வாக்காளர்கள் முறைகேட்டில் ஈபிஎஸ் ஏன் மெளனம் காக்கிறார் என்று துரைமுருகன் விமர்சித்திருந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அதற்கு திமுக மற்றும் பொது செயலாளர் துரைமுருகனுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். 

Continues below advertisement

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணத்தில் இன்று விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் மக்களை சந்தித்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. 

எழுச்சிப்பயணத்தில் ஈபிஎஸ் பேச்சு

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணத்தில் இன்று விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் மக்களை சந்தித்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.

Continues below advertisement

“ஆட்சி திமுக கையில் – எங்களை குற்றம் சாட்டுவது ஏன்?”

அப்போது பேசிய அவர், “திமுக ஆட்சி பொறுப்பேற்று 50 மாதம் ஓடிவிட்டது. உருப்படியான திட்டங்கள் எதுவுமில்லை. ஆனால் தமிழகம் வளர்ந்துவிட்டது என்பது போன்ற தோற்றத்தை திமுகவும் கூட்டணிகளும் பொய்யாக உருவாக்குகிறார்கள். இன்று வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு இபிஎஸ் வாய்த்திறக்காதது ஏன் என்று துரைமுருகன் கேள்வி கேட்கிறார். 86 வயதில் பொய்யான அறிக்கை வெளியிடுகிறார்.

அதிமுக என்ன செய்ய முடியும்..?

இப்போது ஆட்சியில் இருப்பது திமுகதானே… அவர்களிடம் தானே அதிகாரம் இருக்கிறது. ஸ்டாலினுக்குக் கீழே தானே அதிகாரிகள் உள்ளனர். ஸ்டாலின் உத்தரவின்பேரில், அமைச்சரின் கட்டுப்பாட்டில் தானே அவர்கள் செயல்படுகினறனர்..? வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் போன்றவை மாவட்ட ஆட்சியரின் பணி. அதில் இப்போது அதிமுக என்ன செய்ய முடியும்..? அதிமுக, பாஜக கூட்டணி வைத்ததும் திமுகவுக்குப் பயம் வந்துவிட்டது. அவர்களுக்கு வெற்றி பெற முடியாதென்று எண்ணம் வந்துவிட்டது. அதனால் தான் மடைமாற்றம் செய்கிறார். துரைமுருகன் அவர்களே, ஆட்சி உங்களிடம் உள்ளது, நீங்கள்தான் போலி வாக்காளர்களை சேர்க்கிறீர்கள்.”

“ஆதாரத்துடன் போலி வாக்காளர்களை நீக்கியது”

“உண்மையிலேயே தில்லு, திராணி, தெம்பு இருந்தால் நான் கேட்பதற்குப் பதில் சொல்லுங்கள். அவர் வயதில் மூத்தவர் என்பதால் மதிக்கிறோம். அதேநேரம், தவறான தகவல் வெளீயிட்டால் நிச்சயம் கண்டிப்போம். சென்னை மாநகராட்சியில் ஆர்.கே. நகர் தொகுதியில் 27,779 வாக்கு நீக்கப்பட்டது. நீதிமன்றம் நாடி, மாவட்டச் செயலாளர்கள் புகார் கொடுத்தோம், அதையும் கண்டுகொள்ளவில்லை. போலி வாக்காளர்களை நீக்கவில்லை. உடனே நீதிமன்றம் சென்று ஆதாரத்தோடு வாதாடி இப்போது நீக்கியிருக்கோம்.

ஒரு தொகுதியில் 27779 பேர் என்றால், இந்த ஆட்சியில் எத்தனை போலி வாக்காளர்கள் என்பதை எண்ணிப்பாருங்கள். பெரம்பூர் தொகுதியில் 12,085 வாக்காளர்கள் முறைகேடாக சேர்க்கப்பட்டதாக நாங்கள் கொடுத்த புகார் விசாரணையில் உள்ளது. திநகர் தொகுதியில் பல்லாயிரக்கணக்கான போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக புகார் கொடுத்திருக்கிறோம். சென்னை மாநகராட்சி முழுவதும் திமுக போலி வாக்காளர்களால் மட்டுமே வெற்றி பெறுகிறது.

இது உண்மை, ஆதாரபூர்வமாக நீதிமன்ற உத்தரவின் பேரில் சம்பந்தபட்ட அதிகாரிகள் வீடுவீடாகச் சென்று போலி வாக்காளர்களை நீக்கியுள்ளனர். இது திமுகவின் பித்தலாட்டம்தானே.? திமுக மக்களின் கட்சிக்காரர்களின் செல்வாக்கை இழந்துவிட்டனர். அதனால் 2026 தேர்தலில் திமுக கூட்டணி படுதோல்வி அடையும்.”

“கள்ள ஓட்டு போட்டவரை விடுவித்த திமுக அரசு”

“சென்னை மாநகராட்சித் தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்ற ஒருவரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிடித்து போலீஸில் ஒப்படைத்தார். ஆனால் அன்று ஒப்படைத்தவரை கைது செய்தார்கள். கள்ள ஓட்டு போட்டவரை விடுவித்தார்கள். இப்படிப்பட்ட கட்சிக்கு எங்களைப் பற்றி விமர்சனம் செய்ய அருகதை கிடையாது.

அம்மா இருக்கும்போது சென்னை மாநகராட்சி தேர்தல் நடந்தது, அப்போது ஒன்றரை மணிநேரத்தில் 1200 ஓட்டுகளை பதிவுசெய்தார்கள். நீதிமன்றம் சென்றோம், ஒன்றரை மணிநேரத்தில் எப்படி இவ்வளவு ஓட்டு பதிவாகும் என்று கேட்டு, முறைகேடு தேர்தலை ரத்துசெய்தது நீதிமன்றம். கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்தியதிலும் முறைகேடு நடந்தது. திமுக அரசாங்கமே அந்த தேர்தலை ரத்து செய்துவிட்டது.” என்று பேசினார்.