கீர்த்தி சுரேஷ்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தெலுங்கில் இவர் நடித்த மகாநதி திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்றார். தற்போது வருன் தவான் நடித்துள்ள பேபி ஜான் படத்தின் மூலம் இந்தியிலும் எண்ட்ரி கொடுக்கவிருக்கிறார். கீர்த்தி சுரேஷ் இசையமைப்பாளர் அனிருத்தை காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் அடிக்கடி தகவல்கள் வெளியாவதைப் பார்க்கலாம். ஆனால் இதுகுறித்து அவர் வெளிப்படையாக பேசாததால் இந்த தகவல்கள் வதந்திகளாகவே இருந்து வந்தன. மேலும் கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த விவாதம் பரவலாக இருந்து வந்தது. ஒருவழியாக இறுதியாக தனது திருமணத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் கீர்த்தி .
15 ஆண்டு காதல்
கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் காதலனை அடுத்த மாதம் திருமணம் செய்ய உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. அதன்படி, வரும் டிசம்பர் 11ஆம் தேதி கோவாவில் கீர்த்தி சுரேஷ்-க்கும் அவரது நீண்ட நாள் காதலருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக இணையத்தில் தகவல்கள் தெரிவித்தன. திருமணம் மிக எளிமையாகவும் அதைதொடர்ந்து, பிரமாண்ட வரவேற்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொச்சியில் பள்ளி பருவத்தில் தன்னுடன் சேர்ந்து பயின்ற ஆண்டனி தட்டில் என்பவரை தான் கீர்த்தி சுரேஷ் காதலித்து வருவதாகவும், பெற்றோர் சம்மதத்துடன் தற்போது திருமணம் செய்ய இருப்பதாகவும் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆண்டனி துபாயை மையமாக கொண்ட தற்போது பிஸினஸ் செய்து வருவதாகவும், கொச்சியில் பள்ளி படிப்பின்போது மலந்த காதல் 15 ஆண்டுகளை கடந்து தற்போது திருமணத்தை எட்டியுள்ளதாகவும் தெரிகிறது. இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கீர்த்தி சுரேஷ் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு கீர்த்தி மற்றும் ஆண்டனி என்று கேப்ஷன் இட்டுள்ளார். தனது திருமணம் குறித்து கீர்த்தி சுரேஷ் மனம் திறப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் இந்த போஸ்டர் அவரது திருமணத்தின் அழைப்பிதழாகவும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.