Breaking News LIVE: ”பாஜக ஆட்சியில் ஊழல் உச்சத்தில் உள்ளது” சிவாஜி சிலை உடைந்ததை சுட்டிக்காட்டி காங்கிரஸ் குற்றச்சாட்டு..!

Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே அறிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 26 Aug 2024 07:23 PM
”பாஜக ஆட்சியில் ஊழல் ” சிவாஜி சிலை உடைந்ததை சுட்டிக்காட்டி காங்கிரஸ் குற்றச்சாட்டு

” பாஜக ஆட்சியில் ஊழல் ” சிவாஜி சிலை உடைந்ததை சுட்டிக்காட்டி காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளது. 


மகாராஷ்டிரா: தொடர் மழையால் 35 அடி உயரம் கொண்ட சிவாஜி சிலை பலவீனமடைந்து உடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சிலையானது , கடந்தாண்டு பிரதமர் மோடி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர் மழையால் சிவாஜி சிலை பலவீனமடைந்து உடைந்தது?

மகாராஷ்டிரா: தொடர் மழையால் 35 அடி உயரம் கொண்ட சிவாஜி சிலை பலவீனமடைந்து உடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சிலையானது , கடந்தாண்டு பிரதமர் மோடி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அண்ணா அறிவாலயத்தில் திமுக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தொடங்கியது

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் திமுக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தொடங்கியது . முதலமைச்சர் ஸ்டாலின் நாளை அமெரிக்கா புறப்பட உள்ள நிலையில் கட்சி பணிகளை ஒருங்கிணைப்பது தொய்வின்றி மேற்கொள்வது குறித்து ஆலோசனை என கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் இதுவரை முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, எ.வ.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

பாஜக தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மை எரிப்பு

அண்ணாமலை உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு அதிமுக ஐடி லிங்கை சேர்ந்தவர்கள் துடைப்பம் மற்றும் செருப்பால் அடித்து உருவ பொம்மையை எரித்தனர்


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதற்கு கடும் கண்டனம் தெரிவித்து உருவ பொம்மை எரிப்பு


 

அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை!

நாளை அமெரிக்கா புறப்பட உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

Bomman Arrested : சத்தியமங்கலத்தில் மான் இறைச்சியுடன் பிடிபட்ட வன வேட்டை தடுப்பு காவலர் பொம்மன் கைது

சத்தியமங்கலத்தில் மான் இறைச்சியுடன் வன வேட்டை தடுப்பு காவலர் பொம்மன் கைது.


போலீசாரின் வாகன தணிக்கையின் போது இரு சக்கர வாகனத்தில் வந்தவரின் பையை சோதனை செய்ததில் உள்ளே கடமான் இறைச்சி இருந்தது தெரியவந்ததுள்ளது இறைச்சி கொண்டு வந்த சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வேட்டை தடுப்பு காவலராக பணியாற்றும் பொம்மனை கைது செய்து விசாரணை

மீனாட்சி அம்மன் கோயிலில் அவமரியாதை - நமீதா குற்றச்சாட்டு

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில், அதிகாரி தன்னை அவமரியாதை செய்ததாக நடிகையும் பாஜக பிரமுகருமான நமீதா குற்றச்சாட்டு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் கோரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்

”முருகன் மாநாட்டுத் தீர்மானங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன” - விசிக எம்.பி., ரவிகுமார் காட்டம்.

“கல்வியைக் காவி மயமாக்கும் முருகன் மாநாட்டுத் தீர்மானங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன” - விசிக எம்.பி., ரவிகுமார் காட்டம்

Rajinikanth - Duraimurugan : துரைமுருகன் நீண்ட கால நண்பர்.. வருத்தம் கிடையாது - ரஜினிகாந்த்

துரைமுருகன் என்னுடைய நீண்ட கால நண்பர். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது. நட்பு எப்போதுமே தொடரும் - ரஜினி

உயிர் இழந்தவர்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறோம்: வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஷாந்தோ 

"வங்கதேச போராட்டங்களில் உயிர் இழந்தவர்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறோம்" டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை முதல்முறையாக வீழ்த்திய பின் வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஷாந்தோ 

சென்னையை சேர்ந்த ஹரிகரன் Mr Delta 2024 பட்டத்தை வென்றார்

மன்னார்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான ஆணழகன் போட்டி..


இறுதிச் சுற்றில் சென்னையை சேர்ந்த ஹரிகரன் Mr Delta 2024 பட்டத்தை வென்றார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருமலைக்கு நெஞ்சுவலி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆற்காடு சுரேஷின் கூட்டாளி திருமலைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதால் அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ஆந்திராவில் உள்வாங்கிய கடல்நீர்.

ஆந்திரா: ஆர்.கே. கடற்கரையில் கடல் நீர் 400 மீட்டர் உள்ளவாங்கியதால் கற்களும் பாறைகளும் வெளியில் தென்பட்டன - ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து வந்ததால் பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்கள் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

அமெரிக்காவிற்கு நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் தமிழக முதலமைச்சர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

Background


  • பழனியில் இரண்டு நாட்கள் நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நிறைவு

  • அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை சிறப்பாக நடத்திய அமைச்சர் சேகர்பாபுவுக்கு ஆன்மீகச் செம்மல் பட்டம்

  • பழைய மாணவர்கள் என்ற ரஜினிகாந்தின் கருத்துக்கு பல்லு போன நடிகர்கள் என்று பதிலளித்த அமைச்சர் துரைமுருகன்

  • தி.மு.க.வில் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும்; ரஜினிகாந்தின் கருத்துக்கு அமைச்சர் உதயநிதி ஆதரவு

  • அண்ணாமலையில் பேச்சு சிறுபிள்ளைத்தனமானது – எடப்பாடி பழனிசாமி; தன்னைப் பற்றி பேச எடப்பாடிக்கு எந்த அதிகாரமும் இல்லை – அண்ணாமலை ஆவேசம்

  • சென்னை தின கொண்டாட்டத்தால் கிழக்கு கடற்கரை சாலை, திருவான்மியூரில் போக்குவரத்து நெரிசல்

  • கோவையில் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதியில் கஞ்சா, ஆயுதங்கள், திருடப்பட்ட வாகனங்கள் பறிமுதல்

  • கோயம்பேடு மதுபான பாரில் பண மோசடி – பார் நிர்வாகிகள், ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு

  • 3ம் உலகப்போர் ஏற்படுத்துவதை தடுக்க வேண்டும் – டொனால்ட் ட்ரம்ப்

  • தென்கொரிய வீரர்களுடன் செல்ஃபி எடுத்த விவகாரம் – வடகொரிய வீரர்களுக்கு விரைவில் தண்டனையா?


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.