Breaking News LIVE : செல்வப்பெருந்தகை பதவியை நீக்க வேண்டும்: ராகுலுக்கு பகுஜன் சமாஜ் கடிதம்.!
Breaking News LIVE 19 Sep: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.
Breaking News LIVE : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு இருப்பதாக கூறி, அவர் பதவி மற்றும் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் கடிதம் எழுதியுள்ளார்.
துரைப்பாக்கத்தில் கொலை செய்யப்பட்டது வெள்ளையம்மாள் என்ற தீபா என போலீசார் விசாரணையில் தகவல். இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கையை சேர்ந்த மணிகண்டன் என்பரை கைது செய்து போலீசார் விசாரணை
புதுப்பேட்டை ரோடு பகுதியில் மனைவியை கத்தியால் குத்திய கணவன்! "மனைவிக்கு தகாத உறவு இருந்ததால் கத்தியால் குத்தினேன். ஒரு தலை பட்சமாக திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் செயல்பட்டார்கள்” என வீடியோ பதிவு செய்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது
Gold Rate : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.54,600க்கு விற்பனை!!
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 31.82% நீர் இருப்பு உள்ளது.
Background
- 28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை
- முன்னாள் அமைச்சர் சுந்தரம் உடலுக்கு மீஞ்சூரில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி
- சென்னை மாநகராட்சி பணிகளில் டெண்டர் ஊழல், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு
- யாராக இருந்தாலும் பெரியாரை தாண்டி அரசியல் செய்ய முடியாது - வ்ஜய்க்கு வாழ்த்துகள் சொன்ன அமச்சர் உதயநிதி ஸ்டாலின்
- பாம்பன் மீனவர்கள் 35 பேருக்கு தலா ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்த இலங்கை நீதிமன்றம் - தருவக்குளம் மீனவர்கள் இலங்கை நீதிமன்ற வாயிலில் தர்ணா
- ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்டர் குறித்து கோடாட்சியர் விசாரணை - உடல் இன்று உடற்கூறாய்வு செய்யப்படுகிறது
- ஒரே நாடு ஒரே தேர்தலால் சட்டப்பேரவகளின் பதவிக்காலம் குறையும் - அடிப்படை அறியாத பிரதமர் என எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்
- ஜம்மு&காஷ்மீர் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு - 61% வாக்குகள் பதிவாகின
- கடந்த ஆட்சியில் திருப்பதி கோயில் லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு
- கேரளாவில் சைக்கிளில் சென்ற வாலிபர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற லாரியை காரில் விரட்டிப் பிடித்த நடிகை நவ்யா நாயர்
- மத்திய பிரதேசத்தில் நடைபெற சாலை விபத்தில் 3 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழப்பு
- லெபனானில் பேஜர்களை தொடர்ந்து அடுத்தடுத்து வெடித்து சிதறிய வாக்கி-டாக்கீஸ் - 14 பேர் உயிரிழப்பு 300 பேர் காயம்
- ரஷ்ய ஆயுத கிடங்கு மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்: ஏவுகணைகள், வெடிகுண்டுகள் அழிப்பு
- 27 நாடுகளில் பரவிய புதிய வகை கொரோனா - புதிய அலை உருவாகலாம் என எச்சரிக்கை
- வறட்சியின் கோர முகம் - ஒரே நேரத்தில் 200 யானகளை கொல்ல ஜிம்பாப்வே அரசு முடிவு
- இந்தியா -வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் இன்று தொடக்கம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -