Breaking News LIVE: உஅறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட அண்ணாமலை தலைமையில் பேரணி..
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க.வினர் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
அருந்ததிய சமூக மக்களை இழிவு படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, இரு நபர் உத்தரவாதத்துடன் ஜாமின் வழங்கியது ஈரோடு முதன்மை அமர்வு நீதிமன்றம் நீதிமன்றத்தில் இன்று அவர் ஆஜரான நிலையில், அக்டோபர் 10ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கோவை, திருப்பூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இறுதி ஆலோசனை கூட்டம் தொடங்கியது. கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் செப்டம்பர் 15 முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கப்பட உள்ளன.
கர்நாடகா மீது காவிரி நீர் ஒழுங்காற்று குழுவிடம் நாளை புகார் அளிக்க தமிழ்நாடு அரசு முடிவு. காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடகா மீறியதாக, தமிழ்நாடு அரசு குற்றச்சாட்டு! உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி கடந்த 4 நாட்களாக காவிரியில் வினாடிக்கு 4,000 கன அடி நீர் மட்டுமே திறந்துள்ளது கர்நாடகா.
நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி டெண்டரில் ஊழல் செய்திருப்பதாக கூறி அதனை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச். இதன் மூலம் 24வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று ஜோகோவிச் சாதனை
கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பான இறுதி ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது. செப்டம்பர் 15 முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1,000 வழங்கப்பட உள்ளது. பிரத்யேக ஏடிஎம் கார்டுகளை வழங்கவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் ஆட்டோ, டாக்சி, சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட தனியார் வாகன உரிமையாளர்கள் முழு அடைப்பு போராட்டம். 28 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 10 லட்சம் வாகனங்கள் இயக்கப்படவில்லை.
சென்னை எழும்பூர் மாண்டியத் சாலையில் ரவுடி சத்யா வெட்டிக் கொலை. தப்பிய மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு! 2020ல் நடந்த புளியந்தோப்பைச் சேர்ந்த ரவுடி நாய் ரமேஷ் கொலைக்குப் பழிக்குப் பழியாக சத்யா கொலை என போலீஸ் தகவல்.
கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பான இறுதி ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது!
Background
Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 16 மாதங்களை கடந்தும் மாற்றமின்றி விற்பனையாகி வரும் சூழலில், இன்றைய நிலவரத்தை அறியலாம்.
பெட்ரோல், டீசல்:
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இன்றைய விலை நிலவரம்
இந்நிலையில் சென்னையில் இன்று (செப்டம்பர் 11) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 478வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 16 மாதங்களை கடந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.
அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -