Breaking News LIVE: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க அஸ்வினுக்கு அழைப்பு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில் பறக்கும் ரயில் பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பறக்கும் ரயில் பணிக்கு பாலம் அமைக்கும்போது இரு தூண்களுக்கு இடையே உள்ள பகுதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
நாளை தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியை, சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு பாஜக தலைவர்கள் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கீழக்கரையில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஜல்லிக்கட்டு மைதானத்தில் பங்கேற்க 19 மற்றும் 20ம் தேதி முன்பதிவு செய்யப்படுகிறது.
ஆளுநர்கள் தரம் தாழ்ந்த அரசியல் செய்யும் அவலத்தை இந்தியா இப்போதுதான் காண்கின்றது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். திருவள்ளுரவர் தின வாழ்த்தில் திருவள்ளுவருக்கு ஆளுநர் ரவி காவி உடை அணிந்தும், திருநீறு அணிந்ததைப் போலவும் புகைப்படம் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நவோதயா வித்யாலயா பள்ளியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு நடைபெறுவதால் வரும் ஜனவரி 20ஆம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த ஹிட் & ரன் சட்டத்தினை எதிர்த்து தமிழ் நாட்டில் உள்ள லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றன. இந்த சட்டத்தினால் டிரைவர்களுக்கு 10 ஆண்டு சிறை மற்றும் 7 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஈரான் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதால் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தொழிலாளர் நலத்துறை சார்பில் போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நாளை 19 ந் தேதி நடைபெற உள்ளது- அமைச்சர் சிவசங்கர் பேட்டி
புதுக்கோட்டை மாவட்டம் அருகே அண்டனூர் அருகே கோயில் கட்டுவதில் இரு தரப்பினர் இடையே அடிதடி. 20 வருடமாக கோயில் கட்டப்படாமல் மோதல் நீடித்துவருகிறது
ஊதிய உயர்வு மற்றும் இடைக்கால ஊதியமாக ரூபாய் 15 ஆயிரம் வழங்க வேண்டும் என திருச்சி பெல் நிறுவன ஊழியர்கள் நாளை முதல் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை திருவிழா நடந்தது. அதில் லட்சக்கணக்கான பழங்கள் சூறையிடப்பட்டது. வத்தலகுண்டு அடுத்த சேவுகம்பட்டி கிராமம் உள்ளது. இங்கு பழமை வாய்ந்த சோலை மலை அழகர் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு இக்கோவிலுக்கு திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து வருகின்றனர்.
வரும் பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன் நிறைவேறிய பிறகு அழகருக்கு காணிக்கையாக வாழைப்பழத்தை கூடை, மாட்டுவண்டி, வேன் போன்றவற்றில் கொண்டு வந்து சூறையிடுகிறார்கள். அந்த வாழைப்பழம் சாப்பிட்டால் நல்லது என்று பொதுமக்கள் அந்த வாழைப்பழத்தை பொறுக்கி எடுத்து சாப்பிடுகின்றனர். இந்த ஆண்டு லட்சக்கணக்கான பழம் வந்ததாக கோவில் பூசாரி கூறினார்.
காவிரி ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் வினீத் குப்தா தலைமையில் 92வது கூட்டம் காணொலி வாயிலாக தொடங்கியது.
காணும் பொங்கலன்று மெரினா மற்றும் பெசண்ட் நகரில் காணாமல் போன 27 குழந்தைகளை போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர்.
பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் மூவர் சரணடைய 4 வார கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். குற்றவாளிகளுக்கு குஜராத் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததால் குற்றவாளிகள் மீண்டும் சிறைக்குச் செல்லவுள்ளனர்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 18 பாம்பன் மீனவர்களை விடுவிக்கோரி பாம்பன் மீனவர்கள் ஒருநாள் அடையாள போராட்டமாக கடலுக்குச் செல்லாமல் உள்ளனர்.
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவால், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மாட்டுத்தாவணி உள்ளிட்ட பகுதிகளில் வெடிகுண்டு சோதனை நடைபெற்று வருகின்றது.
திண்டுக்கல் ஒட்டனசத்திரம் பகுதியில் தண்டவாளம் உடைந்ததால் அதிவிரைவு ரயில் தக்க சமயத்தில் நின்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புகளின் பொதுப்பயன்பாட்டுக்கான மின்கட்டணக் குறைப்பு நவம்பர் 1-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று 31.10.2023 ஆம் தேதியிட்ட ஆணை எண்: 9-&இன் மூலம் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி நவம்பர்&-திசம்பர் சுழற்சியில் குறைக்கப்பட்ட மின்கட்டணம் நடைமுறைப்படுத்தபட்டிருக்க வேண்டும். ஆனால், மின்கட்டணம் குறைக்கப்படாததற்கான காரணம் குறித்து கேட்ட போது, மின்கட்டணக் குறைப்பால் பயனடையும் அடுக்குமாடி வீடுகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று மின்வாரியம் கூறி வருகிறது. இது அப்பட்டமான ஏமாற்று வேலை என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பிறப்பு சான்றாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களின் பட்டியலில் இருந்து ஆதாரை நீக்கும்படி ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்ததாக அமைச்சர் சிவசங்கர் உட்பட 36 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தருமபுரியின் பல்வேறு பகுதிகளில் கழுதை பால் விற்பனை அமோகம்-நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பதால், ஆர்வத்துடன் குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கும் பெற்றோர்.
Ooty Minor Girl Assault : உதகை அருகே தலைகுந்தாவில் 9 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை. உதகை கூடலூர் சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டுவருகிறார்கள்
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் ஆதமங்கலம்புதூர் கிராமத்தில் 102ம் ஆண்டு மஞ்சு விரட்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. சுமார் 100க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற இலக்கு தூரத்தை நோக்கி சீரி பாய்ந்தது.
பிரதமர் மோடி சென்னை வருகை: ஜனவரி 19, 20 ஆகிய 2 நாட்களில் சென்னையில் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 22,000 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட உள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்கள் வழக்கத்தை விட 5 மடங்கு அதிகமாக கட்டணம் கேட்கும் ஆட்டோக்கள் மற்றும் வாடகை கார்கள் ஆம்னி பேருந்துகள் வண்டலூரில் இறக்கிவிட்டு செல்வதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
சேலத்தில் வரும் 21 ஆம் தேதி நடைபெற இருக்கும் தி.மு.க இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாட்டை முன்னிட்டு இன்று காலை 7 மணிக்கு மாநாட்டுச் சுடர் ஓட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை அண்ணா சாலை சிம்சனில் இருக்கும் பெரியார் சிலையில் இருந்து காலை 7 மணிக்கு இந்த சுடர் ஓட்டம் தொடங்கப்பட்டது. அண்ணா மேம்பாலம், அறிவாலயம், சைதாப்பேட்டை, கிண்டி கத்திபாரா, ஆலந்தூர், மீனம்பாக்கம், தாம்பரம் வழியாகச் செல்லும் மாநாட்டுச் சுடர் தொடர் ஓட்டம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் வழியாக 316 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து மாநாடு நடைபெறும் சேலம் மாவட்டத்தை ஜனவரி 20 ஆம் தேதி பிற்பகல் 1.30 மணி அளவில் சென்றடைகின்றது. இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி மாநாட்டுச் சுடரை, அன்று மாலையில் கழகத் தலைவர் மு.க ஸ்டாலினிடம் ஒப்படைக்கிறார்.
பொங்கல் விடுமுறை முடிந்து மக்கள் சென்னை திரும்புவதால் பெருக்களத்தூரில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கருவறைக்குள் கிரேன் மூலம் ராமர் சிலை இன்று அதிகாலை கொண்டு செல்லப்பட்டது.
Background
Petrol Diesel Price Today, January 18: கிட்டதட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.
பெட்ரோல், டீசல்:
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இன்றைய விலை நிலவரம்
இந்நிலையில் சென்னையில் இன்று (ஜனவரி 18ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 607வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 19 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.
அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 16 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -