Breaking News LIVE: செயற்கைக் கோள் நடைமுறை அடிப்படையிலான சுங்கக் கட்டண வசூல் - மத்திய அரசு
தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் இன்று நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் லைவ் ப்ளாக்கில் காணலாம்.
நெடுஞ்சாலைப் பிரிவுகளில், ஜிஎன்எஸ்எஸ் எனப்படும் உலகளாவிய போக்குவரத்து செயற்கைக் கோள் நடைமுறை அடிப்படையிலான மின்னணு சுங்கக் கட்டண வசூல் முறை முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது என மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
நெடுஞ்சாலைப் பிரிவுகளில், ஜிஎன்எஸ்எஸ் எனப்படும் உலகளாவிய போக்குவரத்து செயற்கைக் கோள் நடைமுறை அடிப்படையிலான மின்னணு சுங்கக் கட்டண வசூல் முறை முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது என மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
நெடுஞ்சாலைப் பிரிவுகளில், ஜிஎன்எஸ்எஸ் எனப்படும் உலகளாவிய போக்குவரத்து செயற்கைக் கோள் நடைமுறை அடிப்படையிலான மின்னணு சுங்கக் கட்டண வசூல் முறை முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது என மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
2014-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை ரயில்வேயில் 5.02 லட்சம் பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
Breaking News LIVE: ரூ. 100 கோடி அபகரிப்பு வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஒருநாள் கைது போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் விசாரணை நடைபெறுகிறது
கர்நாடக மாநிலம் கே. ஆர். எஸ் அணையில் இருந்து நீர் வெளியேற்ற அளவானது, 41,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசுகளின் கோரிக்கைகளின் அடிப்படையில், மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பு நாடு முழுவதும் 65 மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்களை அமைத்துள்ளது. மேலும் 20 புதிய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்களை அமைக்கவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப இணையமைச்சர் ஜிதின் தெரிவித்தார்
சென்னை – பெங்களூரு விரைவுச் சாலைப் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முழுமையாக முடிக்கப்படுமென, மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
Breaking News LIVE: இரவு 10 மணிவரை கோவை, நீலகிரி ஆகிய 2 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ் புதல்வன் திட்டத்திற்கான பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. தமிழ் புதல்வன் திட்டத்தில் தகுதியுள்ள மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Breaking News LIVE: அதிமுக முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கருக்கு, மேலும் ஒரு நாள் போலீஸ் காவல் விசாரணைக்கு கரூர் குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணை தனது முழு கொள்ளளவான 120.80 அடியை முழுமையாக எட்டியது. இதனால் கிருஷ்ண ராஜ சாகர் அணைக்கு வரும் தண்ணீர் உபரி நீராக தமிழகத்துக்கு வரும் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது.
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மேற்கு வங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களை தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அரசைப் பொதுவாக நடத்துங்கள். இன்னமும் தோற்கடித்தவர்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம். அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப்பட்டுப் போவீர்கள் என அறிவுறுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து துறைகளுக்கும் நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுகிறது மத்திய அரசு என அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணமாக ஒரு பைசா கூட சிறப்பு நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யவில்லை.
₹9 கோடி மதிப்பில் Ferrari காரை வாங்கிய நடிகர் அஜித் குமார்!
“சாதிவாரி கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசே நடத்த வேண்டும்” : வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் மனு அளித்த பின் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி
நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு!
“இனிமே உங்க வீடு, வீட்டு மனை சட்டப்பூர்வமா உங்களுக்கு சொந்தம்” சென்னை நீலாங்கரையில் சுமார் 2,000 குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்வில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சென்னை டவுட்டன் அருகே மாநகர பேருந்தின் மேற்கூரை மீது ஏறி, படிகளில் தொங்கி, புத்தகப்பையை தூக்கி எறிந்து ரகளை செய்த பள்ளி மாணவர்கள்! இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சிகளை வைத்து வேப்பேரி போக்குவரத்து போலீசார் விசாரணை
Breaking News LIVE: நேபாள விமான விபத்து - விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்த சோகம்!
நேபாளத்தில் 19 பயணிகளுடன் பயணித்த சிறிய ரக விமானம் விபத்திற்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் 19 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல். ஓடுபாதையில் வழுக்கிச் சென்று விபத்து ஏற்பட்டதில் 5 பேர் பலியானதாக தகவல்
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு எந்தத் திட்டமும் அறிவிக்கவில்லை என்னும் குற்றச்சாட்டுடன் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்! கையில் பதாகைகளை ஏந்தி ஒன்றிய அரசுக்கு எதிராக தொடர்ந்து முழக்கமிட்டனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு
கர்நாடக அணைகளில் நீர்திறப்பு குறைப்பால், காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து, வினாடிக்கு 70,000 கன அடியிலிருந்து 42,000 கன அடியாக குறைந்துள்ளது. தொடரும் வெள்ளப் பெருக்கால், ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் 9-வது நாளாக தடை நீடிக்கிறது.
பட்ஜெட்டில் பாரபட்சம் : எதிர்க்கட்சிகள் முழக்கம்
2023-2024 பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
கடந்த ஜூலை 5-ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் வைரமணி என்பவரை திருநெல்வேலியில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்
நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை ஒட்டி, வடசென்னை தெற்கு மாவட்ட சூர்யா தலைமை நற்பணி இயக்கம் சார்பாக அயனாவரம் முகப்பேர் அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டன. தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அணிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக் கோட்டையில் நடைபெற்று வரும் 2ம் கட்ட அகழாய்வில் சூது பவள மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மணியில் துளையிடத் தொடங்கி முழுமை அடையாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டிருப்பது காணப்படுகிறது. முழுமையானதாகவும், முழுமை பெறாத நிலையிலும் கிடைத்துள்ள இந்த மணிகள், பொற்பனைக்கோட்டையில் மணிகள் செய்வதற்கான தொழிற்கூடம் இருந்ததற்கான சான்றாக விளங்குகிறது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் 8 செ.மீ. மழை பதிவு. அதற்கு அடுத்ததாக உதகை அருகே உள்ள கிளண்மார்கனில் 5.6 செ.மீ மழையும், குந்தா பகுதியில் 5 செ.மீ, எமரால்டில் 3.8 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹480 குறைந்து ₹51,920-க்கும், ஒரு கிராம் ₹6,490-க்கும் விற்பனை.
2024ம் ஆண்டு தமிழ்நாட்டில் நாய் கடி ரேபிஸ் நோய் தொற்றால் 2,42,782 பேர் பாதிக்கப்பட்டு, 22 பேர் உயிரிழந்துள்ளதாக பொது சுகாதாரத் துறை தகவல்; 2024ம் ஆண்டு பாம்பு கடியால் 7,310 நபர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் பொது சுகாதாரத்துறை தகவல்
சென்னை: ஆடி மாதத்தை முன்னிட்டு, கோயம்பேடு பூ சந்தையில் பூக்களின் விலை அதிகரிப்பு..
ரோஜா பூ ரூ.170
செண்டுமல்லி ரூ.50
சாமந்தி பூ ரூ.190
சம்பங்கி பூ ரூ.80
கனகாம்பரம் ரூ.750
மல்லி ரூ.450
முல்லை ரூ.250
பன்னீர் ரோஜா ரூ.100
சாக்லேட் ரோஜா ரூ.100
ஆந்திர மாநிலத்தின் தேவைகளை அறிந்து பட்ஜெட்டில் அறிவிப்புகள் - பிரதமருக்கு நன்றி தெரிவித்த சந்திரபாபு நாயுடு
ஆவடி பயிற்சி மையத்தில் காளிதாஸ் என்ற வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கன்னியாகுமரி கடலில் நீர் மட்டம் தாழ்வாக உள்ளதால் விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் அருளை தனியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தும் போலீசார். இரண்டாவது முறையாக போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் அருளை இன்று அதிகாலை பெரம்பூர், புழல் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். கொலைக்கான சதித் திட்டம் தீட்டிய இடங்களுக்கும் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மேடவாக்கம் நெடுஞ்சாலையில் வாணுவம்பேட்டைக்கும் மேடவாக்கம் கூட்ரோடுக்கும் இடையே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதை ஒட்டி, அப்பகுதியில் மாநகர் பேருந்து போக்குவரத்தில் மாற்றங்களை அறிவித்துள்ளது MTC இந்த மாற்றங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன
பட்ஜெட்டில் இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து, இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் இன்று டெல்லியில் போராட்டம் நடத்தவுள்ளனர்.
பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 85.06 அடியாக உயர்ந்துள்ளது.
இந்தியா கூட்டணி ஆளும் மாநிலங்களுக்கு போதியளவு நிதி ஒதுக்காததை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
Background
- 2024-2025ம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நிர்மலா சீதாராமன் மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.
- மத்திய பட்ஜெட்டில் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு அதிகளவு நிதி திட்டங்கள் ஒதுக்கீடு
- மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் புதிய வருமான வரி முறையில் மாற்றங்கள் அறிவிப்பு
- ஆண்டு வருமானம் 7.75 லட்சம் ரூபாய் வரை இருப்பவர்களுக்கு வரி விலக்கு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் இறக்குமதி வரி குறைப்பு – மத்திய பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு
- தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 6 சதவீதம் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து தங்கம் விலை அதிரடி குறைவு
- மத்திய பட்ஜெட் அறிவிப்பைத் தொடர்ந்து நாட்டில் செல்போன் விலை குறைகிறது
- இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க ரூபாய் 2 லட்சம் கோடி 5 ஆண்டுகளில் ஒதுக்கப்படும்
- மத்திய பட்ஜெட்டி உலகின் 3வது நாடாக இந்தியாவை நிலைநிறுத்த உதவும் – பிரதமர் மோடி பெருமிதம்
- மத்திய பட்ஜெட் பா.ஜ.க. கூட்டணி கட்சிகளை திருப்திப்படுத்தும் பட்ஜெட் – ராகுல் காந்தி விமர்சனம்
- மத்திய பட்ஜெட்டில் பா.ஜ.க. ஆளாத மாநிலங்களுக்கு பாரபட்சம் – இந்தியா கூட்டணி இன்று ஆர்ப்பாட்டம்
- மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்த சிறப்புத் திட்டமும் இல்லை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
- டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் காங்கிரஸ் மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கமாட்டார்கள்
- நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நடத்த முகாந்திரம் இல்லை – உச்சநீதிமன்றம்
- மகளிர் ஆசிய கோப்பை அரையிறுதி சுற்றிற்கு முன்னேறியது இந்தியா
- - - - - - - - - Advertisement - - - - - - - - -