Breaking News LIVE, JULY 11: சாட்டை துரைமுருகன் விடுவிப்பு...!
Breaking News LIVE, July 11, 2024: நாடு முழுவதும் நடைபெற உள்ள பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் காணலாம்.
Breaking News LIVE, JULY 11: தமிழ்நாடு அரசு மீது அவதூறு பரப்பியதாக, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்ட நிலையில் , தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை
இந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணம் - கால அட்டவணை வெளியீடு. 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்ட பிறகு, இந்திய அணி விளையாடும் முதல் தொடர் இதுவாகும்
தாய்லாந்து ரிசார்ட்டில் நடிகை வரலட்சுமி - நிக்கோலாய் சச்தேவ் ஜோடியின் திருமணம் நடைபெற்றது
புதுக்கோட்டையில் வம்பன் காட்டுப்பகுதியில் ரவுடி துரை சுட்டுக்கொலை
இந்தியன் 2 படத்தை வெளியிடத் தடையில்லை என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது அனுமதியின்றி வர்மகலை முத்திரை பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஒருவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் இயக்குநர் சங்கர், நடிகர் கமல்ஹாசன் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினர். இதையடுத்து இந்தியன் 2 படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது என மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
பொதுக்கழிப்பிட சுகாதாரத்தை கண்காணிக்க தொழில்நுட்பம்! -கோவை மாநகராட்சியின் முதற்கட்ட சோதனை வெற்றி குறித்து மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் பேசியுள்ளார்
தமிழ்நாட்டிற்கு தினமும் 1 டி.எம்.சி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டுள்ளது.
பாசன வசதிக்காக பவானிசாகர் அணையிலிருந்து நாளை முதல் நீர் திறக்கப்படுகிறது. இதனால் 12,743 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற பாம்பன் சுவாமி கோயிலில் நாளை குடமுழுக்கு நடத்த தடையில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூர் கடம்பவனேஸ்வரர் கோயில் குடமுழுக்கை ஒட்டி குளித்தலை பள்ளிகளுக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
குளித்தலையில் பல்லாயிரக்கணக்காணோர் கூடி வழிபட உள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதை ஈடு செய்யும் விதமாக ஜூலை 27ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வீடுகளை காலி செய்ய வேண்டாம் என பிபிசிடி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பழைய பச்சூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் சதிஷ் (34), வெள்ளநாயக்கனேரிச பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மகன் நவின்(22), நாட்றம்பள்ளி பழையூர் பகுதியைச் சேர்ந்த திருப்பதி மகன் விஷால் (18) ஆகிய மூவரும் ரயில் மூலம் ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த தனிப்படை போலீசார் அவர்கள் மூவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து நான்கு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
நாடாளுமன்ற தேர்தலின் போது சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது நெல்லையில் பாஜக சார்பில் போட்டியிட்ட எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரனுடையது என, கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்தனர். இதுதொடர்பான விசாரணையை சிபிசிஐடி போலீசார் நடத்தி வருகின்றனர். பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜாராகாமல் இருந்த பாஜக பொருளாளர் எஸ். ஆர். சேகர், இன்று சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த, பிரபல யூட்யூபர் சாட்டை துரைமுருகன், திருச்சி மாவட்ட சைபர் க்ரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, திமுக தலைவராக இருந்த கருணாநிதி மற்றும் தமிழக அரசை தரக்குறைவாக விமர்சித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
கரூரில், 100 கோடி ரூபாய் நில அபகரிப்பு வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆதரவாளர்களின் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் ஆண்டாங்கோயில் மேற்கு ஊராட்சிக்குட்பட்ட அம்மன் நகரில் வசிக்கும் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி கவின் வீட்டிலும் சிபிசிஐடி போலீசார் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நினைவு நாணயத்திற்கு மத்திய நிதியமைச்சகம் அனுமதி அளித்துள்ளது
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
Samsung Smart Ring : அறிமுகமானது சாம்சங் ஸ்மார்ட் ரிங்
சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட் ரிங்கை அறிமுகம் செய்துள்ளது சாம்சங் நிறுவனம். ஜூலை 24-ஆம் தேதி முதல் இதன் விற்பனை தொடங்கவுள்ளது. 3 கிராம் எடைகொண்ட இந்த சாம்சங் ஸ்மார்ட் ரிங்கை சார்ஜ் செய்து வைத்துக்கொண்டால் ஏழு நாட்களுக்கு பயன்படுத்தலாம். இதய துடிப்பு, சுவாச விகிதம், தூக்கம், உடல் வெப்பம் ஆகியவற்றைக் கண்காணிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து :
யூரோ சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது இங்கிலாந்து. ஆட்டத்தின் 7வது நிமிடத்திலேயே நெதர்லாந்து வீரர் சைமன்ஸ் கோல் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் ஆட்டத்தின் 18வது மற்றும் 90வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர்கள் ஹாரி கேன், ஒல்லி வாட்கின்ஸ் மாறி மாறி தலா ஒரு கோல் அடித்து அசத்தினர். இதன்மூலம் 2 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின்,
சென்னை, எழும்பூர் இரயில் நிலையம் அருகில் இன்று (11.07.2024) வியாழக்கிழமை காலை 08.30 மணியளவில்
சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.
Background
- விக்கிரவாண்டி இடைதேர்தலில் 82 சதவிகித வாக்குகள் பதிவு - நாள மறுநாள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன
- மக்களுடன் முதலமைச்சர் திட்டம் - தர்மபுரியில் இன்று தொடங்கி வைக்கிறார் ஸ்டாலின்
- சென்னையின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய காற்றுடன் கொட்டிய மழை - இன்றும் மழை தொடர வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்
- பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு - செங்கல்பட்டு மாணவி முதலிடம், 22ம் தேதி கலந்தாய்வு தொடங்குகிறடு
- இந்தியா உலகிற்கு புத்தத்தை கொடுத்தது, யுத்தத்தை அல்ல - ஆஸ்திரியா வாழ் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் மோடி பேச்சு
- மூன்று நாள் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இன்று நாடு திரும்புகிறார்
- வேலையின்மையால் இளைஞர்கள் மன உளைச்சலில் உள்ளனர் - காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி குற்றச்சாட்டு
- சிபிஐ மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறது - உச்சநீதிமன்றம் அதிரடி
- ஐரோப்பியா கால்பந்து சாம்பியன்ஷிப் - நெதர்லாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து
- கால்பந்தாட்ட ஜாம்பவான் பீலேவின் சாதனையை முறியடித்த 16 வயது ஸ்பெயின் வீரர் - மிகக் குறைந்த வயதில் ஐரோப்பியா சாம்பியன்ஷிப்பில் கோல் அடித்து லாமின் யாமல் அசத்தல்
- ஐரோப்பியா சாம்பியன்ஷிப்பில் திங்கட்கிழமை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில், ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன
- டி.என்.பி.எல்: திருப்பூரை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது சேப்பாக்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -