Breaking News LIVE: நாமக்கல்லில் முட்டை விலை மேலும் 15 பைசா சரிவு; ஒரு முட்டை 4 ரூபாய்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
Namakkal Egg Price : நாமக்கல்லில் முட்டை விலை மேலும் 15 பைசா சரிவு; ஒரு முட்டை 4 ரூபாய்
திருமணம் செய்துக்கொண்ட புகைப்படம் இருப்பதாக கூறும் நடிகை விஜயலட்சுமி அதனை வெளியிட தயாரா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் 13 ஆண்டுகளாக இந்த பிரச்சனையை சந்தித்து வருவதாகவும் சமூக மரியாதை உள்ள தன்மீது அவதூறு பரப்பினால் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி நடிகை விஜயலட்சுமியின் குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு மக்கள் ரசிக்க கூடாது என பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
அபூர்வ சகோதரர்கள், கார்கி உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல காமெடி, குணச்சித்திர நடிகர் ஆர்.எஸ், சிவாஜி காலமானார். அவருக்கு வயது 66. 80களின் பிரபல திரைப்படமான 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் ஜனகராஜ் உடன் போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்த ஆர்.எஸ்.சிவாஜி, “தெய்வமே நீங்க எங்கயோ போய்ட்டீங்க” எனும் வசனம் மேலும் மிகவும் பிரபலமடைந்தார். இறுதியாக இவர் சென்ற ஆண்டு சாய் பல்லவியின் அப்பாவாக நடித்த கார்கி படம் மூலம் தன் நடிப்புக்காக பாராட்டுகளைக் குவித்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் 18ஆம் தேதி 3 நாள் பயணமாக ஆளுநர் டெல்லி சென்ற நிலையில், இன்று மீண்டும் 2 நாள் பயணமாக ஆளுநர் ரவி டெல்லி சென்றுள்ளார்.
இந்தியா கூட்டணி கூட்டம் முடிவில் முதல்வர் ஸ்டாலின் கடுமையாக பாஜக அரசை விமர்சித்துள்ள நிலையிலும் செந்தில்பாலாஜி வழக்கில் ஜாமீன் மனு போடப்பட்டுள்ள சூழலிலும் ஆளுநரின் டெல்லி பயணம் முக்கியத்தும் பெறுகிறது
பாஜகவின் கைப்பாவையாக அதிமுக செயல்படுகிறது என அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார். கொள்கையே இல்லாத அதிமுக, அண்ணாவின் பெயரை வைத்துக்கொள்ள எந்த தகுதியும் கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.
ஓசூர் அருகே சூளகிரியில் கற்களை அறுப்பதற்கான பிளேடு தயாரிக்கும் ஆலையில், ரூ. 1.1 லட்சம் மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தொழிற்சாலையின் ஜன்னலை உடைத்த மர்ம நபர்கள் இந்த சம்பவம் நடத்தியுள்ளனர். ஊழியர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, பிரமாண்ட வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் ‘ஜெயிலர்' திரைப்படம் வரும் செப்டம்பர் 7ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது!
இன்று (செப்டம்பர் 2-ஆம் தேதி) சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 அதிகரித்து ரூபாய் 44,360 க்கு விற்பனை செய்யப்படுகிறது, ஒரு கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூ. 5545 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் 24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 48,120 -ஆகவும் கிராமுக்கு ரூ.6,015-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai)
சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 80.00 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.80,000க்கு விற்பனையாகிறது.
புதுச்சேரியில் CBSC பாடத்திட்ட முறை அமல்படுத்தப்பட்டுள்ளதால், புதுச்சேரியின் 4 பிராந்தியங்களில் (புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம்) உள்ள பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வருப்புகளுக்கு ஒரே நேரத்தில் காலாண்டு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. காலாண்டு தேர்வு செப்டம்பர் 21 ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதி முடிகிறது.
அதேபோல் 30 ஆம் தேதி முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அக்டோபர் 5 ஆம் தேதி 4 பிராந்தியங்களிலும் பள்ளிகள் திறக்கப்படும் என கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சேலம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 562 கன அடி நீர், 5 ஆயிரத்து 18 கன அடி நீராக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 48.98 அடியிலிருந்து 48.48 அடியாக சரிவு. நீர் இருப்பு 16.86 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக விநாடிக்கு 8 அயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
நாமக்கல்: கனமழை காரணமாக கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகாய கங்கை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஹாங்காங்கின் குவாங்டாங் மாகாணத்தில் ஹுய்டாங் கவுன்டி பகுதியில் இருந்து தைஷன் நகரை நோக்கி சாவோலோ சூறாவளி இன்று காலை கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என சீன வானிலை மையம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக 8 லட்சம் பேர் வேறு இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் 450 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் வழியாக காரைக்குடிக்கு சென்ற பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிக்குள் மழைநீர் தர தரவென ஒழுகியதால் பயணிகள் அவதியடைந்தனர். ரயிலில் மழை நீர் ஒழுகும் வீடியோகாட்சிகள் வெளியாகியுள்ளன. பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் விழுப்புரம் வந்ததும் ரயில்வே நிலைய தூய்மைப்பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு அப்பெட்டிகளில் தேங்கி நின்ற தண்ணீரை வெளியேற்றி சுத்தம் செய்த பின்பு ரயில் விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது.
Background
Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 15 மாதங்களை கடந்தும் மாற்றமின்றி விற்பனையாகி வரும் சூழலில், இன்றைய நிலவரத்தை அறியலாம்.
பெட்ரோல், டீசல்:
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இன்றைய விலை நிலவரம்
இந்நிலையில் சென்னையில் இன்று (செப்டம்பர் 2) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 469வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 16 மாதங்களை கடந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.
அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -