Breaking News LIVE: சபாநாயகரை மீண்டும் சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர்
Breaking LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
நடிகர் ரஜினிகாந்த் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்தார். ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த், நட்பின் அடிப்படையில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபுவை நேரில் சந்தித்தார்.
மது குடிப்பதால் வாய் புற்றுநோய், தொண்டை புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்ற 7 வகை புற்றுநோய் ஏற்படும் என, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி தரப்பிலான அதிமுகவினர் நடத்திய கூட்டம் முடிவுற்ற நிலையில் சபாநாயகரை மீண்டும் சந்தித்தனர். எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்தது குறித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை வெளியேற்ற வலியுறுத்தி வருகின்ற 20 ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும் என மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பணிநீக்கம் செய்யப்பட் செவிலியர்கள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தபால் மூலம் கோரிக்கை மனுவை அனுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து செவிலியர்கள் கோரிக்கை மனுவை தபாலில் அனுப்பியுள்ளனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் நாளை முதல் 13ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்புடன் ரூ.1,000 வழங்கப்படுகிறது.
சர்ச்சை பேச்சு.. சித்த மருத்துவர் ஷர்மிகாவுக்கு நோட்டீஸ்..
கர்ப்பம், உடல் அமைப்பு மற்றும் பல உபாதைகளைக் குறித்து சர்ச்சையான வகையில் பேசிய சித்த மருத்துவர் ஷர்மிகாவுக்கு, இந்திய மருத்துவ ஆணையர், தாளாளர் கொண்ட குழு 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. ஹோமியோபதி வாரியமும் விளக்கம் கேட்டுள்ளது
இணையத்தில் தனது வீடியோ பதிவுகள் மூலம் ஷர்மிகா தவறான தகவல்களை பரப்புவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சித்த டாக்டர் ஷர்மிகாவிடம் இந்திய மருத்துவ இயக்குனரகம் 15 நாட்களுக்குள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இந்திய மருத்துவ ஆணையர் மற்றும் தாளாளர் கொண்ட குழு முன்பு நேரின் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி தெர்மல் நகர் கடற்கரை பகுதியில் ஒரு குழியில் 100 கடல் ஆமை முட்டைகள்- பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர்
அரக்கோணம் ரயில் நிலையம் அருகேயுள்ள தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக அரக்கோணம் - சென்னை செல்லும் ரயில்கள் நடுவழியில் நிறுத்தம் - பயணிகள் அவதி
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 12 ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் வரையிலான ரூ.300 கட்டண தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது. tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளம் மூலம் பக்தர்கள் தங்களுக்கான டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவிப்பு
பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று முதல் வழங்கப்படுவதை முன்னிட்டு முக்கிய அறிவுரைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஏற்கனவே இருப்பில் உள்ள பச்சரிசியை விநியோக்க கூடாது என்றும், இரண்டு ரூ.500 தாள்கள் மட்டுமே வழங்க வேண்டும், சில்லறை மாற்றி தரக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரேஷன் கடைகள் வழங்கப்படும் அரசின் தரத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
சென்னையில் பனிமூட்டம் காரணமாக கோலாலம்பூர் மற்றும் குவைத்தில் இருந்து வந்த விமானங்கள் சுமார் 30 நிமிடங்கள் தாமதமாக தரையிறக்கம்
Background
தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் வழங்கப்பட உள்ள நிலையில், பொதுமக்கள் ஆர்வமுடன் அதனைப் பெற காத்திருக்கின்றனர்.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் மக்களை கவரும் வண்ணம் அதிகப்பட்சமாக ரூ.2,500 பணத்துடன் கூடிய கரும்பு,பச்சரிசி உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வந்தது. திமுக அரசு பொறுப்பேற்றதும் கடந்தாண்டுபணம் எதுவும் வழங்கப்படாமல் முழு கரும்போடு சேர்த்து பச்சரிசி, வெல்லம், உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.
இது பொதுமக்களை அதிருப்தியில் ஆழ்த்திய நிலையில், பொருட்களும் தரமில்லாமல் வழங்கப்படதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பொங்கல் சிறப்பு தொகுப்பை விநியோகித்த சில நிறுவனங்களை கருப்பு பட்டியலுக்குள் கொண்டுவர தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் தான் நடப்பாண்டு பொங்கலை கொண்டாட சூப்பரான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு ரூ.1,000 பணத்துடன் கூடிய ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஜனவரி 3 ஆம் தேதி பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் வீடு, வீடாக தொடங்கியது. தினமும் 100 முதல் 200 கார்டுகளுக்கு பரிசுப்பொருட்களை விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எந்தெந்த தெருவில் உள்ளவர்கள் எந்த தேதியில், எந்நேரத்தில் வந்து பொருட்களை பெற வேண்டும் என்ற விவரங்கள் அந்த டோக்கனில் குறிப்பிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2 கோடியே 19 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் இதன்மூலம் பயனடைவார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை சென்னை தலைமைச் செயலகம் செல்லும் வழியில் போர் நினைவுச் சின்னம் எதிரே உள்ள அன்னை சத்யா நகரில் உள்ள ரேசன் கடைக்கு சென்று இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். அதேபோல் எம்பிக்கள், தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் மாநிலத்தின் மற்ற இடங்களில் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பில் முறைகேடு நடைபெறாமல் தடுப்பதற்காக கைரேகை பதிவு முறை அவசியமாக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பொங்கல் தொகுப்பில் ஏதாவது குறைகள் இருந்தால் புகார் தெரிவிக்க எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் தொகுப்பு பெற்றவுடன் குறுஞ்செய்தி குடும்ப அட்டைதாரர்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 9 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் நிலையில், அதனை பெற முடியாதவர்கள் ஜனவரி 16 ஆம் தேதி பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -