Pink Auto: பெண்களுக்கு பிங்க் ஆட்டோ வாங்க மானியம்; கட்டுப்பாடு நீக்கம்- விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

சென்னையில் உள்ள 200 பெண்களை தேர்வு செய்து ரூ. 1 லட்சம் மானியம் வழங்கும் பிங்க் ஆட்டோ திட்டம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

Continues below advertisement

சென்னையில் உள்ள பெண்களுக்கு பிங்க் ஆட்டோ வாங்க 1 லட்சம் ரூபாய் மானியம் வழங்கும் திட்டத்தில், கல்வித் தகுதி கட்டுப்பாடு நீக்கப்பட்டு உள்ளது. அதேபோல விண்ணப்பிக்க அவகாசமும் டிசம்பர் 10ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.

Continues below advertisement

சென்னையில் உள்ள 200 பெண்களை தேர்வு செய்து ரூ. 1 லட்சம் மானியம் வழங்கும் பிங்க் ஆட்டோ திட்டம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டமானது, சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் விதமாகவும், பெண்களுக்கான சுய தொழில் வாய்ப்பினை உருவாக்கும் விதமாகவும் உருவாக்கப்பட உள்ளது.

செயல்படுவது எப்படி?

200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அரசு மானியமாக தலா ரூ. 1 லட்சம் வீதம் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு 200 இளஞ் சிவப்பு ஆட்டோக்களை இயக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் விண்ணப்பிக்கும்‌ காலம்‌ 10.12.2024 வரை‌ நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெற குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்பட்டுள்ளது.

தகுதி என்ன?

  • பெண்கள்‌ மட்டும்‌ விண்ணப்பிக்கலாம்‌.
  • கைம்பெண்கள்‌ மற்றும்‌ ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்‌.
  • 25 வயது முதல்‌ 45 வயதிற்குள்‌ இருக்க வேண்டும்.
  • ஓட்டுநர்‌ உரிமம்‌ வைத்திருக்க வேண்டும்.
  • சென்னையில்‌ குடியிருக்க வேண்டும்‌.

இத்திட்டத்தில்‌ பயன்‌ பெற 1௦ஆம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌ என நிர்ணயம்‌ செய்யப்பட்டு இருந்தது. தற்போது, அந்த தகுதி நீக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

சென்னை மாவட்ட சமூக நல அலுவலர்‌ (வடக்கு அல்லது தெற்கு),

8ஆவது தளம்‌,

சிங்காரவேலர்‌ மாளிகை,

சென்னை - 600001.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

இதை தவற விடாதீங்க: Fengal Cyclone LIVE Updates | ஃபெங்கல் புயல் LIVE

Continues below advertisement
Sponsored Links by Taboola