை திருட்டை பார்த்த சிறுமி எரித்துக் கொலை - 10ம் வகுப்பு மாணவர் வெறிச்செயல்
- போரில் மாயமானதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் 38 பேரின் பட்டியல் இந்தியாவிடம் ஒப்படைப்பு
- மோசமான வானிலை சூழல் காரணமாக டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி நடைபெற்ற, பார்படாஸ் நகரிலிருந்து வெளியேறிய முடியாமல் தவிக்கும் இந்திய அணி
- - - - - - - - - Advertisement - - - - - - - - -