Breaking News LIVE: “விரைவில் நம்ம ஊரில் சந்திப்போம்” - வதந்தியை தொடர்ந்து நடிகை திவ்யா பதிவு

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 06 Sep 2023 11:53 AM
Breaking News LIVE: சிறப்பு பாதுகாப்பு படை (SPG) பிரிவின் இயக்குநர் அருண் குமார் சின்ஹா காலமானார்

பிரதமரை பாதுகாக்கும் சிறப்பு பாதுகாப்பு படை (SPG) பிரிவின் இயக்குநர் அருண் குமார் சின்ஹா உடல்நலக்குறைவால் உயிரிழப்பு 1987-ம் ஆண்டு கேரளா கேடர் ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் உடல்நலக்குறைவால் குருகிராமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் 61 வயதாகும் இவர் 2016 முதல் SPG பிரிவின் இயக்குநராக இருந்து வந்தார்; கடந்தாண்டு இவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது

Breaking News LIVE: இபிஎஸ் உடன் கூட்டணி சேருவதை அமமுக தொண்டர்கள் விரும்பவில்லை - டிடிவி தினகரன்



Breaking News LIVE: பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை.. முக்கிய குற்றவாளிகள் போலீசில் சரண்..

பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளிகள் வெங்கடேசன், சோனை முத்தையா இருவரும் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். 

Breaking News LIVE: குறுவை பாதிப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை

குறுவை பாதிப்பு நிவாரணம் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். டெல்டா மாவட்டங்களில் நேரடியாக ஆய்வு செய்து வரும் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர். 

Breaking News LIVE:பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. பொதுப்பிரிவில் விண்ணப்பித்துள்ள 13,650 பேரில் 13,244 மாணவர்கள் துணை கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்துள்ள 4,585 மாணவர்களில் 4,466 பேர் துணை கலந்தாய்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். பொதுப்பிரிவில் விண்ணப்பித்த மாணவர்கள் இன்று முதல் நாளை மாலை 5 மணி வரை விருப்பக் கல்லூரிகளை பதிவு செய்யலாம்.

Breaking News LIVE: இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu)


இன்று (செப்டம்பர் 6 ஆம் தேதி) சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 குறைந்து ரூ. 44,240 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ. 5,530 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 


சென்னையில் 24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 48,000 ஆகவும் கிராமுக்கு ரூ. 6,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 


வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai)


சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து ரூ. 78.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.78,500க்கு விற்பனையாகிறது.

Breaking News LIVE: இந்தியாவின் பெயரை பாரத் என பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளதாக வெளியான தகவல் வதந்தியே - அமைச்சர் அனுராக் தாகூர்



Breaking News LIVE: செப்டம்பர்,9 ஆம் தேதி விஜய் மக்கள் இயக்கம் ஆலோசனை

விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செப்டம்பர்,9 -ம் தேதி நடைபெறவுள்ளது. மகளிர் அணியின் ஆலோசனைக் கூட்டம் புஸ்ஸி ஆனந்த் தலைமையில், வரும் செப்.9ம் தேதி பனையூரில் நடைபெற உள்ளது!

Breaking News LIVE: நாகையில் 5 நாட்களுக்குப் பின் கடலுக்கு சென்ற மீனவர்கள்


நாகை மாவட்டம் செருதூரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மீனவர்கள் 5 நாட்களுக்குப் பின் கடலுக்கு சென்றனர் - வெள்ளையாற்றின் முகதுவாரத்தை தூர்வாரவும், தூண்டில் வளைவு அமைக்கக்கோரியும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Breaking News LIVE: புதுக்கோட்டை - 15 எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம

புதுக்கோட்டையில் 15 உதவி காவல் ஆய்வாளர்கள் ஒரே நாளில் பணியிட மாற்றம் செய்து எஸ்.பி. வந்திதா பாண்டே உத்தவிட்டுள்ளார். 
பொதுவாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் பேரில், எஸ்.ஐ.-க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உத்தரவிட்டுள்ளார். 

Breaking News LIVE: உளுந்தூர்பேட்டை அருகே கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சீல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியார் கட்டடத்தில் அரசு ஆவணங்களை வைத்து அலுவலகம் செயல்பட்டு வந்த நிலையில் சீல் வைப்பு 

Breaking News LIVE: மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,428 கன அடியிலிருந்து 3,535 கன அடியாக குறைந்துள்ளது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 47.990 அடியிலிருந்து 47.330 அடியாகக் குறைந்துள்ளது.

Breaking News LIVE: இலக்கிய திறனை மேம்படுத்தும் திறனறித் தேர்வு - விண்ணப்பிக்க அழைப்பு

தமிழ்மொழி இலக்கியத்திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் நடத்தப்படும் திறனறித் தேர்வுக்கான விண்ணப்பங்களை செப்டம்பர் 20 ஆம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு - அக்டோபர் 15 ஆம் தேதி இந்த தேர்வானது நடைபெற உள்ளது. 
 

Breaking News LIVE: லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்து - 6 பேர் உயிரிழப்பு

 சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதியதில், ஓட்டுநர் விக்னேஷ் மற்றும் பிரியா என்பவர் பலத்த காயமடைந்தநிலையில், செல்வராஜ், மஞ்சுளா, ஆறுமுகம், பழனிசாமி, பாப்பாத்தி மற்றும் 1 வயது குழந்தை சஞ்சனா உள்ளிட்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்களில்?

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் தேனி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், கரூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Background

Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 16 மாதங்களை கடந்தும் மாற்றமின்றி விற்பனையாகி வரும் சூழலில், இன்றைய நிலவரத்தை அறியலாம்.


பெட்ரோல், டீசல்:


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம்


இந்நிலையில் சென்னையில் இன்று (செப்டம்பர் 6) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 473வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 16 மாதங்களை கடந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.









அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.