Breaking News LIVE 28th OCT 2024: 234 திமுக சட்டப்பேரவைத் தொகுதி பார்வையாளர்களுடன் முதல்வர் ஆலோசனை

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக உடனுக்குடன் காணலாம்.

சுகுமாறன் Last Updated: 28 Oct 2024 11:24 AM
தமிழக வெற்றிக் கழகம் பாஜகவின் A டீம், B டீம் அல்ல பாஜகவின் C டீம் - அமைச்சர் ரகுபதி

துணிச்சலுடன் இருங்கள். உங்களுக்கு அநீதி நேர்வதாக நினைத்தால், நாங்கள் உங்களுக்காக நிற்போம் - எம்.எல்.ஏ வினேஷ் போகட்

குருபூஜையை ஒட்டி அக்.30ம் தேதி பசும்பொன் செல்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை ஒட்டி அக்.30ம் தேதி பசும்பொன் செல்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

234 திமுக சட்டப்பேரவைத் தொகுதி பார்வையாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

234 திமுக சட்டப்பேரவைத் தொகுதி பார்வையாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.


அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தேர்தல் பணிகள் குறித்தும், அடுத்து செய்யவேண்டிய பணிகள் குறித்தும் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்க உள்ளார்.

எறும்புத்தின்னி விலங்கைப் பிடித்து ₹3 லட்சத்திற்கு விற்க முயன்ற கும்பல்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே டேனிஸ்பேட்டை வசப்பகுதியில் எறும்புத்தின்னி விலங்கைப் பிடித்து ₹3 லட்சத்திற்கு விற்க முயன்ற கும்பல்..


விற்பனை செய்ய முயன்றவர்கள் மற்றும் வாங்க முயன்றவர்கள் என 4 பேர் கைது. கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல்

128 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல். கடத்தலுக்கு பயன்படுத்திய பைக் பறிமுதல்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த குரங்காத்துப்பள்ளம் பகுதியில் பைக்கில் கள்ளச்சாராயம் கடத்திய தங்கராசு (28) என்ற நபர் பிடிபட்டார்.


128 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல். கடத்தலுக்கு பயன்படுத்திய பைக் பறிமுதல்

செவிலியர்களை கைது செய்ய ஒரு புகார் போதுமானது என்ற முடிவை போலீசார் எடுக்கக் கூடாது

சிகிச்சையில் அலட்சியம் என்ற குற்றச்சாட்டில் செவிலியர்களை கைது செய்வதற்கு முன்பு மருத்துவ நிபுணர்களின் கருத்தை போலீசார் கேட்க வேண்டும் என கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு. ”மருத்துவ சிகிச்சை தொடர்பாக செவிலியர்களை கைது செய்ய ஒரு புகார் போதுமானது என்ற முடிவை போலீசார் எடுக்கக் கூடாது” - நீதிபதி காட்டம்

"விஜய் கொள்கையும் எங்க கொள்கையும் ஒத்துப்போகல.. தவெகவுடன் கூட்டணி கிடையாது" - சீமான்

"விஜய் கொள்கையும் எங்க கொள்கையும் ஒத்துப்போகல.. தவெகவுடன் கூட்டணி கிடையாது" - தவெக முதல் மாநாட்டில் விஜய் பேசியது குறித்து நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து

TVK Ideology Song : தமிழக வெற்றிக் கழகம்: கொள்கைப் பாடல்

Background


  • விக்கிரவாண்டியில் கோலாகலமாக நடைபெற்றது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு

  • விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள், கொடி குறித்து விளக்கம் அளித்தார் விஜய்

  • பிளவு வாத அரசியல், ஊழல் தான் தமிழக வெற்றிக் கழகத்தின் எதிரி என பா.ஜ.க. மற்றும் தி.மு.க.வை குறிப்பிட்டார் விஜய்

  • தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் திராவிடமும், தமிழ் தேசியமும் இரண்டு கண்கள் – நடிகர் விஜய்

  • சாதி, மத பேதமின்றி அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க சமூக நீதி பாதையில் பயணிப்போம் – விஜய்

  • பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையில் மட்டும் உடன்பாடு இல்லை – தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்

  • தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்தால் கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு

  • தமிழ்நாட்டில் ஏற்கனவே உள்ள அரசியல் கட்சிகளுடன் இணைந்து எக்ஸ்ட்ரா லக்கேஜ் ஆக இருக்க விரும்பவில்லை – விஜய்

  • குடும்ப அரசியல் செய்யும் திராவிட மாடல் அரசு அண்ணா, பெரியார் பெயரில் மக்களை சுரண்டுகிறது – விக்கிரவாண்டியில் விஜய் பரபரப்பு பேச்சு

  • தமிழக வெற்றிக் கழகம் நாகரீகமான அரசியலை செய்யும், அதேசமயம் ஆழமான அரசியல் செய்யும் – விஜய் திட்டவட்டம்

  • தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் வளர்ந்ததே சினிமாவால்தான் ஆகும் – விஜய் பேச்சு

  • மதுவை ஒழிக்க சிறப்புச் சட்டம் இயற்றி பதநீர் மாநில பானமாக அறிவிக்கப்படும் – தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்

  • மாநில சுயாட்சி, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் – விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளை அறிவித்தார் விஜய்

  • தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை இரு மொழிக் கொள்கை; தமிழ் ஆட்சி மொழியாகவும், ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும் இருக்கும்

  • விஜய் தனது நீண்ட கால நண்பர் என்றும், அவரது புதிய முயற்சிக்கு வாழ்த்துகள் என்றும் துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து

  • யார் அரசியலுக்கு வந்தாலும் தி.மு.க.வைத்தான் எதிர்பார்ப்பார்கள் – ஆர்.எஸ்.பாரதி

  • விஜய்யின் பேச்சு இரண்டரை மணி நேரம் திரைப்படம் பார்ப்பது போல இருந்தது- முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன்

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.