Breaking News LIVE: அடுத்த 3 மணி நேரம்.. 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்பட 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் அண்ணாசாலை, ராயப்பேட்டை, பாரிஸ், தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
சென்னையின் அண்ணாசாலை, ராயப்பேட்டை, பாரிஸ், தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
சென்னை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ராஷ்மி சித்தார்த் ஜாகடே நியமிக்கப்பட்டுள்ளார்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி அனைத்து ரேசன் கடைகளுக்கு செப்டம்பர் 18ஆம் தேதி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நடத்தப்பட்ட மேல் விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு செப்டம்பர் 21ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது டெல்லியில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தேனி அரசு மருத்துவமனையில் பொதுமக்களிடம் பணம் வாங்கிய ஸ்கேன் சென்டரை மூட அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய பணத்திற்கு 15 சதவீதம் வட்டி கோரிய வழக்கில் திருச்சி, தஞ்சை, தேனி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆட்சியர்கள் பதிலளிக்க மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 9 முதல் அக்டோபர் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு. ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் வெளிமாவட்டத்தை சேர்ந்த வாடகை வாகனங்கள் உரிய அனுமதியின்றி நுழையவும் தடை. முத்துராமலிங்க தேவர் குருபூஜை, இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டெல்டா பகுதிகளில் போதியளவு தண்ணீர் இல்லாமல் குறுவை சாகுபடி பாதிப்பு குறித்து வேளாண் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். இதில் விவசாயிகளுக்கு நிவாரணம் அளிப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சனாதனம் சர்ச்சை தொடர்பான அனைத்து வழக்குகளையும் சட்டப்படி எதிர்கொள்வேன் என இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சாமியார் மீது வழக்கு போடுவது உருவ பொம்பைகளை எரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடவேண்டாம் என திமுகவினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சனாதனம் தொடர்பான அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு, திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் பேசிய அவர், “சமத்துவம் என்பது பிறப்புரிமை. அதில் எந்த கேள்வியும் இல்லை. அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பது தான் அடிப்படை. அதை மறுக்கின்ற எதுவாக இருந்தாலும் அதை வீழ்த்த வேண்டியது நமது கடமை” என கூறியுள்ளார்.
பல்லடத்தில் 4 பேர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் சரண்டைந்த முக்கிய குற்றவாளியான வெங்கடேஷ், கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை மறைத்து வைத்திருந்த இடத்திற்கு போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, போலீசார் மீது மண்ணைத் தூவி தப்பிக்க முயற்சி செய்ததாகவும், இதனால் போலீசார் வெங்கடேஷ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது சுடப்பட்ட நான்கு குண்டுகளில் இரண்டு குண்டுகள் காலில் பாய்ந்ததில், வெங்கடேஷின் இரண்டு கால்களும் முறிந்ததாக கூறப்படுகிறது.
இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசியான் மாநாட்டில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, “இந்த ஆண்டுக்கான கருப்பொருள் ஆசியான்-வளர்ச்சியின் மையம் என்பதாகும். ஆசியான் அமைப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இங்கு அனைவரின் குரலும் கேட்கப்படுகிறது. ஆசியான் வளர்ச்சியின் மையமாக உள்ளது. ஆசியான் அமைப்பு உலக வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது” என பேசியுள்ளார்.
பல்வேறு காரணங்களால் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட நிலவை ஆராயும் ஜப்பானின் ஸ்லிம் விண்கலம் எச்.2.ஏ. ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த விண்கலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நிலவில் தரையிறங்கும் என ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த திட்டம் வெற்றி பெற்றால், நிலவை ஆய்வு செய்வதற்கான திட்டத்தில் வெற்றி பெற்ற உலகின் 5-வது நாடாக ஜப்பான் திகழும் என்பது குறிப்பிடத்தக்கது.
கால்பந்தாட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் பாலன் டி ஆர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில், கடந்த 20 ஆண்டுகளில் முதன்முறையாக போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமயில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் வேளாண் அமைச்சர், துறைசார்ந்த செயலாளர், ஆணையர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் கடைமடை பகுதிகளை அடையாததால் அங்கு குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Background
Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 16 மாதங்களை கடந்தும் மாற்றமின்றி விற்பனையாகி வரும் சூழலில், இன்றைய நிலவரத்தை அறியலாம்.
பெட்ரோல், டீசல்:
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இன்றைய விலை நிலவரம்
இந்நிலையில் சென்னையில் இன்று (செப்டம்பர் 7) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 474வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 16 மாதங்களை கடந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.
அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -