Breaking News LIVE: சேகர்பாபு அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் - அண்ணாமலை

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 04 Sep 2023 06:46 PM
Breaking News LIVE: தூத்துக்குடி துறைமுகத்தை நாளை சுற்றிப் பார்க்கலாம்

வ.உ.சிதம்பரனார் பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி துறைமுகத்தை நாளை காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பொதுமக்கள் இலவசமாக சுற்றிப் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Breaking News LIVE: வர்ணனையாளர் வளர்மதி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

 இஸ்ரோவில் ராக்கெட் ஏவுதலை வர்ணனை செய்து வந்த வளர்மதியின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Breaking News LIVE: பல்லடத்தில் நாளை கடையடைப்பு போராட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் நான்கு பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பல்லடத்தில் நாளைக் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Breaking News LIVE: சனாதன கொள்கை ஒழிக்கப்பட வேண்டும் - முத்தரசன்

சனாதன கொள்கை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதை உறுதியாக கூறுகிறேன் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசுன் தெரிவித்துள்ளார். 

Breaking News LIVE: சேகர்பாபு அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் - அண்ணாமலை

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Breaking News LIVE:சாமி கும்பிடக் கூடாது என நாங்கள் சொல்லவே இல்லை - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்



Breaking News LIVE: அமைச்சர் செஞ்சி மஸ்தான் மகன், மருமகன் கட்சி பொறுப்பு பறிப்பு - திமுக அதிரடி அறிவிப்பு



Breaking News LIVE: நிலவில் சற்று பறந்த விக்ரம் லேண்டர் - இஸ்ரோ வெளியிட்ட புதிய அப்டேட்!



Breaking News LIVE: செந்தில் பாலாஜி ஜாமின் மனு விசாரணை
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியதே தவறு; அனைத்து கோப்புகளையும் முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற நீதிபதிகள் உத்தரவு ஜாமின் மனுவையும் விரைந்து முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று உத்தவைட்டுள்ளனர்.

Breaking News LIVE: மேட்டூர் அணை நிலவரம்

கர்நாடகா மாநிலத்தில் பெய்து வந்த மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி வருகிறது. தற்போது காவிரி கரையோர பகுதிகளில் மழை குறைந்து வருகிறது, இதனால் அங்கிருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 5,018 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 6,430 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 8,060 கன அடியாக அதிகரித்துள்ளது.

Breaking News LIVE:ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளாகியும் எந்த வாக்குறுதியையும் பாஜக நிறைவேற்றவில்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்



Breaking News LIVE: 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது!

24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது!


வட மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றதழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் 5 நாள்களுக்கு கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Breaking News LIVE: செங்கல்பட்டு அருகே சாலை விபத்து!

 மதுராந்தகம் அருகே திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து, முன்னால் சென்ற லாரியின் பின் பக்கத்தில் மோதி விபத்து; பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மற்றும் 2 பயணிகள் என 4 பேர் காயமடைந்துள்ளனர். 

Breaking News LIVE: இன்றைய பெட்ரோல்,விலை நிலவரம்

 சென்னையில் இன்று (செப்டம்பர் 4) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 471வது நாளாக தொடர்கிறது.

Breaking News LIVE: உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பு..

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு பகுதிகளில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தென்னிந்தியாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை இருக்கும் என அறிவிக்கப்படுள்ளது. குறிப்பாக கேரளா, கர்நாடக, தெங்கானா, தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் கனமழை பெய்யக்கூடும். 

Breaking News LIVE: மூன்று மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்? இன்றைய மழை நிலவரம்..

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.  

Background

Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 16 மாதங்களை கடந்தும் மாற்றமின்றி விற்பனையாகி வரும் சூழலில், இன்றைய நிலவரத்தை அறியலாம்.


பெட்ரோல், டீசல்:


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம்


இந்நிலையில் சென்னையில் இன்று (செப்டம்பர் 4) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 471வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 16 மாதங்களை கடந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.









அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.