Breaking News LIVE 8th Nov 2024: கங்குவா படத்தை வெளியிடத் தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

சுகுமாறன் Last Updated: 08 Nov 2024 04:35 PM
Breaking News LIVE: கங்குவா படத்தை வெளியிடத் தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்

சூரியாவின் கங்குவா படத்தை வெளியிட தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிலையன்ஸ் நிறுவத்துக்கு வழங்க வேண்டிய தொகையான ரூ.55 கோடியை முழுமையாக ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் செலுத்தியதால் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.  

Breaking News LIVE: உதவிப் பொறியாளர் பணியிடத்திற்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்குப் பணி நியமன ஆணை

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது பெருமுயற்சியால் உருவான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதினை முனைவர் மா. செல்வராசன் அவர்களுக்கு வழங்கி, @tnschoolsedu சார்பில் வகுப்பறை உட்கட்டமைப்பினை மேம்படுத்தும் வகையில் பல்வேறு புதிய கட்டடங்களைத் திறந்து வைத்தேன். மேலும், பல துறைகளிலும் உதவிப் பொறியாளர் பணியிடத்திற்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்குப் பணி நியமன ஆணைகளையும், கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளையும் வழங்கினேன்





Breaking News LIVE: 172 பேருடன் டெல்லி கிளம்பிய ஏர் இந்திய விமானத்தில் கோளாறு - அடுத்து நடந்தது என்ன?

சென்னையில் இருந்து 172 பேருடன் டெல்லி புறப்பட்ட ஏர் இந்திய விமானம் எந்திரக்கோளாறு காரணமாக ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது. கோளாறு கண்டறியப்பட்டதும் விமானம் நிறுத்தப்பட்டதால் அசம்பாவிதம் தவிக்கப்பட்டுள்ளது. 172 பேர்ன் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. இந்த விமானம் 7 மணி நேரம் தாமதமாக இன்று மாலை 5 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு. வங்கக் கடலில் அடுத்த 48 மணிநேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது.

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு


தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு.  தமிழ்நாட்டில் பதினொரு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. வங்கக் கடலில் அடுத்த 48 மணிநேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது - வானிலை மையம் அறிவிப்பு. 

Dugong Conservation Reserve: தஞ்சாவூர் : மனோரா கடற்கரையில் ₹15 கோடியில் சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம் அமைக்கிறது தமிழ்நாடு அரசு.

தஞ்சாவூர் மாவட்டம் மனோரா கடற்கரையில் ₹15 கோடியில் சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம் அமைக்கிறது தமிழ்நாடு அரசு.


மாதிரிப் படங்கள் வெளியீடு! இந்த மையத்தில் முழுவதுமாக பொதுமக்களை அனுமதிக்கும் பகுதி, பகுதி அளவு பொதுமக்களை அனுமதிக்கும் பகுதி, பொதுமக்களுக்கு அனுமதி இல்லாத பகுதி என்று மூன்று பகுதியாக இந்த மையம் அமைக்கப்படும்.


கடல் பசு வடிவிலான மையம், அருங்காட்சியகம், 4டி அரங்கம், பூங்கா, திறந்தவெளி அரங்கம், உணவகம், வாகன நிறுத்துமிடம், செல்ஃபி பாயிண்ட், குடிநீர் வசதி, மிகப்பெரிய அளவிலான முகப்பு ஆகியவைகள் இடம்பெற உள்ளன. 448 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளை உள்ளடக்கிய பாக்விரிகுடா கடற்பசு பாதுகாப்பகமாக (Dugong Conservation Reserve) ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

"காவல்துறையினர் வதந்தி பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்” - ராமதாஸ், பாமக நிறுவனர்

“தமிழ்நாட்டில் இன்றுள்ள அரசியல் கட்சிகளில் அண்ணல் அம்பேக்தரை கொள்கை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்ட முதல் கட்சி பாட்டாளி மக்கள் கட்சிதான் தமிழ்நாட்டில் சாதிக் கலவரத்தைத் தூண்டும் நோக்கத்துடன் கடலூர் மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கரின் சிலைகளை உடைக்க பாட்டாளி மக்கள் கட்சி திட்டமிட்டிருப்பதாக காவல்துறையினர் வதந்தி பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்” - ராமதாஸ், பாமக நிறுவனர்

உறுப்பினர் சேர்க்கை விவகாரம்: மாநில தலைமை மீது அதிருப்தி.. பாஜக உயர்மட்டக் குழு கூட்டம் நடக்க இருப்பதாக தகவல்

எதிர்பார்த்த அளவு உறுப்பினர் சேர்க்கை நடக்காத நிலையில், வரும் 11ம் தேதி சென்னை பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் உயர்மட்டக் குழு ஆலோசனைக் கூட்டம் நடக்கும் என அறிவிப்பு 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க தேசிய தலைமை அறிவுறுத்திய நிலையில், 10 லட்சம் பேர் வரை மட்டுமே உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்.


உறுப்பினர் சேர்க்கை விவகாரத்தில் தேசிய தலைமை, மாநில தலைமை மீது அதிருப்தியில் உள்ளதால், உயர்மட்டக் குழு கூட்டம் நடக்க இருப்பதாக தகவல்

சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விஜய்

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்த தவெக தலைவர் விஜய்.

சந்திரமோகன் மட்டும் தினசரி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை

சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் இரவு நேரத்தில் காவலர்களிடம் அவதூறாக பேசிய சந்திரமோகன், தனலட்சுமி இருவருக்கும் ஜாமின் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு.


பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படும் வகையில் இருவரும் நடந்துகொண்டனர் - காவல்துறை தரப்பு இதற்காக எவ்வளவு நாட்கள் இருவரையும் சிறையில் வைக்கப் போகிறீர்கள்? - நீதிபதி ஜெகதீஷ் சந்திரா.


சந்திரமோகன் மட்டும் தினசரி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை

நயவஞ்சக சக்திகளின் நாசகார சீண்டலுக்கும், தூண்டலுக்கும் நாம் இரையாகிவிடக் கூடாது - விசிக தலைவர் திருமா, தொண்டர்களுக்கு கடிதம்

“திமுகவைப் பிடிக்காதவர்கள், திமுக கூட்டணியின் கட்டுக்கோப்பைக் கண்டு எரிச்சலடையக் கூடியவர்கள், நம்மையும் அறவே வெறுப்பவர்கள் போன்ற சக்திகள்தான் நமது கூட்டணியை சிதறடிக்கப் பார்க்கிறார்கள். நயவஞ்சக சக்திகளின் நாசகார சீண்டலுக்கும், தூண்டலுக்கும் நாம் இரையாகிவிடக் கூடாது. தோழமை கட்சிகளோடு இணைந்து நாம் உருவாக்கிய கூட்டணியில்தான் தொடர்கிறோம்! உறுதியாகத் தொடர்வோம்” தொண்டர்களுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கடிதம்.

வெம்பகோட்டை அகழாய்வில் 6,000 ஆண்டுகளுக்கு முந்தைய அணிகலன் தயாரிக்கப் பயன்படும் கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன

விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அகழாய்வில் 6,000 ஆண்டுகளுக்கு முந்தைய அணிகலன் தயாரிக்கப் பயன்படும் கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


ஜாஸ்பர், சார்ட் என்ற இக்கற்கள், முன்னோர்கள் விலங்குகளை வேட்டையாடுவதற்கான கருவிகள் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருட்களாகவும் பயன்படுத்தியுள்ளதாக அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் தகவல்.

திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைப்பதற்கான பணிகள் தொடக்கம்

திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைப்பதற்கான பணிகள் தொடக்கம். 7 தளங்கள் கொண்டதாக இதனை அமைக்க பொதுப்பணித்துறை திட்டம்.


காவிரிக் கரையில் அமைந்த மாநகரமான திருச்சிராப்பள்ளி மாநகரில், உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என்று கடந்த ஜுன் 27ம் தேதி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட 686 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட 686 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு.


அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், சட்ட விரோதமாக கூடுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் எழும்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

"விலங்குகளை பாதுகாப்பது நமது பொறுப்பு" - நடிகை நிக்கி கல்ராணி.

"விலங்குகளை பாதுகாப்பது நமது பொறுப்பு" - நடிகை நிக்கி கல்ராணி.


சமூக சேவகர் அப்சரா ரெட்டியின் ‘குட் டீட்ஸ் க்ளப்’ சார்பாக, வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளின் பராமரிப்பிற்காக ₹3 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.


இதில் நடிகை நிக்கி கல்ராணி கலந்துகொண்டு காசோலையை உயிரியல் பூங்கா இயக்குனர் ஆஷிஷ் ஸ்ரீ வஸ்தவாவிடம் வழங்கினார்.

திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.08) ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சி தலைவர் சாருஸ்ரீ உத்தரவு!

கனமழை காரணமாக திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.08) ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சி தலைவர் சாருஸ்ரீ உத்தரவு!

திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு  உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளார். 

Background


  • கன்னியாகுமரி, நெல்லை உள்பட 13 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை

  • சென்னையில் நேற்று மழை பெய்த நிலையில் இன்றும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு

  • வடதமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வே மையம்

  • தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி மீண்டும் அமையும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  • தி.மு.க. ஆட்சியில் 6 ஆயிரம் கொலையும், 50 ஆயிரம் கொள்ளையும் அரங்கேறி உள்ளது – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

  • ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு காவலர்கள் 2 பேர் சுட்டுக்கொலை – தீவிர தேடுதல் வேட்டையில் ராணுவம்

  • பாம்பன் புதிய ரயில் பாலத்தில் 90 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை ஓட்டம்

  • ஆந்திராவில் மின்கட்டண உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி போராட்டம் – முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் சகோதரி ஷர்மிளா தலைமையில் பேரணி

  • முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை கேள்வி கேட்க பவன் கல்யாணுக்கு தைரியம் இல்லை – முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் குற்றச்சாட்டு

  • குடும்பத்தை விமர்சித்தால் விட்டு வைக்க மாட்டோம் – ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு சந்திரபாபு நாயுடு பகிரங்க எச்சரிக்கை

  • பஞ்சாப் மாநிலத்தில் வைகோல் பற்றி எரிந்த கிடங்கால் பயங்கர தீ விபத்து – புகை, மாசுபாட்டால் பொதுமக்கள் அவதி

  • தஞ்சையில் அமைய உள்ள சிப்காட் தொழில் பூங்காவால் 30 ஆயிரம் பேருக்ழகு வேலைவாய்ப்பு – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

  • அமரன் படத்தை தடை செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டம்

  • உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகளுக்கான ஓய்வூதியத்தால் உச்சநீதிமன்றம் அதிர்ச்சி

  • இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் முதல் டி20 போட்டி டர்பனில் இன்று நடக்கிறது

  • நேர்மையான தொழிலதிபர்களுக்கு பா.ஜ.க.வின் மூத்த அமைச்சர் நெருக்கடி – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

  • ராகுல்காந்தி மீது ஜோதிராதித்ய சிந்தியா விமர்சனம்

  • ட்ரூகாலர் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை – பெங்களூர், குருகிராம் நகரங்களில் உள்ள அலுவலகங்களில் வருமானள் குறித்து நேரில் ஆய்வு

  • ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய பணம் வழங்கப்பட்டு வருகிறது – அமைச்சர் ராஜகண்ணப்பன்

  • அமேசான், ப்ளிப்கார்ட் நிறுவனங்களுக்கு சொந்தமான 19 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

  • புகார்தாரரும், குற்றம்சாட்டப்பட்டவரும் சமரசம் செய்து கொண்டதால் பாலியல் வழக்கில் சமரசம் செய்ய முடியாது - உச்சநீதிமன்றம்


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.