Breaking News LIVE:ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி படுகொலை!
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் , ரவுடி எபினேசர் என்பவர் நாட்டு வெடிகுண்டு வீசியும், பட்டாகத்தியால் வெட்டப்பட்டு படுகொலை. மூன்று பேர் கொண்ட கும்பல் படுகொலை செய்து விட்டு தப்பி ஓட்டம் என தகவல்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 152வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் 43வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்று 1.25 லட்சம் மாணவர்களுக்கு பட்டம் வழங்கினர்.
அடுத்த வாரம் டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 உச்சிமாநாட்டை சீன அதிபர் ஜீ ஜின்பிங் புறக்கணிப்பதாக, அந்நாடு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பல்லடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக திருப்பூர் காவல் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
சோனை முத்தையா என்பவரை கைது செய்துள்ளதாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
பல்லடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக திருப்பூர் காவல் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
சோனை முத்தையா என்பவரை கைது செய்துள்ளதாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி மீது டெல்லியில் ஹவுஸ் ஹாஸ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மத உணர்வுகளை புண்படுத்தியதாக வழக்கறிஞர் அமிதா சச்தேவா என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பல்கலைக்கழகங்கள் துணை வேந்தர் நியமனம் தொடர்பாக ஏற்பனவே உள்ள நடைமுறையை பின்பற்ற வேண்டும் எனவும், ஆளுநரின் பரிந்துரையை ஏற்க முடியாது எனவும் தமிழ்நாடு அரசு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதியுள்ளது.
பரப்பன அக்ரஹாரா சிறையில் சொகுசு வசதிகளை பெறுவதற்காக லஞ்சம் கொடுக்கப்பட்டதாக இருந்த புகார் தொடர்பான வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராகாமல் தவிர்த்து வந்த சசிகலா மற்றும் இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது.
சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி பேச்சுக்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், நீலாங்கரையில் உள்ள வீடு மற்றும் க்ரீன்வேஸ் சாலையில் உள்ள முகாம் அலுவலகத்திற்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான செல்லமுத்து என்பவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. தொட்டம்பட்டி என்ற இடத்தில் கொலைக்கு பயன்படுத்திய கத்தியை காட்டுவதாக கூறி அழைத்துச் சென்ற இடத்தில் தப்பிச்செல்ல முயன்ற நிலையில் கீழே விழுந்து காலில் முறிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்!
வழக்கறிஞர் எம்.எல்.ரவி. மற்றும் முன்னாள் எம்.பி. ஜெயவர்தன் ஆகியோர் தொடர்ந்த மனு மீது இன்று தீர்ப்பு வழங்குகிறது தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு.
அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் லேசான அறிகுறிகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் அவருக்கு தொற்று இல்லை என்றும் வெள்ளை மாளிகை அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
ஆசியக்கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய இந்திய அணி, செப்டம்பர் 10ம் தேதி மீண்டும் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது. ஏற்கனவே இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற லீக் போட்டி மழையால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
Background
Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 16 மாதங்களை கடந்தும் மாற்றமின்றி விற்பனையாகி வரும் சூழலில், இன்றைய நிலவரத்தை அறியலாம்.
பெட்ரோல், டீசல்:
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இன்றைய விலை நிலவரம்
இந்நிலையில் சென்னையில் இன்று (செப்டம்பர் 5) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 472வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 16 மாதங்களை கடந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.
அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -