Breaking News LIVE: காவிரி நதிநீர் பங்கீடு - உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்
Breaking News LIVE:நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
அதானி குழுமம் முதலீடு செய்தது யாருடைய பணம் என்பது தான் முதல் கேள்வி என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். நாட்டில் பொருளாதாரம் மற்றும் வணிகம் தொடர்பாக வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றார் ராகுல் காந்தி
தமிழ்நாடு விவசாயிகளை மதிக்கிறேன் ஆனாலும், கர்நாடகா மிகவும் மோசமான நிலையில் உள்ளது என கர்நாடக துணை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
நிலவில் தரையிறங்கியுள்ள விக்ரம் லேண்டரில் இருக்கு RAMBHA LP அறிவியல் கருவியின் ஆய்வு முடிவுகளை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இதில் நிலவின் மேற்பரப்பு அருகே பிளாஸ்மா இருப்பதை அறிவியல் ஆய்வு கருவி உறுதி செய்துள்ளது.
நெல்லையில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாள் செப்டம்பர் 17-க்கு பதிலாக 18 அன்று அறிவிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்களின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டது. அதில், விநாயகர் சதுர்த்தி பண்டிகை தவறுதலாக ஒருநாள் முன்னதாக அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து விநாயகர் சதுர்த்தி விடுமுறை தேதியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்நிலையில்,தமிழ்நாடு அரசு விடுமுறை தேதியை மாற்றி அறிவித்துள்ளது.
செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நிலவில் கந்தகம் இருப்பது மற்றொரு தொழில்நுட்பம் மூலமும் உறுதி செய்யப்பட்டது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்தியா கூட்டணி கட்சிகளின் 3வது ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க, மும்பை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு பான் மசாலா, குட்கா உள்ளிட்ட பொருட்களை கடத்தி வந்த செங்கோட்டை நகராட்சி பாஜக கவுன்சிலர் செண்பகராஜன் உள்பட மூவர் கைது ரூ.10 லட்சம் மதிப்பிலான 1,250 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்
சென்னை மெட்ரோ ரயில் சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu)
இன்று (ஆகஸ்ட் 31 ஆம் தேதி) சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ. 44,360 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ. 5,545 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 48,120 ஆகவும் கிராமுக்கு ரூ. 6,015 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை மெட்ரோ ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. அதில், “தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சின்னமலை ரயில் நிலையத்தில் இருந்து அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ வரை ஒற்றைப் பாதையில் ரயில் இயக்கப்படுகிறது. மேலும் விம்கோ நகர் பணிமணையில் இருந்து நீல நிற வழித்தடத்தில் உள்ள சின்னமலை ரயில் நிலையம் வரை வழக்கமான சேவைகள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.
காஞ்சிபுரம் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிகுள்ளாகின.இந்தப்பகுதியில் கனரக வாகனம் ஒன்று பழுதாகி நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மும்பையில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டத்தின் முழு அட்டவணையை இந்திய கூட்டணி நேற்று வெளியிட்டது. இந்த கூட்டமானது (இன்று) ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ம் தேதி மும்பையில் உள்ள கிராண்ட் ஹயார் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
I.N.D.I.A. கூட்டணி கட்சிகளின் 3-வது ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க, சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இந்தியாவிற்கான பேச்சு என்ற தலைப்பில் பாட்காஸ்டில் பேச உள்ளதாக, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
024ல் முடியப்போகிற பாஜக ஆட்சி, இந்தியாவை எப்படியெல்லாம் உருக்குலைத்து இருக்கிறது. எதிர்காலத்தில் நாம் கட்டமைக்க விரும்புகிற சமத்துவ சகோதரத்துவ இந்தியா குறித்து ஒரு ஆடியோ சீர்யஸில் பேச உள்ளேன். அதற்கு #Speaking4India என தலைப்பு வெச்சுக்கலாமா. தெற்கிலிருந்து வரும் இந்த குரலுக்காக காத்திருங்கள்” என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னையில் இன்று (ஆகஸ்ட் 31) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 467வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 16 மாதங்களை கடந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.
ங்கச்சாவடிகளில் ஒருமுறை மட்டும் சென்று வரும் வாகனங்களுக்கு குறைந்தது ரு, 2 முதல் ரூ.45 வரையிலும், இருமுறை (அதாவது ரிட்டன்) எடுக்கும் வாகனங்களுக்கு ரூ. 10 முதல் 65 வரையிலும் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், மாதாந்திர பாஸ் கட்டணமும் உயர்த்தப்படுகிறது. இந்த கட்டண உயர்வு அடிப்படையில், குறைந்தது ரூ. 5 முதல் அதிகபட்சமாக ரூ. 150 வரை உயர்த்தப்பட உள்ளதாக தெரிகிறது.
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் (NHAI) உள்ள 816 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. அதில், தமிழ்நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டும் 55 சுங்கச்சாவடிகள் உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டில் 27 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது.
Background
Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 16 மாதங்களை கடந்தும் மாற்றமின்றி விற்பனையாகி வரும் சூழலில், இன்றைய நிலவரத்தை அறியலாம்.
பெட்ரோல், டீசல்:
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இன்றைய விலை நிலவரம்
இந்நிலையில் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 30) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 466வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 16 மாதங்களை கடந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.
அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -