Breaking News LIVE 10th OCT 2024: ரத்தன் டாடாவின் இறுதிச்சடங்கில் அரசு சார்பில் பங்கேற்கிறார் அமித்ஷா

Breaking LIVE News: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

சுகுமாறன் Last Updated: 10 Oct 2024 10:45 AM
டாடாவின் உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக மும்பை NCPA வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது..

மறைந்த தொழிலதிபர் டாடாவின் உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக மும்பை NCPA வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது..

ரத்தன் டாட்டா மறைவுக்கு மருத்துவர் இராமதாசு  இரங்கல்



உலகப்புகழ் பெற்ற தொழில் வணிக நிறுவனமான டாட்டா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர்  ரத்தன் டாட்டா அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.  இந்தியாவின் தொழில் வணிக வரலாற்றையும், தாராளமயமாக்கல் வரலாற்றையும் ரத்தன் டாட்டா அவர்களை விலக்கி விட்டு எழுத முடியாது. இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில் 1992-ஆம் ஆண்டில்  டாட்டா குழுமத்தின்  தலைவர் பொறுப்பை ஏற்ற ரத்தன் டாட்டா  தமது குழுமத்தை  உலகம் முழுவதும் பரப்பினார். கல்வி, சுகாதாரம், துப்புறவு உள்ளிட்டவற்றுக்காக வாரி வழங்கியவர். முக்கியத் துறைகளில் இந்தியாவின் கொள்கைகளை வகுக்க துணை நின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்திய ரத்தன் டாட்டா வரலாற்றில் என்றென்றும்  நிலைத்து நிற்பார்.


 

ரத்தன் டாடாவின் இறுதிச்சடங்கில் அரசு சார்பில் பங்கேற்கிறார் அமித்ஷா

மும்பையில் காலமான தொழிலதிபர் ரத்தன் டாடாவின் இறுதிச்சடங்கில் மத்திய அரசு சார்பில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பார் என அறிவிப்பு

தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் இன்று முதல் அக்டோபர் பதினான்காம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. பன்னிரெண்டு செ.மீ முதல் 20 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கணிப்பு 

சாம்சங் தொழிலாளர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது : துணை முதலமைச்சர் விளக்கம்

“சாம்சங் தொழிலாளர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சி சார்ந்த தொழிற்சங்கம் அமைக்க ஆலை நிர்வாகம் அனுமதிக்கவில்லை. தொடர்ந்து பேசி வருகிறோம்” -துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

ரத்தன் டாடா என் ஹீரோ : உருக்கமாக பதிவிட்ட கமல்ஹாசன்

ரத்தன் டாடா உடலுக்கு அஞ்சலி செலுத்த குவியும் பொதுமக்கள்

மும்பையில் இன்று பொதுமக்கள் அஞ்சலிக்காக ரத்தன் டாடா காலை 10 மணி முதல் வைக்கப்பட உள்ளது. இதையடுத்து, காலை முதலே அஞ்சலி செலுத்த பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.

Background


  • உலகின் மிகப்பெரிய தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார் – அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்கள், மக்கள் இரங்கல்

  • ரத்தன் டாடா மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்

  • ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படும் – மகாராஷ்ட்ரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு

  • ரத்தன் டாடா உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று மும்பையில் வைக்கப்படுகிறது – காலை முதல் திரளும் பொதுமக்கள்

  • ஹரியானா சட்டமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு – காங்கிரஸ் புகார்

  • அமெரிக்காவிடம் இருந்து 3.1 பில்லியன் டாலருக்கு ட்ரோன்கள் வாங்க ஒப்புதல்

  • தமிழ்நாட்டில் கோவை, பெரம்பலூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை – இன்றும் மழை தொடர வாய்ப்பு

  • திருநெல்வேலியில் கொட்டித் தீர்த்த கனமழை; அரசு மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீரால் நோயாளிகள் அவதி

  • தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு; அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடர வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

  • தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் கைது

  • எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 21 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை

  • திருப்பூரில் நடைபெற்ற வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்வு

  • சென்னை திருவொற்றியூரில் கிராம தேர்தலை நடத்தக் கோரியதால் 20 குடும்பங்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு

  • திண்டுக்கல் மாவட்டத்தில் மயானத்திற்குச் செல்லும் பாதை அடைப்பு – உடலை அடக்கம் செய்ய முடியாததால் உறவினர்கள் சாலைமறியல்

  • பெரியார் பிறக்காமல் இருந்திருந்தால் சீர்த்திருத்தம் பிறந்திருக்காது; பெண்கள் கொள்கைக்காக பிரச்சாரம் செய்ய வேண்டும் – அமைச்சர் பொன்முடி

  • தி.மு.க. ஆட்சியில் எதிர்க்கட்சியினர் மீது கொலை வெறித் தாக்குதல் –எடப்பாடி பழனிசாமி

  • கொல்கத்தாவில் மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு மருத்துவர்கள் உண்ணாவிரதம் – நேரில் சந்தித்த ஆளுநர்

  • தங்கக்கடத்தல் தொடர்பான கருத்து; கேரள முதலமைச்சர் – கேரள ஆளுநர் இடையே கருத்து மோதல்

  • காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கடத்திக் கொல்லப்பட்ட ராணுவ வீரரின் உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு – ராணுவ மரியாதையுடன் அடக்கம்

  • சாம்சங் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

  • உரிமைக்காக போராடும் சாம்சங் தொழிலாளர்களை ஒடுக்குவது நியாயமற்றது – இயக்குனர் பா.ரஞ்சித்

  •  


 


 


 


 


 


 


 


 


 


 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.