Breaking News LIVE: மேற்குத்தொடர்ச்சி மலையில், அதிசய வண்ணத்துப்பூச்சி கண்டுபிடிப்பு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
பொங்கல் விழா போக்குவரத்து : கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை ஆய்வு செய்தார் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா.
New Butterfly Species Cloud Forest Silverline : மேற்குத் தொடர்ச்சி மலையில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய வகை வண்ணத்துப்பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வெளியூர் செல்வதற்காக பயணிகள் குவிந்து வருகின்றனர்.
மத்திய அமைச்சர் அமித்ஷாவை தமிழக எம்.பி.க்கள் குழு நேரில் சென்று இன்று டெல்லியில் சந்தித்தனர்.
Deputy Chief Minister Udhayanidhi Stalin? A Rumour ? CM Stalin Answers..
ஒரு பொய் உடைந்து நொறுங்கியதால், அடுத்து ஒரு பரபரப்புக்காக, துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்படவிருக்கிறது என்ற வதந்தியைப் பரப்பத் தொடங்கினர். அதற்கு இளைஞரணிச் செயலாளர் - இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் தம்பி உதயநிதி அவர்களே, “எல்லா அமைச்சர்களும் முதலமைச்சருக்குத் துணையாகத்தான் இருக்கிறோம்” என்று பதிலடி கொடுத்து, வதந்தி பரப்பியோரின் வாயை அடைத்துவிட்டார்.
இளைஞரணி மாநாட்டின் மாநில உரிமை முழக்கம் எனும் நோக்கத்தைத் திசை திருப்ப நினைக்கும் எந்த முயற்சிகளுக்கும் கழகத்தினர் யாரும் இடம் கொடுத்திட வேண்டாம். மாநில உரிமைகளைக் காத்து கூட்டாட்சி இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தைச் செயல்படுத்தவே சேலம் இளைஞர் அணி மாநாட்டின் நோக்கமாகும். அந்த நோக்கத்தின் எதிரிகள்தான் இது போன்ற உள்நோக்கம் கொண்ட வதந்திகளை பரப்புகிறார்கள்.
கோவை மத்திய சிறையில் இருந்து தப்பித்த கைதியை காவல்துறை மடக்கிப் பிடித்துள்ளனர்.
இந்தியா கூட்டணியின் தலைவராக காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகர்ஜுனா கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றுவரும் நிலையில் மல்லிகர்ஜுனா கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் இருந்து அடுத்த வாரம் முதல் அயோத்திக்கு விமானம் இயக்கப்படவுள்ளது. மேலும் லட்சத்தீவின் அகாட்டி தீவுக்கும் விமானம் இயக்கப்படும் என விமானசேவை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இன்று நாம் தமிழர் கட்சி நடத்திய பொதுக்குழுவில் வரும் மக்களவைத் தேர்தலுக்கான தென் சென்னை வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். தென் சென்னை வேட்பாளராக பேராசிரியை தமிழ்செல்வி அறிவிக்கப்பட்டுள்ளார்.
அரசுப் பணி தேர்வு முறைகேடு தொடர்பாக விரிவான விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை குழு அமைக்க உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்திய பகுதிகளில் ஜனவரி 15 வாக்கில் வடகிழக்கு பருவமழை விலகக் வாய்ப்பு இருக்கதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தஞ்சை பட்டுக்கோட்டை ஆணவக் கொலை தொடர்பாக ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்கட்சிகள் இணைந்து உருவாக்கிய I.N.D.I.A கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் காணொலி மூலம் தொடங்கியது.
தூத்துக்குடி மற்றும் நெல்லை வெள்ளத்தினை தமிழ்நாடு அரசு சிறப்பாக கையாண்டுள்ளதாக மத்திய ஆய்வுக் குழு பாராட்டு தெரிவித்துள்ளது.
தனுஷ்கோடியில் சுற்றுலாவுக்குச் சென்ற பயணிகள் வேன் அரசுப் பேருந்தினை முந்திச் செல்ல முயன்றபோது எதிரே வந்த வேனின் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தினால் படுகாயம் அடைந்த இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில் அமெரிக்காவின் பல நகரங்களின் முக்கிய இடங்களில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி 150 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
மக்களவை காங்கிரஸ் எம்.பிகள் மூன்று பேரின் இடைந்நீக்கத்திற்கு எதிராக தீர்மானம். காங்கிரஸ் எம்.பி.க்கள் அப்துல் காலிக், ஜெயக்குமார், விஜய் வசந்த் ஆகியோரையும் உரிமை குழுவின் அறிக்கை வரும் வரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். இந்த நிலையில் மூவரும் நேற்று உரிமைக்குழுவின் முன் ஆஜராகி தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட உரிமைக்குழு, அவர்களின் இடைநீக்கத்தை ரத்து செய்யும் தீர்மானம் விரைவில் கொண்டுவரப்படும் என்று அறிவித்துள்ளது.
சென்னை தீவுத்திடல் அரங்கில் இன்று (13/01/2024) மாலை 6.00 மணிக்கு, 40 வகையான கலைகளுடன் 'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' துவக்க விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார்.
இதனைத் தொடர்ந்து,சென்னை மாநகரில் 18 இடங்களில் 4 நாட்களுக்கு (14/01/2024 முதல் 17/01/2024 வரை) கலை விழாக்கள் நடைபெறவுள்ளது. சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவில் 1500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொள்ளாவார்கள்.
ரேசன் கடைகளில் வழங்கப்படும் துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை திமுக அரசு நிறுத்தக்கூடாது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள சலுகைகளை திமுக அரசு மக்களிடம் இருந்து பறிக்கின்றது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பறித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று மாலை அரசியல் பயணமாக டெல்லி செல்லவுள்ளார்.
மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை நேரில் ஆஜராகும்படி 4வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.
தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை கொண்டாட மக்கள் சொந்த ஊருக்குச் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை மற்றும் விடுமுறை தினங்களை முன்னிட்டு ஏர் இந்தியா விமான நிறுவனம் தனது சேவைக்கட்டணத்தை மூன்று மடங்கிற்கு உயர்த்தியுள்ளது. முதல் வகுப்பில் பயணம் செய்ய ரூபாய் 41 ஆயிரம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கோவா, அந்தமான் செல்லும் விமானங்களில் கடைசி நேரத்தில் கட்டணம் ரூபாய் 27 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மூன்று மாதத்திற்கு முன்னர் இந்த கட்டணங்கள் 3 ஆயிரம் முதல் 7ஆயிரம் வரை இருந்த கட்டணங்கள் மூன்று மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படும் நிலையில் கோயம்பேட்டில் சிறப்பு சந்தை போடப்பட்டுள்ளது. 15 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு 300ரூ முதல் 500ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மஞ்சள் கொத்து 80ரூ முதல் 100ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இஞ்சி கொத்து 100ரூ முதல் 120ரூ வரை விற்பனை செய்யப்படுகிறது.
பொங்கல் பண்டிகையால் உள்நாட்டு விமானங்களில் டிக்கெட்டுகளின் விலை தாருமாறாக உயர்ந்துள்ளது. வழக்கமாக சென்னையில் இருந்து திருச்சிக்கு ரூபாய் 2, 264 கட்டணமாக இருக்கும். ஆனால் தற்போது ரூபாய் 11,369ஆக உள்ளது. இதேபோல் தூத்துக்குடி, மதுரை, கோவை உள்ளிட்ட விமான கட்டணங்களின் விலையும் உயர்வு.
அம்பத்தூர் சாலையில் உள்ள தொழிற்பேட்டையில் தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் குடோனில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
அந்த குடோன் உணவுப்பொருள், உடை, டயர் உள்ளிட்ட இறக்குமதி பொருட்கள் சுங்கவரி கட்டும் முன் இருப்பு வைக்கும் குடோன் ஆகும். வேளச்சேரி ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான குடோன் என தகவல் வெளியாகியுள்ளது.
50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தண்ணீரையும் ரசாயண உரையையும் பீய்ச்சி தீயை அணைக்க போராடி வருகின்றனர். நள்ளிரவு முதல் 8 மணி நேரமாக தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது.
பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்தில் நேற்று மட்டும் 2.17 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர் என போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.
Background
Pongal Buses: இந்த ஆண்டுக்கான பொங்கல் விடுமுறை இன்று முதல் தொடங்கிவிட்டது என்றே கூறலாம். இன்று தொடங்கி அதாவது ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி ஜனவரி 17ஆம் தேதி வரைக்கும் பொங்கல் கொண்டாட்டத்திற்கான விடுமுறையாக உள்ளது. இதனால் வெளியூரில் வேலை செய்யும் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு படையெடுத்துவருகின்றனர்.
இதற்காக தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் ஏற்கனவே அறிவித்தைப் போல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் நேற்று மட்டும் சுமார் 2.17 லட்சம் மக்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர். அதாவது 3 ஆயிரத்து 946 பேருந்துகளில் நள்ளிரவு 12 மணிவரை இரண்டு லட்சத்து 17 ஆயிரத்து 30 பேர் பயணம் செய்துள்ளனர். இதுவரை ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 310 பேர் சொந்த ஊர்களுக்குச் செல்ல முன்பதிவு செய்துள்ளனர். மக்கள் சொந்த ஊருக்குச் செல்ல வரும் 14ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
பொங்கல் பண்டிகை:
லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட உள்ளனர். வழக்கமாக பண்டிகை காலத்தில் பொதுமக்கள் சிரமமின்றி ஊருக்கு சென்று வர அவர்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும் தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த பொங்கல் பண்டிகைக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. ஜனவரி 12ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 19,484 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து 11,006 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகை முடிந்து பிற ஊர்களில் இருந்து சொந்து ஊர்களுக்கு மக்கள் செல்வதற்காக ஜனவரி 16 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை 17,581 சிறப்பு பேருந்கள் இயக்கப்படுகிறது.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 5 முன்பதிவு மையங்களும், தாம்பரம் பேருந்து நிலையத்தில் ஒரு முன்பதிவு மையமும், கிளாம்பாக்கத்தில் 5 முன்பதிவு மையங்களும் செயல்படுகிறது. இதனை பயன்படுத்தி மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தீரா குழப்பம்:
ஆனால் இந்த பேருந்துகள் எங்கிருந்து புறப்படும் என்பது குறித்து மக்கள் மத்தியில் தீரா குழப்பம் நீடித்து வருகிறது. இதனை தெளிவு படுத்தும் வகையில் நேற்றைய தினம் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், " 30.12.2023-க்கு முன்பு முன்பதிவின் போது அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தை (TNSTC) சார்ந்த பேருந்துகளில் கோயம்பேடு, தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் இருந்து பயணம் மேற்கொள்ளும் வகையில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம், விழுப்புரம் மார்க்கமாக பயணிக்க முன்பதிவு செய்திருக்கும் பயணிகள் அதற்கு பதிலாக கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT), கிளாம்பாக்கம் சென்றடைந்து, அங்கு தாங்கள் கோயம்பேட்டில் முன்பதிவு செய்த அதே நேரத்தில் புறப்படும் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இயக்கப்படும் பிற அரசு போக்குவரத்துக் கழகங்களான விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி பேருந்துகளில் (மூன்றுக்கு இரண்டு இருக்கை (3X2) கொண்டவை) பயணிக்க முன்பதிவு செய்தவர்களும் பிற முன்பதிவு செய்யாத பயணிகளும் விழுப்புரம், திருச்சி, மதுரை மார்க்கமாக தென்மாவட்டங்களுக்கு பயணிக்க கோயம்பேட்டிற்கு வரவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என குறிப்பிடப்பட்டது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -