Breaking News LIVE: ஜெகத்ரட்சகனுக்கு எதிராக மேல் முறையீடு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் டாவ்சான் என்பவர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
மறைந்த நடிகர் மாரி முத்துவிற்கு நடிகரும் இயக்குநருமான கவிதா பாரதி, ‘உண்மையில் கடுமையான எதிர் நீச்சல் போட்டுத்தான் வென்றார். பார்க்கும்போதெல்லாம் தான் வாங்கியிருக்கும் வீட்டைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பார், தன் கனவு வீட்டில் குடியேறுவதற்கு முன்னரே விடைபெற்றுவிட்டார் இயற்கையை வெல்லும் வல்லமை கனவுகளுக்கு இல்லையே’ என மிகவும் வருத்தத்துடன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் மாரிமுத்து மரணம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர், மாரிமுத்துவிற்கு நான் தான் திருமணம் செய்து வைத்தேன். இன்று அவர்மீது இறுதி பூக்கள் வீசப்படுகிறது. கண்ணீரைத் துடைத்துக்கொண்டே திரைத்துறையினருக்கு ஆறுதல் கூறுகிறேன் என அவர் தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
வடபழனியில் இருந்து நடிகர் மாரி முத்துவின் உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
இயக்குநரும் தொலைக்காட்சித் தொடரில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் மரணமடைந்தார். டப்பிங் செய்தபோது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவர் காலமாகியுள்ளார்.
ஜி20 உச்சிமாநாட்டிற்காக உலகக்த் தலைவர்கள் இந்தியாவின் தலைநகரான டெல்லிக்கு வருகைபுரிந்து கொண்டுள்ளனர். அமெரிக்க அதிபட் ஜோ பைடன் இன்று மதியம் டெல்லி வரவுள்ளார்.
ஜி20 உச்சிமாநாட்டிற்காக உலகக்த் தலைவர்கள் இந்தியாவின் தலைநகரான டெல்லிக்கு வருகைபுரிந்து கொண்டுள்ளனர். அமெரிக்க அதிபட் ஜோ பைடன் இன்று மதியம் டெல்லி வரவுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்யும் எனவும் அதில் முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரள மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் புதுப்பள்ளி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சண்டி உம்மன் முன்னிலை வகிக்கிறார்.
Background
செப்ட்ம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் அமெரிக்க அதிபர் பைடன் உள்ளிட்ட உலக தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் என மொத்த 40 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசியான் மற்றும் 18 வது கிழக்கு ஆசிய மாநாடு ஆகியவற்றில் பங்கேற்க பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார்.
பாஜக தரப்பில் பிரதமர் மோடியின் இந்தோனேஷியா பயணம் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டது. அதில் வழக்கத்திற்கு மாறாக 'பாரதப் பிரதமர்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தியா மற்றும் பாரத் என இரண்டு வார்த்தைகள் இருந்தாலும், இதுவரை இந்திய குடியரசு தலைவர், இந்தியா பிரதமர் என்று தான் குறிப்பிடப்பட்டு வந்தது. ஆனால், மத்தியில் ஆளும் பாஜக அரசு திடீரென இதில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இந்தியா என்ற வார்த்தைக்குப் பதிலாக பாரத் என்ற வார்த்தையை பயன்படுத்த தொடங்கியிருக்கிறது.
இப்படி இருக்கும் சூழலில் பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசியான் மற்றும் 18 வது கிழக்கு ஆசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்படி அவரது உரையை தொடங்கும் போது இந்தியா என்ற சொல்லுக்கு பதிலாக பாரத் என குறிப்பிட்டு பேசியுள்ளார். ஏற்கனவே இந்த விவகாரம் பெரும் விவாதப்பொருளாக மாறிய நிலையில் பிரதமர் மோடியின் உரையால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.
மேலும், அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை வலுப்படுத்த கூட்டு முயற்சிகளுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் நரேந்திர மோடி, தென் சீனக் கடலுக்கான நடத்தை விதிகள் UNCLOS-இன் படி பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் தனது கருத்துக்களில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் செழிப்பு ஆகியவை அனைவரின் நலனுக்காகவும், குவாடின் (QUAD) நேர்மறையான செயல்திட்டமானது ஆசியானின் பல்வேறு வழிமுறைகளை நிறைவு செய்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தோ-பசிபிக் மீதான ஆசியான் கண்ணோட்டத்தை' இந்தியா முழுமையாக ஆதரிப்பதாகவும், இந்தியா மற்றும் ஆசியானின் இந்தோ-பசிபிக் பார்வையில் ஒற்றுமை இருப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். மேலும், "இந்தோ-பசிபிக் பெருங்கடல்கள் முன்முயற்சியை' செயல்படுத்துவதற்கான ஒரு முக்கியமான தளமாக 'கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டின்' முக்கியத்துவத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. QUAD-இன் பார்வையில் ASEAN ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. QUAD இன் நேர்மறையான நிகழ்ச்சி நிரல் ASEAN இன் பல்வேறு வழிமுறைகளுடன் நிறைவு செய்கிறது” என பேசியுள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -