Breaking News LIVE: ஆளுநர் கையெழுத்திட மறுப்பதன் பின்னணியில் அண்ணாமலை இருக்கிறார்' - எம்.பி. ஜோதிமணி
Breaking News LIVE, July 10, 2024: நாடு முழுவதும் நடைபெற உள்ள பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் காணலாம்.
"எம்.ஆர். விஜய பாஸ்கருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆளுநர் கையெழுத்திட மறுப்பதன் பின்னணியில் அண்ணாமலை இருக்கிறார்" - கரூர் எம்.பி. ஜோதிமணி பரபரப்பு பேட்டி
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48% வாக்குகள் பதிவு!
சிறைக்குள் அளிக்கப்படும் கைதிகளுக்கான உணவால் வயிற்றுப்போக்கு ஏற்படுவதாகவும், வீட்டு உணவை அனுமதிக்கக்கோரி நடிகர் தர்ஷன் உயர் நீதிமன்றத்தில் மனு
சேலம்: வாழப்பாடி அருகே பெரிய கல்வராயன் மலைப் பகுதியில் உள்ள பாச்சாடு கிராமத்தில் 2 பேரல்களில் இருந்த சுமார் 400 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் கைப்பற்றப்பட்டு அழிப்பு
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழ்நாட்டை தொடர்புபடுத்தி பேசிய வழக்கில் ஒன்றிய இணையமைச்சர் ஷோபாவுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க உயர் நீதிமன்றம் மறுப்பு.
திமுக அளித்த புகாரில் ஷோபா மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு. அந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார் "குண்டு வைத்த நபர் தமிழ்நாட்டில் பயிற்சி எடுத்தது முன்னதாகவே தெரிந்திருக்கும் பட்சத்தில், பொறுப்பான குடிமகன் என்ற முறையில் போலீசாருக்கு தகவல் அளித்திருக்க வேண்டும்" - நீதிபதி வழக்கின் விசாரணை நாளை மறுதினம் ஒத்திவைப்பு
Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி 77.3% வாக்குகள் பதிவு!
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் தங்கலான் படத்தின் ட்ரெய்லர் வெளியானது.
2019ம் ஆண்டு நீட் தேர்வில் நடந்த ஆள் மாறாட்டம் குறித்த வழக்கில், தேசிய தேர்வு முகமை அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி கேள்வி குற்றவாளிகளுக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவது போல தெரிகிறது.
அந்த அதிகாரிகளை கைது செய்து விசாரிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்க நேரிடும் : நீதிபதி தமிழ்நாட்டில் மாணவிகளின் தாலியைக் கூட விடாத நீங்கள், இந்தியாவிலேயே இல்லாத மாணவருக்கு 3 மாநிலங்களில் தேர்வு எழுத அனுமதித்தது எப்படி - நீதிபதி ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கால அவகாசம் கோரியதால், வழக்கின் விசாரணை வரும் 15ம் தேதிக்கு ஒத்திவைப்பு
சென்னை அஇஅதிமுக அலுவலகம் ராயப்பேட்டை: மக்களவைத் தேர்தலில் தோல்வி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். வரும் 19 ஆம் தேதிவரை தொகுதி வாரியாக ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் 3 மணி நிலவரப்படி 64.44 % வாக்குகள் பதிவாகியுள்ளது.
ஊட்டியில் குதிரைப் பந்தய மைதானத்தை அரசு கையகப்படுத்தியது செல்லும் - மெட்ராஸ் ரேஸ் கிளப்பின் மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு.
₹822 கோடி குத்தகை தொகையை செலுத்தாததால் உயர் நீதிமன்ற உத்தரவின்படி மைதானத்தை அரசு கையகப்படுத்தியிருந்தது
கோவை: கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, உட்கட்டமைப்பு குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமாருடன், ஆஸ்திரேலியன் கான்சுலெட் ஜென்ரல் சிலாய் சாக்கி சந்திப்பு! தொழில்துறை நகர்வுகள், தொழில் வளர்ச்சி பற்றிய ஆஸ்திரேலியா - கோவை இடையிலான ஒப்பந்தம் குறித்து சந்திப்பு!
கல்வராயன் மலை மக்களின் நிலை என்ன எனவும் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்திற்கு பிறகு கல்வராயம் மக்கள் நிலை குறித்து அறிய நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கில் கேள்வி எழுப்பியுள்ளது. வழக்கறிஞர் தமிழ்மணி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் அடிப்படையில் நீதிமன்றம் விசாரிக்கிறது. பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் சென்று அடைகிறதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளது உயர்நீதிமன்றம். ஜூலை 24க்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
தேசிய விருது வென்ற மாற்றுத்திறனாளி பின்னணி பாடகி ஜோதியின் அமெரிக்கா செல்ல வேண்டும் ஆசையை நடிகர் நெப்போலியன் நிறைவேற்றினார். 7 ஆண்டுகளாக ஜோதி அமெரிக்க செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கிறது. மத்திய அரசு வழங்கும் National Award of persons with disabilities என்ற விருது பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த ஒரே பாடகியான ஜோதி இசைப்பிரிவில் முதுகலை பட்டம் பயின்று வருகிறார். கனவு நனவானது குறித்து பின்னணி பாடகி ஜோதி நெகிழ்ச்சியடைந்துள்ளார்.
செந்தில்பாலாஜியின் ஜாமின் மனுவை உச்சநீதிமன்றம் நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்துள்ளது. வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்ற அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ரூ.1 கோடி கேட்டு ஆர்.எஸ் பாரதி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. விரைவில் அவருக்கு சம்மன் செல்லும். விரைவில் அவரை சிறைக்கு அனுப்புவோம். அவர் ஆணவத்தில் பேசுகிறார். என்னை சின்னப் பையன் என்று சொல்கிறார். இந்த சின்ன பையன் என்ன செய்ய போகிறேன் என பொருத்திருந்து பாருங்கள். ஆர்.எஸ் பாரதியிடம் ஒரு கோடி பெற்று கள்ளச்சாராத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்குவேன். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ க்கு மாற்ற வேண்டும்” எனத் தெரிவித்தார்.
கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய தடையில்லை என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனக சபை மீது பக்தர்கள் ஏறி தரிசனம் செய்தனர். சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழாவை ஒட்டி கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்தனர். கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்தபிறகு பூஜைகள் தொடங்கின.
கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமையில் 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுங்கக் கட்டணம் வசூலிக்கும் கவுண்ட்டர் முன்பு அமர்ந்து திருமங்கலம், கல்லுப்பட்டி, பேரையூர் வாகன ஓட்டிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ள 10 கவுண்டர்களையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமையில் 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுங்கக் கட்டணம் வசூலிக்கும் கவுண்ட்டர் முன்பு அமர்ந்து திருமங்கலம், கல்லுப்பட்டி, பேரையூர் வாகன ஓட்டிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ள 10 கவுண்டர்களையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.54,080 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.99 க்கு விற்பனையாகிறது.
சென்னை அடுத்த ஆவடியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த சபி பாஷா என்பவர் வீட்டில் 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆவடி போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தலைமறைவான சபி பாஷாவுக்கு வலை வீச்சு
பூந்தமல்லி அடுத்த திருமழிசையில் கடந்த 5ஆம் தேதி இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை வழக்கில் ஏற்கெனவே கிஷோர், ஜெகன், சந்தோஷ் கைதான நிலையில் தலைமறைவாக இருந்த சத்திய மூர்த்தி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியாக உள்ளது. கடந்த மே மாதம் 6ஆம் தேதி நடப்பு கல்வியாண்டின் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியது. இது கடந்த ஜூன் 6ஆம் தேதி வரை நடைபெற்றது. மேலும் அவகாசமும் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து ரேண்டம் எண் வெளியிடப்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. இந்நிலையில் பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் இன்று காலை 10.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. கலந்தாய்வு அட்டவனையும் இன்று வெளியாக இருக்கிறது.
பொன்னேரி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக சுற்றுவட்டாரத்தில் இன்று மின் தடை ஏற்படும் என மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. வெள்ளோடை, என்.ஜி.ஓ.நகர், சின்னகாவணம், பெரிய காவணம், லட்சுமிபுரம், பாலாஜிநகர் உள்ளிட்ட இடங்களில் இன்று மின் தடை. மேலும், ஆலாடு, ஏ.ஆர்.பாளையம், வேண்பாக்கம், அக்கரம்பேடு, தேவதானம், தோட்டக்காடு, பெரும்பேடு, கொடூரில் இன்று மின் தடை.
சென்னை இந்தியன் ஆயில் நிறுவனத்தின் டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். ஐ.ஓ.சி.எல் நிர்வாகத்தின் சர்வாதிகாரப்போக்கை கண்டித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். சென்னை, ஆசனூர் டேங்கர் லாரி பெட்ரோலியம் உரிமையாளர்கள் நல அமைப்பினர் சார்பில் இந்த வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது.
கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 3 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Background
- விக்கிரவாண்டி தொகுதியில் இன்னும் சற்று நேரத்தில் இடைத்தேர்தல் தொடங்க உள்ளது.
- விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு அந்த தொகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது.
- விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு, அந்த தொகுதி மக்கள் காலை முதலே வாக்களிக்க ஆர்வமாக குவிந்து வருகின்றனர்.
- கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்
- ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ் நேரில் ஆறுதல்
- காஞ்சிபுரம் மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் – காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பு
- தமிழ்நாடு முழுவதும் 18 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்
- பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருது வழங்கிய அந்நாட்டு அதிபர் புதின்
- ரஷ்ய சுற்றுப்பயணத்தை முடித்த இந்திய பிரதமர் மோடி ஆஸ்திரியா சென்றார்
- அமைதியை நிலைநாட்டத் தயார் – ரஷ்ய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை
- உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 41 பேர் உயிரிழப்பு – பெரும் பரபரப்பு
- காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – ஏராளமானோர் உயிரிழப்பு
- யூரோ கோப்பை கால்பந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஸ்பெயின்
- ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இன்று இந்தியா மோதல்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -